Sunday 28 October 2012

துளித் துளியாய் - 3


பட்டாம் பூச்சி
பிடிக்கத்துடிக்கும் மழலையாய்
உன் பார்வைக்கு முன்பு
நிற்க முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

நீண்ட காத்திருப்பில்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சல் தேய்ந்து
கோபமாகிக் கொண்டிருக்கிறது.

அணைக்கப்பட்ட
மின்விசிறியின் அசைவாய்
மிதமாய்த்தான் உழுதுகொண்டிருக்கிறாய்
என்னுள்ளும்.


கனவுகளை அனுப்புங்கள்
 இமைக் கதவுகளை
திறந்து வைக்கிறேன்.

 சிந்தையிலிருந்து சிதறிவிழுந்த
தூறலது தமிழ்த்தூறலது
தமிழ்க் கவியானதோ?


உன் பார்வைக்கு முன்பு
நான் கொலு வைத்த
பொம்மையாகிறேன்
கொலு பொம்மையெல்லாம்
 நாட்டிய மாட
கொலுசு கேட்கின்றன.

37 comments:

  1. அழகான வரிகள் அத்தனையும்...
    காத்திருப்புக்கும் காலமென்ற ஒன்றுண்டு
    காலமும் கடந்துவிட்டால் கோபமே வெளிவரும்
    கொலு பொம்மைகள் கொலுசு கேட்பதிலும்
    அர்த்தங்கள் ஆயிரம் இருக்கத்தான் செய்கின்றன...

    அருமை சசி கலா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நாட்டிய மாட
    கொலுசு கேட்கின்றன.
    >>
    அடிப்பாவி! தீபாவளி பணிகை வர்றதுன்னால கொலுசு வேணுமின்னு அண்ணாக்கிட்ட கேட்டு எங்கண்ணானுக்கு செலவு வைக்குறியா?!

    ReplyDelete
    Replies
    1. நான் இல்ல பொம்ம கேட்குதுங்க.

      Delete
  3. கனவுகளை அனுப்புங்கள்
    இமைக் கதவுகளை
    திறந்து வைக்கிறேன்.// Nice

    ReplyDelete
  4. இருண்டகாட்டில் பாறையில்படுத்து
    வான்நோக்கியிருப்பின் வாழ்கின்ற
    வெண்ணிலா அதன்கீழ் என்னாளும்
    தனியாய்காத்துநிற்கும் விடிவெள்ளி
    முளைப்பதும் மறைவதுமான விண்மீன்
    வரிசையாய் மூன்று பொன்மினிகள்
    இவையெல்லாம் தினசரிபாடும் கவிதை
    கொலுபொம்மைகளுக்கு ஆயிரமாய்
    கொடுங்கள்...பாடுங்கள் அவைகளும்
    சலங்கைகட்டி ஆடட்டும் என்னாளும்!

    ReplyDelete
  5. மிகவும் அருமை தோழி.

    குறிப்பாக.. //உன் பார்வைக்கு முன்பு
    நான் கொலு வைத்த
    பொம்மையாகிறேன்
    கொலு பொம்மையெல்லாம்
    நாட்டிய மாட
    கொலுசு கேட்கின்றன.//

    ReplyDelete
  6. உங்க கஷ்டம் புரியுது-அருமை
    அணைக்கப்பட்ட
    மின்விசிறியின் அசைவாய்

    ReplyDelete
  7. ''...நீண்ட காத்திருப்பில்
    கொஞ்சம் கொஞ்சமாக
    கொஞ்சல் தேய்ந்து
    கோபமாகிக் கொண்டிருக்கிறது....
    Please cool down darling.!!!....
    கோபத்தில் அழகு தமிழ் துள்ளுகிறது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. அழகான வரிகள்.....
    அட கொலுசெல்லாம் கேட்டு ஏக்கப்படனுமா என்ன.வீதியோர கடைக்குப் போனா ஆயிரமாயிரம் கொலுசுகள்......:)

    ReplyDelete
  9. கலக்கிட்டீங்க!;அதுவும் கடைசி ஆறு வரிகள்!

    ReplyDelete
  10. மிகுந்த தேடலுக்கு பிறகு இங்கு வர முடிந்தது!
    //கனவுகளை அனுப்புங்கள்
    இமைக் கதவுகளை
    திறந்து வைக்கிறேன்.//

    சிந்தனை, கற்பனை இரண்டும் மிகப்பெரிய அளவில் கலந்து நிற்கும் வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. கவிதை அருமை.

    /கொலு பொம்மையெல்லாம்
    நாட்டிய மாட
    கொலுசு கேட்கின்றன./

    ரசித்தேன்.

    ReplyDelete
  12. ஏனுங்க பக்கத்தில் ஏதாவது தஞ்சாவூர் பொம்மை கொலுவுல இருக்கா

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர் பொம்ம என்ன செய்யும்.

      Delete
  13. இரசித்தேன்! காத்திருந்த கோபம் கவிதையானதோ?

    ReplyDelete
  14. அருமை...படித்தேன்... ரசித்தேன்..

    //நான் கொலு வைத்த
    பொம்மையாகிறேன்///

    அப்ப சுண்டல் தருவது யார் ?

    ReplyDelete
  15. //கனவுகளை அனுப்புங்கள்
    இமைக் கதவுகளை
    திறந்து வைக்கிறேன்//

    அழகான கற்பனை !!!
    அதிசயிக்கவைத்தது.

    ( வேறு)

    கனவுகளை அனுப்ப‌
    கண்கள் திறந்தேன்.


    கண் முன்னே
    காரிகை ஒருத்தி
    காளியாய் நிற்கிறாள்

    முத்துக் கொலுசு அது
    முந்தா நாள் வாங்கியது.
    எங்கே தொலைத்தீரென
    என்னைப் பார்த்து சொல் என்றாள்.

    பாவை அவள் எனைப்பார்க்க
    பாவப்பட்ட பொம்மை ஆனேன்.

    பொய் இலை மெய்யும் இல்லை- எனின்
    பொம்மை ஆகிவிடுமோ ?

    சுப்பு ரத்தினம்.

    பின் குறிப்பு: உங்கள் கவிதையின் கடைசி வரிகள்
    ஆங்கிலக் கவிஞன் கீட்ஸை நினைவு படுத்துகின்றன.
    காட்சி:

    உடைந்து போன மட்பாண்டத்தில் ஒரு ஓவியம்.
    ஒரு பாம்பு படம் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது. அவ்வழி வரும்
    வழிப்போக்கன் அந்தப் பாம்பின் அழகை ரசித்து தன் குழலை எடுத்து
    ஊதுகிறான்.

    பாம்பு சொல்கிறதாம்: உன் குழலுக்கு ஈடு கொடுக்க என்னால் ஆட இயலவில்லை.
    ஊதுவதை நீ நிறுத்த மாட்டாயா என .







    '''

    ReplyDelete
    Replies
    1. அழகிய உதாரணங்களுடன் அருமையான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  16. தமிழ்த் தூறலை கவிதையாக்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. பார்வைக்கு முன்பு பொம்மையான பின்பு நாட்டியமாட ஏன் தாமதம்?

    ReplyDelete
  18. // சிந்தையிலிருந்து சிதறிவிழுந்த
    தூறலது தமிழ்த்தூறலது
    தமிழ்க் கவியானதோ?//

    உண்மைதான். அடிக்கடி இந்த தூறல் சிதறி விழட்டும்.

    ReplyDelete