Thursday 11 October 2012

காதல் !



மழை கொடுக்கும் மேகத்திலும்
மறைந்தோடும் விண்மீனிலும்
மணம் தேடி வரும் வண்டிலும்
வண்ணமணிந்த அந்தி வானிலும்
வரிசை மாறா தென்னங்கீற்றிலும்
வாசலில் சிரிக்கும் கோலத்திலும்
தாய் நோக்கும் கன்றுக்குட்டியிலும்
கொட்டுகின்ற மலைஅருவியிலும்
கொட்டினும் கூடிவாழும் தேனீயிலும்
தேன் சுமந்து தானுதிரும் மலரிலும்
தேனினும் இனிய மழலையிலும்
உப்பாய் மாறிய அலைகடலிலும்
உதிரம் கொடுத்த உயிர்த்தாயிலும்
தரணியாளும் தங்கத் தமிழிலும்
மயக்கிச் சிரிக்கும் ஓவியத்திலும்
துள்ளியோடும் புள்ளிமானிலும்
தூரத்து ஒளியாம் பசுமையிலும்
சுட்டெரிக்கும் மாயசூரியனிலும்
பட்டுத்தும் பண் பாவையிலும்
வானோடும் வண்ண நிலவிலும்
மண்ணோடும் அழகு ஆற்றிலும்
மனமோடும் எண்ணப் பாட்டிலும்
மலையாடும் மேகக் கூட்டிலும்
மரமாடும் தென்றல் காற்றிலும்
எங்கும் காதல் எதிலும் காதல்
எல்லாமே காதலாய் !

36 comments:

  1. ’எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பது போல் காதல்ர்களுக்கு எல்லாமே காதல் தான் என்பதை நன்றாகக் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எங்கெங்கு காணினும் காதலாய் தங்கள் வருகையும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. காதலைப்பற்றிய கண்ணோட்டம்...
    மேகம் உதிர்க்கும் மழைத்துளிகளில்
    கண் சிமிட்டும் விண்மீனில்
    மகரந்தம் தானறியாது எடுக்கும் வண்டு
    வானவில்லின் அழகு
    தென்றல் தரும் தென்னங்கீற்றில்
    கண்களைக்கவரும் கோலத்தில்
    கன்றுக்குட்டியிடம் காட்டும் பாசத்தில்
    ஜில்லென வீழும் மலையருவி
    தேன் சேகரிக்கும் தேனீ
    மயக்கும் மணம் பரப்பும் மலர்
    மழலை மொழியில் மிழற்றும் கிள்ளை
    ஆர்பரிக்கும் கடல் அலை
    உயிர்ப்பூ உலகுக்கு காட்டும் தாய்மை
    தித்திக்கும் செந்தமிழ்
    அற்புதமான ஓவியம்
    சீதை மயங்கிய புள்ளிமான்
    மனதை சமனாக்கும் பசுமை அழகு
    பளீரென சிரிக்கும் சூரிய ஒளி
    குளிர் தரும் நிலவு
    தூய்மையான ஆற்று நீர்
    எண்ணங்களின் திசை
    அழகிய மலைமேகம்
    தென்றல் தழுவும் காற்று

    இது எல்லாவற்றிலுமே காதல் அன்றி மனிதனும் இல்லை இயற்கையும் இல்லை உலகமே காதலில் தான் கட்டுண்டு இருக்கிறது என்று மிக அற்புதமான வார்த்தைகளை கோர்த்து தந்த கவிதை வரிகள் சிறப்பு சசி...

    அன்புவாழ்த்துகள்பா...

    எப்டியெல்லாம் சிந்திக்குது புள்ள....

    ReplyDelete
    Replies
    1. அக்கா என் மீதான தங்கள் காதலை இதைவிட தெளிவாக யாராலும் கூற முடியாது.
      அக்காவுக்கு நன்றி சொல்லும் பழக்கமில்ல.

      Delete
  3. மிக அருமையான கவிதை... உங்கள் நட்பு அருணா செல்வம் பேட்டி காணவாருங்கள்
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  4. என்னிலும் உன்னிலும்
    எங்கெங்கிலும்
    ஊனிலும் உடலிலும்
    உயிருக்குயிராம் என் அன்னையின்
    இதயத்திலும் நாடி நரம்புகளிலும்
    மண்ணிலும் விண்ணிலும்
    மறந்திடாத பல நெஞ்சத்திலும்
    பார்வெளியிலும் பார்த்தபேர் மனமுருகும்
    கார்முகில் வண்ணக்கண்ணனிலும்
    பார்த்து மயங்கிய மங்கையிலும்
    அரங்கத்தானிடம் சரணடைவார்
    ஆழ்வார் ஓதும் பிரபந்தங்களிலும்

    பந்தங்கள் சொந்தங்கள் அனைத்தும் அவனென‌
    எந்தன் இதயத்தில் என்றும் நிறைந்தவன்
    விந்தன் விமலோன் கண்ணன் அவனைக்
    காதல் செய்தீரோ ?
    காதல் எனின் என்னவெனக்
    களித்தீரோ ? !!!


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான வரிகள் ஐயா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
  5. எங்கும் காதல்...எதிலும் காதல்...
    காற்றே காதல் எல்லோருக்கும் சுவாசமாய்...
    வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் சரிசமமாய்...
    வாழ்த்துக்கள் சசி கலா.. வளருங்கள் மேலும் புகழோடு...

    ReplyDelete
  6. /மஞ்சுபாஷிணி/

    ஏனுங்க்கா..பின்னூட்டத்துல ஒரு பதிவே போட்ட்டுட்டீங்களே..நாலு வரி கருத்து எழுதவே சுட்டுவிரல் வெடவெடங்குது..எவ்ளோ பெரிய பின்னூட்டம்..
    சசிகலாவோட பதிவைட பெரிசா இருக்கே..ஐய்..தென்றலுக்கு வந்து மொத்தம் ரெண்டு பதிவு படிச்சுட்டேன்..தொடர்ந்து உங்கள் பின்னூட்டமழை தொடர்ந்து பொழியட்டும்..வாசகர்கள் அதில் நனையட்டும்..

    ReplyDelete
  7. பரந்து விரிந்த பார்வை
    மனம் தொட்டது
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. /சசிகலா/

    உங்கள் ஸ்டைல் கவிதையிது..சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இயல்பாய் அமைந்து விட்டது என்ன செய்ய.

      Delete
  9. சுப்பு ஐயாவின் கவிதை மிக அழகு....

    ReplyDelete
  10. மதுமதி....

    ஏனுங்க்கா..பின்னூட்டத்துல ஒரு பதிவே போட்ட்டுட்டீங்களே..நாலு வரி கருத்து எழுதவே சுட்டுவிரல் வெடவெடங்குது..எவ்ளோ பெரிய பின்னூட்டம்..
    சசிகலாவோட பதிவைட பெரிசா இருக்கே..ஐய்..தென்றலுக்கு வந்து மொத்தம் ரெண்டு பதிவு படிச்சுட்டேன்..தொடர்ந்து உங்கள் பின்னூட்டமழை தொடர்ந்து பொழியட்டும்..வாசகர்கள் அதில் நனையட்டும்..

    ஆஹா மதுமதி... என்னப்பா இது :)

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா....

    ReplyDelete
  11. அனுபவித்து எழுதி உள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    மஞ்சுபாஷிணி அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. தங்குதடையில்லாமல் சலசலவென்று கவிதை கரைபுரண்டு ஓடுகிறது!

    ReplyDelete
  13. காதல் மனம்
    கவிதையில் தெரிகிறது.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  14. எல்லோரும் அவர்கள் தளத்தில் பதிவு இடுவார்கள் ஆனால் மஞ்சு சுபாஷினியோ மற்றவர்கள் தளத்தில் கருத்தை பதிவாக இட்டு எல்லோர் மனமும் கவர்ந்து செல்கிறார். மஞ்சு சுபாஷினி அவர்களின் பின்னுட்டம் பதிவுலகத்தில் கிடைக்கும் ஆஸ்கர் அவார்டை போன்றது. வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  15. காதல் இல்லையே சாதல்தானுங்க

    மகன் அம்மாமீது வைக்கும் அன்பு காதல்
    கணவன் மனைவி மீது வைக்கும் அன்பு காதல்
    அப்பா குழந்தைகள் மீது வைக்கும் அன்பு காதல்
    மாமியார் மருமகள் மீது வைக்கும் அன்பு காதல்
    தாத்தா பாட்டிக்கள் பேரக் குழந்தைகள் மீது வைக்கும் அன்பு காதல்
    தோழன் தோழி மீது வைக்கும் அன்பு காதல்

    காதல் உணர்வு இல்லாத உடல் பிணத்துக்கு சமம்

    உங்களுக்கோ கவிதை மீது காதல்

    ReplyDelete
  16. மனமோடும் எண்ணப் பாட்டிலும்

    மலையாடும் மேகக் கூட்டிலும்

    மரமாடும் தென்றல் காற்றிலும்//

    எங்கேயும் காதல்! நல்ல கவிதை!

    ReplyDelete
  17. காதல் மேல் ஏன் இத்தனைக் காதல்!

    ReplyDelete
  18. எங்கெங்கும் காதல்... நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  19. ***எங்கும் காதல் எதிலும் காதல்
    எல்லாமே காதலாய் !***

    ஆமாங்க, உண்மைதான்! "காதல் தோல்வி"யில்கூட "காதல்" இருக்கத்தான் செய்யுது! :)

    ReplyDelete
  20. காதல் கவிதை மழை!!!!!!!.......அருமை!..தொடர்ந்து பெய்ய
    வாழ்த்துக்கள் தோழி :)))

    ReplyDelete
  21. தமிழ்மணம் 7 போட்டாச்சு .

    ReplyDelete
  22. காதல் ஜீவனின் அஸ்திபாரம்! கவிதை நன்று!

    ReplyDelete
  23. அன்பின் சசிகலா - காதல் கவிதை அருமை - மேகம், விண்மீன், வண்டு, வானம், தென்னங்கீற்று, கோலம், கன்றுக்குட்டி, அருவி, தேனி, மலர், மழலை, அலைகடல், தாய், தமிழ், ஓவியம், புள்ளி மான், பசுமை, சூரியன், பண்பாவை, நிலவு, ஆறு, பாட்டு, மேகக்கூட்டம், தென்றல் - இப்படி எதை எடுத்தாலும் காதல், எங்கும் காதல், எல்லாமே காதல் தான் - நல்வாழ்த்துகள் சசிகலா - நட்புடன் சீனா

    ReplyDelete
  24. நன்று. அன்புதானே காதல் ஆதலினால் காதல் செய்வீர்.

    ReplyDelete
  25. காதல் காதல் காதல்... காதல் போயின் இன்னொரு காதல். ஹி... ஹி... காதல் (கவிதை) மழையில் நனைந்து ரசிததேன். அருமை.

    ReplyDelete