Sunday 21 October 2012

மாறுதுமனம் அழிவையணிந்தே !



சுத்தமான மென்காற்று
பளிச்செனப் பட்டாடை
பளிங்குக்கல்லால்ஆன தரை
பல் தேய்க்கவும் பன்னீர்
அறுசுவையாய் உணவு
தேவலோகக் கனவுவாழ்வு!

எண்ணத்தின்தேடலென்றும்
 ஏணிப்படிகளை மட்டுமே
நம்மால் முடியுமென்றெண்ணி
அதனை உருவாக்கும் திறனை
வளர்த்திட நாம் மறுக்கிறோம்.

ஒரு சிறு உயிரணுவும்
உருவாக்கும் சக்தியில்லை
கல் சுமந்துழைக்கும்ஏழை
உழைப்பாளியினுழைப்பை
விலை பேசி நிற்கிறோம்!

உணவே நஞசான போதும்
உழுதுழைக்கும் நிலத்தினை
உரிமையாக்க துடிக்கிறோம்.
அதில்மாடிகளாய் கல்லறைகள்!

சேற்றை மிதிக்கும்நம்கால்
காக்கசெருப்பைச் செய்தவனின்
சேம நலம் எண்ணத்திலில்லை!

எதனையும் விலை கொடுத்து
வாங்கி உழைப்பை விட்டு..
இன்று உழைக்கும் வர்க்கமும்
எந்திரமாகவேத் தெரிகிறதோ ?

மாறுதுமனம் அழிவையணிந்தே
தேடுதுதினம் அன்பை மறந்தே
ஓடுதுகால்கள் தீமையணிந்தே
திரும்புமாகாலம் நன்மைநாடி?

23 comments:

  1. மாறுதுமனம் அழிவையணிந்தே
    தேடுதுதினம் அன்பை மறந்தே
    ஓடுதுகால்கள் தீமையணிந்தே
    திரும்புமாகாலம் நன்மைநாடி?
    பொது நலம் பிறந்தால் எல்லாம் மாறும்..

    ReplyDelete
  2. இனியும் திரும்புமா சந்தேகம்தான்...
    அருமையாக சொன்னீர்கள்...சசி கலா.
    நிலமிருந்தும் உழுபவர்கள் சொற்பமே இங்கு..
    அப்படியே உழுதாலும் எழுந்திருக்க முடியா வருமானம். யார் தான் முன் வருவார் மீண்டும் இதை தொடர. இருக்கும் அந்த குறைந்த நிலமோ இப்போது விளம்பரத்தின் மூலம் ஏகப்பட்ட வீட்டு மனைகளாய் காட்சி அளிக்கின்றன.. ஆம் விவசாயத்தை அழித்தபடி கம்பீரமாய் காட்சி அளிக்கின்றன...

    மாறவேண்டும் இந்த அவலநிலை.. அப்போது தன்னிறைவை பெரும் நம் நாடும்.. என்ன வளம் இல்லை நம் நாட்டில் என்றார் நம்மவர்... வளமான எண்ணம் தான் இல்லை நம்மக்களின் உள்ளத்தில்.
    இதனை நாட்டை ஆள்வோர்கள் சிந்தித்தால் சரியாகும்... அப்போது தான் நம் நாடு வல்லரசாக உருவாகும்... பாராட்டுக்கள்... தங்களின் வருங்காலத்தின் சிந்தனையை பார்க்கும்போது...

    ReplyDelete
  3. எதனையும் விலை கொடுத்து
    வாங்கி உழைப்பை விட்டு..
    இன்று உழைக்கும் வர்க்கமும்
    எந்திரமாகவேத் தெரிகிறதோ ?


    ரசித்தேன்

    ReplyDelete
  4. நல்ல கவிதை முடிவில் நல்ல கேள்வியுடன்...

    வாழ்த்துக்கள்...

