Thursday 27 September 2012

தூரத்துப் பசுமை !



கட்டுச் சோறும் சுமையாச்சி
போகுமிடம் தூரமாச்சி
வெத நெல்லு வாங்கிடவே
காது மூக்கு காலியாச்சி.

கட்டாந்தர நெலத்த உழ
கால் சொம்பு தண்ணியில்ல
துந்தக் கிணறு தூர் வார
வந்த சீதனம் வம்பிழுக்க
ஏரித்தண்ணி ஏச்சியிங்கே
வந்து சேர காவா வறண்டிருக்கும்.

வேட்டிக்கர மடிச்சுகட்டி
வெறசாத்தான் போயி மச்சான்
வெள்ளாமைய பாத்து நிப்பான்
என்றே தினம் கனவுகண்டேன்
பகல் கனவா போச்சுதுவே
பக்கத்து நில பங்காளியோட
பாத வழித் தகராறில் வந்துநின்னான்.

முட்டி மோதி விளைஞ்ச நெல்லும்'
களத்து மேடு சேர்க்க ஆளுமில்ல
காவல் காத்து கட்டி எடுத்து
வீடு வந்து சேர்ந்தா
கால் வயிறு காணவில்ல...

துக்கத்த விட்டு மாமா-
தூர தேசம் போய் -நீயும்
தொலைச்ச பணம் சேர்த்திடுவோம்
தூரத்துப் பசுமைய நாம்
பக்கத்திலே கொண்டு வருவோம்.

33 comments:

  1. அருமையான கவிதை வாழ்த்துக்கள்..கிராமியக் கவிதைக்கே ஒரு தனிக் கலைதான்.

    ReplyDelete
  2. அழகாக சொன்னீங்களே...
    விவசாயி படும் வேதனையை...
    ஒன்றிரண்டு விவசாயிகளும் கஷ்டப்பட்டு
    விவசாயம் செய்ய நினைத்தாலும் மீதம்
    கிடைப்பது என்னவோ நட்டம் மட்டும்தானே...

    கையிலுள்ள காசும் போயி பட்டினி கிடந்ததும்
    போயி இன்னும் போகாமல் இருப்பது உயிர்தானே...
    அந்த ஒன்றும் என்று போகுமென்று தெரியலயே...
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் இது அப்போ..

    இப்போ என்ன இருந்து என்ன பண்ண ஒண்ணும் செய்ய முடியவில்லையே ஏழை விவசாயி என்பதால்... இல்லை ஏழை என்றானான் விவசாயம் செய்ததால்... என்ன செய்ய எல்லாமிருந்தும் அயல் நாடு சென்றால் தான் பிழைப்பு என்றாகி விடுமோ என்ற அச்சம் நம்மை விழுங்கிவிடும் போலிருக்கு...

    நம் நாட்டின் நிலையை அப்படியே புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் சசி கலா.. வாழ்த்துக்கள் சொல்கிறேன் சற்றே மனம் கசிந்து... என்று மாறுமோ நம் விவசாயிகளின் அவலநிலை... எல்லோரும் சோற்றில் காலை வைக்க சேற்றில் காலை வைக்கும் விவசாயிக்கு உண்ண உணவு இல்லை..என்னவென்று சொல்வது எப்படித்தான் மாற்றுவது...

    அரசாங்கமும் சிந்திக்குமா...சிந்தித்தால் செயல்பட்டால் அப்போது மலரும் நம் விவசாயிகளின் வாழ்வு...

    ReplyDelete
    Replies
    1. அழகாக விளக்கிச் சென்ற விதம் அருமை நன்றிங்க.

      Delete
  3. கடவுள் கண்ட தொழிலாளியின் இன்றைய நிலையை அற்புதமாக கவிதையாக்கி இருக்கீங்க சசி. ஆனா, தூரதேச முடிவை கொஞ்சம் மாத்தனும். ஏன்னா, தூரதேசத்திற்கு வந்து நாங்கள், ”இழந்த பசு(இளை)மையை” எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும்... ம்ஹூம்! திரும்பவே திரும்பாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க ஒன்றை இழந்து ஒன்று பெறுவதே நம் இயல்பாகிப் போனது என்ன செய்வோம்.

      Delete
  4. அன்பின் சசிகலா

    அருமையான கவிதை - கிராமத்தின் மணம் இங்கு வரை மணக்கிறது.

    இன்றைய நிலையில் இயற்கையைக் காக்க மறுத்து, மறந்து விட்ட நாம் விவசாயத் துறையில் விவசாயிகள் படும் பாட்டினைக் கண்டு துயரப் படுகிறோம். என்ன செய்வது ? நீர் இல்லை - மழை பொய்க்கிறது - விளைநிலங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறுகின்றன. மரங்கள் அனைத்தும் வெட்டப்படுகின்றன. விவசாயிகள் நொந்து போய் இருக்கிறார்கள்.

