Sunday 9 September 2012

காதல்செய்தல்-விதி !


இதயம் பூத்திருக்கும்
கண்கள் காத்திருக்கும்
மேனி சிலிர்த்திருக்கும்
நினைவு தனைமறக்கும் !

தனிமை இனித்திருக்கும்
நிஜங்கள் நிழலாய் தெரியும்
உறவுகள் கசப்பாய்மாறும்
வார்த்தைகள் வம்புபேசும் !

எண்ணங்கள் சிறகுவிரிக்கும்
உறக்கத்தை கனவு சிதைக்கும்
கண்ணாடி புதுகதை சொல்லும்
தன்னுயர் தான் வெறுக்கும் !

சுவர்பல்லி புத்தியுரைக்கும்
வெற்றிலையில் முகம்தெரியும்
புரியமனம் தேடி அலையாடும்
ஏனிப்படி கேள்வி தோற்கும் !

கண்ணைத் திரை மறைக்கும்
தெய்வாமிர்தம் என்றியம்பும்
வண்டுவந்து மனமமரும்
அடிமைசாசனத்தின் ஆரம்பம்....
ஆனாலும் காதல்செய்தல்-விதி!

18 comments:

  1. எண்ணங்கள் சிறகுவிரிக்கும்
    உறக்கத்தை கனவு சிதைக்கும்
    கண்ணாடி புதுகதை சொல்லும்

    இந்த வரிகள் ரசித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடிமைசாசனத்தின் ஆரம்பம்....
    ஆனாலும் காதல்செய்தல்-விதி!//

    காதல் உணர்வைச் சொன்னவிதம் அழகென்றால்
    கவிதையை முடித்தவிதம் கொள்ளை அழகு
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இயற்கையின் விதிகளில் காதல் செய்தில் விதியும் தவிர்க்க இயலாதது என்பதை அழகான வார்த்தைகளில் கவிதை யாக்கிவிட்டீர்கள்

    ReplyDelete
  4. சுவர்பல்லி புத்தியுரைக்கும்
    வெற்றிலையில் முகம்தெரியும்
    புரியமனம் தேடி அலையாடும்
    ஏனிப்படி கேள்வி தோற்கும் !

    மூடத்தனத்துக்கு நல்ல பதிலடி......

    அருமையான கவி அக்கா....

    ReplyDelete
  5. உணர்வுகள் பொதிந்த காதல் வரிகள்.... நல்ல படைப்பு! சகோ

    ReplyDelete
  6. எத்தனை வந்தாலும் என்னதான் போனாலும் காதல் நம்முள் புகுவதை யாராலும் நம்மாலும் நிறுத்தவே முடியாது... தெரிந்தே கிணற்றில் விழுகிறோம் என்று எத்தனை பேர் சொன்னாலும் அதை ஆட்கொள்பவருக்கே அதனுடைய அருமைதெரியும். இதை விதி என்பதா...இல்லை நமக்கான வாழ்க்கையின் வழி என்பதா.... தெளிவாக தெளிவிபடுத்திய சசி கலா தங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நல்ல குறுந்தொகையின் பொழிப்புரையாய் ஒரு கவிதை!

    ReplyDelete
  8. காதல் வந்தால் வரும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி விட்டீர்கள் ஒரு கவிதை வடிவில்!!!

    ReplyDelete
  9. காதல் உணர்வுகளின் வரிகள்... நன்றி சகோ...

    ReplyDelete
  10. எப்படி எச்சரிக்கையாக இருந்தாலும் காதல் வண்டு குடையும் என்று சொல்லுகிரிங்க ..
    ம்ம்ம் நன்று

    ReplyDelete
  11. காதல் செய்தல் விதியை சிறப்பாக பகிர்ந்து உள்ளீர்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  12. //எண்ணங்கள் சிறகுவிரிக்கும்
    உறக்கத்தை கனவு சிதைக்கும்
    கண்ணாடி புதுகதை சொல்லும்
    தன்னுயர் தான் வெறுக்கும் !//

    நல்ல வரிகள்..அக்கா

    ReplyDelete
  13. விதி - மோகன் பூர்ணீமா, சுஜாதா

    ReplyDelete
  14. ஆனாலும் காதல்செய்தல்-விதி.....மாறவே மாட்டோம் !

    ReplyDelete