Tuesday 25 September 2012

எல்லாமே எனக்கெதிராய் !



முற்றத்தில் நிலவும்
மேகத்தில் தனை மறைத்து
என் முகம் காண மறுத்ததுவே.

தோட்டத்துப் பூக்களும்
தோள் தட்டி எனை அழைத்து
புரியாத பாஷையில்
புதுக்கவிதை கேட்டதுவே.

சிரித்தழைத்த புதுமலரும்
பொத்தென்றே தலை கவிழ்த்து
மணம் வீச மறந்ததுவே.

மெல்ல வீசிய பூங்காற்றும்
மேகம் விரட்டும் சூரியனாய்
சுட்டெரித்து நிற்கிறதே.

குளத்தில் மீனும் துள்ளியெழுந்து
கொக்கெனவே எனை நினைத்து
குதித்தோடி மறைந்ததுவே.

கண்ணிமையும் கலந்துபேசி
காட்சி காட்ட மறுத்ததுவே.

என் பிள்ளைத்தனத்தால் எழுந்த
உன் செல்லக் கோபம் தனை
இவைகளிடத்தும் ஏன் சொல்லிப்போனாய் !

21 comments:

  1. நல்லா இருக்குங்க...

    செல்லக் கோபங்கள் தொடரட்டும்...

    ReplyDelete
  2. அடடே... அவரின் செல்லக் கோபம் இத்தனை விதங்களில் வெளிப்பட்டது அருமை. படிக்கும் போதே மனதில் காட்சிகளை எழுப்பிப் போனது தென்றல். அருமையான சொல்லாடல்.

    ReplyDelete
  3. நன்று! சகோ...
    செல்லக்கோபம் அன்பின் வெளிப்பாடு...

    என் தலத்தில் // மை படிந்த கை //


    ReplyDelete
  4. கண்ணிமையும் கலந்துபேசி
    காட்சி காட்ட மறுத்ததுவே.
    இதெல்லாம் வாழ்கையிலே சகசம் தானுங்கோ

    ReplyDelete
  5. செல்லக்கோபம் என்பதால் அவைகளிடத்தில் சொல்லிப்போனார்...
    அருமை சசி கலா...பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....
    தொடரட்டும் ஆரோக்கியமான இதுபோன்ற பாதிப்பில்லா கோபங்கள்...

    ReplyDelete
  6. அருமையான கவிதை.

    செல்லக்கோபத்தில் சொல்லிப்போனதால்தானே இத்தனை அழகான கவிதை கிடைத்தது :-)

    ReplyDelete
  7. செல்ல கோபத்தில் எல்லாம் மறுக்க பூக்கள் மட்டும் கவிதை கேட்குதே எப்படி..?

    உங்கள் கவிதைமேல் பூக்களுக்கும் அவ்வளவு பிரியம் போல...

    ReplyDelete
  8. // முற்றத்தில் நிலவும்
    மேகத்தில் தனை மறைத்து
    என் முகம் காண மறுத்ததுவே.//

    அருமை! கலக்கல்! கவிதை!

    ReplyDelete
  9. செல்லக்கோபம் வந்ததினால் அழகிய கவிதையும் பிறந்தது.

    ReplyDelete
  10. பெண் என்பதால் எல்லோரும் பாராட்டுகிறார்கள் .இந்தக்கவிதை வெறும் வார்த்தைகளின் வருடல் ,உங்களால் இன்னும் இன்னும் அழகாய் எழுத முடியும் .மொழி நயமும் ,கற்பனையும் கலந்து இருக்கும் உங்கள் கவிதை பலவற்றை நான் படித்துள்ளேன் .பதிவு செய்வது இதுதான் முதல் முறை .

    ReplyDelete
  11. >>புரியாத பாஷையில்
    புதுக்கவிதை கேட்டதுவே.

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  12. செல்லக்கோபம்!அருமை

    ReplyDelete
  13. இந்தக்கவிதை வெறும் வார்த்தைகளின் வருடல் ,உங்களால் இன்னும் இன்னும் அழகாய் எழுத முடியும்
    என்பதுதான் என் கருத்தும் .

    ReplyDelete
  14. யார் மீது ஏற்பட்ட பிள்ளைக் கோபமோ... ஏன் இந்த கோபமோ

    ReplyDelete
  15. அழகாகச் சொல்லுறீங்க கவிதைகள்.....

    ReplyDelete
  16. செல்லக்கோபம்கூட....அருமையான கவிதையைக் கொண்டு வந்திருக்கிறது சசி!

    ReplyDelete