    கவிதையில் ஒரு விவாசாயியின் இன்றைஅய் நிலைமை அழகாகப் படம் ப்டித்துக் காட்டப்பட்டிருகிறது. காலம் மாற பிரார்த்தனைகலூடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. விவசாயிகளின் படும் பாடடை அழகான பாட்டின் மூலம் சொல்லிப் போயிருக்கீங்க. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

      Delete
    2. தூர தேசம் போய் -நீயும்
      தொலைச்ச பணம் சேர்த்திடுவோம்
      >>>

      ஆமா, காசு பணம் சேர்க்க சங்கரை ஏண்டி தூர தேசம் போக சொல்றே?

      Delete
    3. சரிங்க நாத்தனாரே அவரை எங்கும் அனுப்பவில்லை போதுமா ?

      Delete
  6. nalla kavithai!

    vethanai konda en sonthangal-
    vivasaayaa makkal
    vethanai.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.

      Delete
  7. ''..துக்கத்த விட்டு மாமா-
    தூர தேசம் போய் -நீயும்
    தொலைச்ச பணம் சேர்த்திடுவோம்
    தூரத்துப் பசுமைய நாம்
    பக்கத்திலே கொண்டு வருவோம்...''


    நல்ல நம்பிக்கை வரிகள்.
    பணி தொடரட்டும்.
    நல்வாழ்த்து.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. விவசாயி நெல்விதைச்சா
    களையே வளர்கிறது!
    விலையேறப் பூட்டிவைக்க
    அவனுக்கு களிவில்ல!
    விளைஞ்சது கால்படியே
    காலை நீருணவே!
    அலையது அவன்வாழ்வு
    அணைக்க யாருமில்ல!
    சிலையதாய் அவனானல்
    புவிகதியென்னாகும்!
    விடியல் வரவேண்டும்
    விரைவாய் அதுவரட்டும்!
    கண்மூடியிருப்போரின்
    கண்பார்க்க கவிசொன்ன!
    கவிதைக்கு ஓர்வணக்கம்!
    கவிக்கு மறு வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. ///////////
    முட்டி மோதி விளைஞ்ச நெல்லும்'
    களத்து மேடு சேர்க்க ஆளுமில்ல
    காவல் காத்து கட்டி எடுத்து
    வீடு வந்து சேர்ந்தா
    கால் வயிறு காணவில்ல...
    ///////////

    இதுதான் 80 சதவீத இந்திய விவசாயிகளின் உண்மை நிலை...

    நல்லதொரு கவிதை

    ReplyDelete
  10. இன்றைய உண்மை நிலைமை வரிகளில் தெரிகிறது... இவை விரைவில் மாற வேண்டும் என்று எண்ணம் மேலோங்குகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க விவசாயம் செழிக்க வேண்டும்.

      Delete
  11. ஊர் நினைவுகள் என் கண் முன்னே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. இந்தியாவின் இதயமே விவசாயம்தான் ...அதன் நிலை இப்படி ஆகி போச்சே...

    ReplyDelete

  13. உழரவன் கணக்கு பார்த்தா உழவுகோலும் மிஞ்சாது!இது நான் இளமையில் கண்ட அனுபவம் உங்கள் கவிதை அனைத்தும் உண்மை!

    ReplyDelete
  14. பசுமைப் புரட்சி விரைவில் நடைபெறட்டும்!

    ReplyDelete
  15. அழகான கவிதை
    கிராமிய சொற்றொடர் அழகு

    ReplyDelete
  16. சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்ற வள்ளுவரின் வாக்கை மறந்துவரும் நவீன நாகரிக உலகத்திற்கு ஏற்ற கவிதை. ‘
    அருமை

    ReplyDelete
  17. // தூர தேசம் போய் -நீயும்
    தொலைச்ச பணம் சேர்த்திடுவோம்
    தூரத்துப் பசுமைய நாம்
    பக்கத்திலே கொண்டு வருவோம். //

    எதிர்காலச் சிந்தனை வரிகள். காவிரி நீரை மட்டுமே நம்பி நெல்லை மட்டும் பயிரிடும் முறை மாற வேண்டும்.

    ReplyDelete
  18. வயல்வெளியும் அந்தப் புல்லின் வாசமும் வருகிறமாதிரியே இருக்கு !

    ReplyDelete
  19. வணக்கம்

    அருமையான கவிதை ஒவ்வொரு வரியிலும் கிராமத்து மணம் வீசுகிறது வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete