Thursday, 18 October 2012

டவுட் சுந்தரியும் அலமுவும் !


அலமு : சசி என்னடிம்மா நேத்து அதிசயமா நீயும் உன் புருசனுமா சேர்ந்து சிரிப்பு சத்தம் கேட்டுதே.

சசி : ஆமா மாமி நேத்து மஞ்சு பாஷினி அக்கா பேசினாங்க மாமி. அவங்களுக்கு புலவர் ஐயா பதிவில் கருத்து போட முடியவில்லையாம்.

என்னனு கேட்டுட்டு இருந்தாங்க அப்படி ஆரம்பித்தது கலாட்டா.

அலமு : யாரு நல்லா பாடுவாங்கனு சொல்லியிருக்கியே அவங்களா ?

சசி : ஆமா ஆமா மாமி இனிமையான குரலாலே எனை கவர்ந்த அக்கா தான்.

அலமு : அப்படி என்ன தான் சொன்னாங்க நீங்க சிரிக்கிற அளவுக்கு.

சசி : ஐயாவின் ஐடி கொடுத்தேன் பிறகு நம்பரும் கொடுத்து பேசுங்க அக்கா என்றேன். இரு சசி இப்பவே பேசலாம் என்று எனக்கு கேட்கும் படியாக இருவரும் பேசினாங்க ஆனால் என் குரலை அவர்களால் கேட்க முடியாது.

அலமு : அப்படின்னா நீ ஒட்டு கேட்ட அப்படி சொல்லு.

சசி : மாமி இப்படி சொன்னா எனக்கு கெட்ட கெட்ட கோபமா வரும் நான் சொல்ல மாட்டேன் போங்க.  அக்காவே இரு சசி பேசலாம்ன சொல்லவே தான் இருந்தேன்.

அலமு : சரிடிம்மா ஏன் இப்படி கோபம் வருது சும்மா தான்டிமா சொன்னேன்.

சசி :  சரி சரி புலவர் ஐயா போன் எடுத்தாங்களா.  அக்கா ஐயா நான் மஞ்சு பேசுறேன். உங்க கீழ் வீட்ல குடித்தனம் இருந்தேனே அந்த மஞ்சு எப்படி இருக்கிங்க இப்படி ஆரம்பிச்சாங்களா .

அலமு : அப்படியா அவங்க வெளி நாட்ல இருப்பதா சொன்னியேடிம்மா.

சசி : ஆமா மாமி நானும் உண்மையாவே அவங்க புலவர் ஐயா வீட்ல தான் முன்னாடி இருந்தாங்களோனு நினைச்சேன். பிறகு தான் தெரிந்தது எல்லாம் கலாப்புனு.

அலமு : அடடே அவங்க பெரிய ஆள் தான் போல சொல்லு சொல்லு ஏன்டிம்மா புலவர் ஐயாவுக்கு 80 வயதுன்னு சொன்னியே இப்படியா கலாப்பிங்க 2 பேரும் . வேற யாரும் கிடைக்கலியாடி உங்களுக்கு .

சசி : மாமி ஏன் அவசரம் அடுத்து ஒருத்தரும் நேத்து மாட்டினாங்க.இருங்க  சொல்றேன்.

அலமு : அதானா நேத்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய முறைச்சி பாக்குற மாதிரி குடும்பமே கம்பூட்டர் முன்னாடி உக்கார்ந்துண்டு கெக்ககேன்னு சிரிச்சிட்டு இருந்திங்க.

சசி : ஆமா மாமி புலவர் ஐயா யாரும்மா எனக்கு நினைவில்லையேனு சொன்னாங்களா ?  உடனே அக்கா சரிங்க ஐயா உங்க வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வரேன்னு சொன்னாங்க . ஐயா யாரும்மா தெரியலையேனு சொன்னாங்க. அக்கா பிறகு தான் மஞ்சுபாஷினினு சொன்னாங்க ஐயா உடனே அப்படியாம்மான சிரிச்சாங்க .  எங்கம்மா இருக்க இப்படி நார்மல் உரையாடல் தொடர்ந்தது மாமி. அக்கா பதிவில் மட்டுமில்லை போன்லயும் விரிவா விளக்கமா எல்லாம் விசாரிச்சி பதிவர் சந்திப்பு உட்பட ஐயாவின் பேரக்குழந்தைகள் மகள்கள் இப்படி எல்லாரை பற்றியும் பேசி பிறகு ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லிட்டு வச்சாங்க. ஐயாவின் பதிவர் சந்திப்பு பற்றிய உரை நெகிழ வைத்தது . உண்ணும் உணவோ மருந்து மாயமோ எதுவுமே என்னை உற்சாகமா வாழ வைக்கள பதிவுலக நண்பர்களின் அன்பும் பாசமும் தான்னு சொன்னதும் நெகிழ்ந்து போனோம்.

அலமு :  ஆமா சொல்லி இருக்க இல்ல அவங்க எந்த பதிவுக்கும் இரண்டு வரில கருத்து சொன்னதில்லைனு .

சசி : ஆமா மாமி அதோட விடல அவங்க. சசி அடுத்து ராஜியோட பேசலாமானு கேட்டாங்களா சரிக்கானு சொன்னேன்.

அலமு : போச்சி அவங்களையும் விடலியா நீங்க. ஆமா அவங்க உங்களுக்கு மேல கிண்டல் பேர்வழியாச்சே.

சசி : அதான் மாமி இல்ல அக்காவை யாரால ஜெயிக்க முடியும் அவங்களையும் கவுத்துட்டோம்ல.

அலமு : அப்படியா ?

சசி : ஆமா மாமி ராஜி அக்கா நம்பர்க்கு டயல் பண்ணாங்களா  அவங்களும் எடுத்து ஹலோனு சொன்னாங்க உடனே அக்கா நாங்க சன் டிவில இருந்து பேசுறோம் உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்கனு சொன்னாங்க அவ்ளோதான் அந்த பக்கம் கட் ஆகிப்போச்சி மாமி.

அலமு : இவ்ளோ பயந்தாங்கோலியாடி அவங்க ?

சசி : ஆமா மாமி அதான் எங்க வீட்ல எல்லாம் ஒரே சிரிப்பு. மறுபடி அக்கா விடல நம்பர் போட்டாங்க அவங்களும் எடுத்தாங்க என்ன ராஜி இப்படி கட் பண்ணிட்டிங்கனு சாதாரணமா பேசினாங்களா. பிறகு ராஜி அக்கா நீங்க யாருங்க என்று கேட்டாங்க. மஞ்சு அக்கா பதிவர் சந்திப்புல ஊதா கலர்ல புடவை கட்டிட்டு ரோட்லயே ஐஸ் சாப்டது யாரும்மானு கேட்டாங்களா . ராஜி அக்கா யாரோ தெரியள நீங்க யாரு சொல்லுங்க உங்களுக்கு என் நம்பர் யார் கொடுத்தது சொல்லுங்க நாளைக்கு இருக்குது அவங்களுக்குனு சத்தமா பேசினாங்களா.


மஞ்சு அக்கா விடாம ராஜி உன்னோட பதிவர் சந்திப்பு பதிவு போட்டியே அத படிச்சிட்டு முருகனும் ஔவைபாட்டியும் இருந்திருந்தா அம்மாடி எங்கள விட்டுடிம்மானு அழுதிருப்பாங்கனு சொல்ல ஒரே சிரிப்பு.

ராஜி அக்கா மயங்கவேயில்ல கணேஷ் அண்ணா கொடுத்தாங்களானு கேட்டாங்க. மஞ்சு அக்கா அவர் இல்ல பா அவரும் பதிவர் சந்திப்ப பற்றி சொல்லும் போது எனக்கு மிஸ் பண்ணிட்டோமேனு இருந்ததுனு சொன்னாங்க.
டவுட் சுந்தரி அவரில்ல. ஆமா வா போனு சொல்றேனா தப்பிலையேனு கேட்க அவங்க எப்படிவேனா சொல்லுங்க சொல்ல அக்கா எப்படி பீட்ரூட் கேரட் அப்படி அழைக்காவானு கேட்க  என் பசங்களுக்கும் சிரிப்பு.


ஆமா ராஜி மதுமதிய ஓவரா கிண்டல் பண்ணி எழுதியிருந்த அதுவும் நல்லாயிருந்தது சொல்லவும் ராஜி அக்கா மதுமதி கொடுத்தாங்களானு கேட்டாங்க. மஞ்சு அக்கா இல்லம்மானு சொல்ல ஏன் ராஜி அதோட விட்டியா என் தம்பி மகேந்திரனையும் விஜயகாநத் மாதிரி வந்தாருன்னு கலாச்சிட்டியே நல்ல எழுத்து நடம்மானு சொன்னதும் ராஜி அக்கா மஞ்சு பாஹினி அக்காவானு அப்புறம் நார்மல் பேச்சு ஆரம்பிச்சது. மஞ்சு அக்கா பேசிட்டே இருக்கும் போதே லைட் போட மறந்துட்டேன் வைச்சிடவா கேட்டாங்க. ராஜி அக்கா மண்டைல லைட் பிரைட்டா இருந்தாலும் இப்படியா வீட்ல லைட் போடாம இருப்பிங்கனு ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.


அலமு :  நல்லா தான் கலாய்ச்சியிருக்கிங்க அதான் நேத்தெல்லாம் ஒரே சிரிப்பு மயமா இருந்ததா?

ஆமா மாமி ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு என்றென்றும் ஐயாவின் ஆசி கிடைக்க வேண்டுமுனு ஆசிர்வாதம் வாங்கனும் வாங்க வாங்க போகலாம்.

25 comments:

  1. ஆஹா..அருமையான விரிவான அலசல்...
    அலைகடலின் ஓசையை விட சற்று பலமாகவே...
    பெண்கள் இருவர் சேர்ந்தால் கேட்கவும் வேணுமா...
    சத்தத்திற்கே தாங்கமுடியவில்லையாம் சத்தம்... இரு காதுகளையும் பொத்திக்கொண்டது என்றால் பாருங்களேன். இதை நான் சொல்லவில்லை, கண்டவர்கள் என்றால் பார்த்தவர்கள் சொன்னதை சொன்னேன் அவ்வளவுதான்...

    எப்படியோ ஒருவழியா ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்துருங்க.. பேச்சு பேச்சா இருந்தாலும் செயல்ல சரியாத்தான் இருக்கீங்க.. பாராட்டுக்கள் சசி கலா மற்றும் குழுவினருக்கு(டவுட் சுந்தரி)...

    ReplyDelete
  2. கலகலப்பா ரசிச்சு படிக்கிற அளவுக்கு எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்புறம்... ராஜி கிட்ட சசி உதை வாங்கினதைச் சொல்லவே இல்லையே...! மஞ்ச்சூ... நல்லவேளை என்னை வம்பில மாட்டி விடலை. தப்பிச்சேன்டா ஸாமி..! நன்றி தாயே..! அன்புக்குரிய புலவர் ஐயாவுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஹா...ஹா... ரசிக்க வைத்த உரையாடல்...

    புலவர் ஐயாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    நன்றி...tm4

    ReplyDelete
  5. புலவர் ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. புலவர் ஐயாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :-)))

    ReplyDelete
  7. நல்லாக் கலாய்ச்சிருக்கீங்க! ஹா,ஹா

    ReplyDelete
  8. நல்ல சொல்லியிருக்கிறீங்க.. + கல்லய்ச்சிருக்கிறீங்க
    என் பிறந்த நாள் வாழ்ந்தையும் தெரிவித்துக் கொல்கிறேன் ஐயாவுக்கு

    ReplyDelete
  9. புலவர் ஐயாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. புலவர் அய்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... சகோ நல்ல கலந்துரையாடல்..

    ReplyDelete
  11. ஆஹா ரவுண்டு கட்டி கலாய்ச்சிட்டீங்க போல!

    புலவர் ஐயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கலக்கலா ஒரு பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இப்படியே வாழ்த்து சொன்னா போதுமா ? என்னைக்கு ஐயா பிறந்த நாள் என்று சொல்லவே இல்லையே? நாமும் சேர்ந்து அவரோடு கொண்டாடி ஆசிர்வாத வாங்கி இருக்கலாமே?
    தென்றல் இந்த பக்கம் எப்போது அடிக்கும் ?
    உங்களது அலமு மாமி உரையாடல் மிக நன்றாக உள்ளது.சொல்ல வேண்டிய அனைத்து விஹயமும் சொல்ல இது ஒரு சிறந்த வலி-அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நல்லா கலாய்ச்சுட்டீங்க போங்க!

    ஆனாலும் கடைசில அந்த லைட்டு மேட்டர் செம!

    ReplyDelete
  15. புலவர் ஐயாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
    --
    tm 11

    ReplyDelete
  16. புலவர் ஐயாவிற்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பாவுக்கு....

    மனம் நிறைந்த சந்தோஷம் அப்பாவுடனும், ராஜியுடனும் பேசியது.....

    சசிம்மா.... செல்லக்குட்டி.... நான் இந்தியா வரும்போது கண்டிப்பா உனக்கு இருக்கு கச்சேரி வெல்லக்கட்டி.... :)

    கணேஷா.... உங்களை நான் நேர்ல வந்து கலாய்க்கிறேன்பா...

    மோகன்.... இவ்ளவு நடந்திருக்கான்னு என்னை கேட்காதீங்கப்பா. :) சசியை கேளுங்க.... நான் ஒன்னுமே சொல்லலப்பா :)

    ReplyDelete
  18. புலவர் ஐயாவிற்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ippovellam ava kavithaiyavida vajanam nanna ezhuthara pesa ezhuththu nada parunko sirantha vajana karththava varuva parunko ...

    ReplyDelete
  20. புலவர் ஐயாவிற்கு நிறைவான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. ஒருத்தர் பாக்கி இல்லமா ஓட்டி எடுத்ருகீங்க போல :-)

    ReplyDelete