    நன்றி...
    tm2

    ReplyDelete
  5. மாற்றமும் மாறும் நாள் வரும்

    ReplyDelete
  6. என் நண்பர் ஒருவர் எந்த காய் கடையிலும் (குறிப்பாகத் தள்ளு வண்டிகளில் வருபவை) பேரம் பேச மாட்டார். காரணம் கேட்டால் ’அவர்கள் ஏழைகள் அவர்களுக்கு அந்த ஒரிரு ரூபாய்கள் மிக முக்கியம்; நமக்கு அப்படியில்லை, மேலும் நாம் பெரிய கடைகளில் அட்டையில் எழுதியதை அப்படியே கொடுத்து விட்டு வருவோம்’ என்று கூறுவார்.

    நாம் அனைவரும் உழைப்பாளிகளின் உழைப்பை ஒரு பொருளாகவே பார்த்து அதற்கு விலை பேசுகிறோம். அவர்களின் மனக்கிலேசத்தை நினைக்க மற்ந்து/மறுத்து விடுகிறோம்.

    நல்ல கவிதை! பாராட்டுகள்.

    ReplyDelete
  7. அருமையான, சிந்தனை விதையைத் தூவிய கவிதை.

    ReplyDelete
  8. நல்ல கேள்விகள்! நன்றி!

    ReplyDelete
  9. பணத்தால் எல்லாம் வாங்க முடியும்ன்னு முக்கால்வாசி பேர் நினைக்குறங்கப்பா.

    ReplyDelete
    Replies
    1. பணம் இருந்தால் எதுவும் வாங்க வேண்டாம் எல்லாம் நம்பளை தேடி ஆட்டோமெடிக்காக வரும் என்பது மறுக்க முடியாத உண்மை

      Delete
  10. //உணவே நஞசான போதும்
    உழுதுழைக்கும் நிலத்தினை
    உரிமையாக்க துடிக்கிறோம்.
    அதில்மாடிகளாய் கல்லறைகள்! //

    ஊரெங்கும் விளநிலங்களில் ரியல் எஸ்ட்டேட்டுகள் விதைத்த அபார்ட்மெண்டுகளைப் பற்றிய அருமையான வரிகள்!

    ReplyDelete
  11. உறைக்கும் வரிகள்
    ரசித்தேன்

    ReplyDelete
  12. நல்ல வரிகள்தான். நல்லாயிருந்துச்சு சசி.

    ReplyDelete
  13. மாற்றமும் வேண்டும்!
    மாற்றவும் வேண்டும் தான் சசிகலா.
    கவிதை அருமை.

    ReplyDelete
  14. thirumpum sako....

    arumai kavi!

    ReplyDelete
  15. //உணவே நஞசான போதும்
    உழுதுழைக்கும் நிலத்தினை
    உரிமையாக்க துடிக்கிறோம்.
    அதில்மாடிகளாய் கல்லறைகள்!//

    வேதனை தரும் விஷயம்.....

    சிறப்பான கவிதை.

    ReplyDelete
  16. //மாறுதுமனம் அழிவையணிந்தே
    தேடுதுதினம் அன்பை மறந்தே
    ஓடுதுகால்கள் தீமையணிந்தே
    திரும்புமாகாலம் நன்மைநாடி?//

    - கஷ்டம்தான் சகோ. எந்திரம் மனிதத்தை தின்று விட்டது. மனிதம் எந்திரக் காதலில் மரத்துப் போய்விட்டது. அருமையான கவிதை.

    ReplyDelete
  17. ''...மாறுதுமனம் அழிவையணிந்தே
    தேடுதுதினம் அன்பை மறந்தே
    ஓடுதுகால்கள் தீமையணிந்தே
    திரும்புமாகாலம் நன்மைநாடி..''

    பிடித்த வரிகள்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. அருமை
    உழைப்பவனை மறந்து ஓடுகிறோம் மாறவேண்டும்\\
    நம்கால்
    காக்கசெருப்பைச் செய்தவனின்
    சேம நலம் எண்ணத்திலில்லை!

    ReplyDelete
  19. இனிய கவிதை
    மிக அற்புதமாக முடித்திருக்கறீர்கள்.
    அருமை

    ReplyDelete
  20. காலம் திரும்புவதை தீர்மானிப்பது நாமாகத்தானே இருக்க முடியும்?

    ReplyDelete