Wednesday 19 September 2012

மனமெழுதும் காட்சிகளாயிரம் !

மனமெழுதும் காட்சிகளாயிரம்
மண்ணிலுதிர்வது அதிலதிகம்!
மறந்துபோவது கானல்நீராய்
பிரிதெல்லாம் பூங்கவிதைகளாய்!

இதயத்திலெண்ணம் எழுதிசெல்லும்
இமயமெல்லாம் பறந்து தேடும்!
இரக்கமின்றி நினைவு உருண்டோடும்
இனியவைப்பல கருவில் மாயும்!

வந்தவிடம் திரும்பா பிறப்புகள்
வலையில்பட்டு மரிக்கும் மீனாய்!
வண்ணநிலவாய்த் தேயும் காலமும்
வழக்காடியதை வென்றவரில்லை!

படைப்பாளி கையில் உளியதுவேண்டும்
பகலிரவாய் செதுக்குதல் மாண்பு!
பகிர்ந்துரைக்க எழுத்தேடுகளிருப்பின்
பசித்த நினைவே கவிதைச்சோலை!

ஜனனத்தின் நேரம் நம்மிடமில்லை
பிள்ளைப்பூச்சியும் கவிதைதரும்!
பிறைநிலவுபோன்ற குறையோட்டம்
பிழையாய் நாமுதிர திறக்கும் வாசல்!

ஆயுதமின்றி யுத்தமில்லை -நமக்குள்
ஆசைின்றி நற்படைப்புமில்லை!
ஆள்பவர்கையில் ஆயுதமிருப்பின்
ஆண்டவரே நல்படைப்பாளி!

கவிதையெல்லாம் நன்னெறியே
களைக்களத்தில் மனதின் கற்பல்ல!
கற்பாதைக்கும் கண்ணீர் கதையுண்டு
கரையுமதுவும் மணல் வடிவெடுத்து!

சேர்ப்பதெல்லாம் நமக்காயல்ல உலகில்
சேர்வதெல்லாம் நமதானால் பிரிவுமில்லை!
சேற்றில்மலரும் தாமரையும் வாழத்தானே
சேம நலம் சுயத்தின் ஒரு பகுதியாமே !

18 comments:

  1. பசித்த நினைவே கவிதைச்சோலை!

    ReplyDelete
  2. கற்பாதைக்கும் கண்ணீர் கதையுண்டு
    கரையுமதுவும் மணல் வடிவெடுத்து!

    சேற்றில்மலரும் தாமரையும் வாழத்தானே

    அருவி போல் வரிகள் அணி வகுத்து வந்தாலும் அதிலே நான் ரசித்த வரிகள்
    இவை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. விரக்தி போல் தோண்டிரிய பொழுதும் முடிவில் அருமையாய் முடித்த விதம் அருமை

    ReplyDelete
  4. //ஆயுதமின்றி யுத்தமில்லை -நமக்குள்
    ஆசையின்றி நற்படைப்புமில்லை!//

    //சேற்றில்மலரும் தாமரையும் வாழத்தானே
    சேம நலம் சுயத்தின் ஒரு பகுதியாமே !//

    அருமையாய் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. பிள்ளைப்பூச்சியும் கவிதைதரும்!
    >>
    உன் பிளாக் வந்தப்பிறகுதான் இந்த வரி உண்மைன்னு தெரியுது

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி....ஆனாலும் இவ்வளவு கிண்டல் ஆகாது! :)

      Delete
  6. படைப்பாளி கையில் உளியதுவேண்டும்
    பகலிரவாய் செதுக்குதல் மாண்பு!
    பகிர்ந்துரைக்க எழுத்தேடுகளிருப்பின்
    பசித்த நினைவே கவிதைச்சோலை!
    உங்கள் படைப்புக்களின் ஊற்று ஊறும் விதம் தெளிவாகிறது..

    ReplyDelete
  7. ம்ம்ம் ...அருமையான கவிதை சகோ

    ReplyDelete
  8. ஆண்டவனும் நல்படைப்பாளி...சரியாக சொன்னீர்கள்..பாராட்டுக்கள்.வார்த்தைகள் வந்து விழுந்து கிடக்கின்றன...படிப்பதில் தான் நாம் மெருகூட்டவேண்டும் இந்த படைப்பிற்கு..
    வாழ்த்துக்கள் இது போன்ற எண்ணற்ற பலவகை கவிகள் பூத்திட...

    ReplyDelete
  9. //பிள்ளைப்பூச்சியும் கவிதைதரும்!//

    இத்த்னை நாள் தெரியாமப் போச்சே..

    ReplyDelete
  10. ஆயுதமின்றி யுத்தமில்லை -நமக்குள்
    ஆசைின்றி நற்படைப்புமில்லை!
    // அருமை!//
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  11. பல உண்மை வரிகள்... அருமை...

    ReplyDelete
  12. மனம் எழுதும் காட்சிகள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றன.

    ReplyDelete
  13. எப்படித்தான் இப்படி சரளமாக எழுதுகிறீர்களோ? காட்சிகளையெல்லாம் சாட்சியாக்கிவிடுகிறீர்கள், உங்கள் கவிதைகளில்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  14. உலகில் சேர்வதெல்லாம் நமதானால் பிரிவும் இல்லை! உண்மை வரிகள்! பிடித்த வரிகள்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete

  15. ஜனனத்தின் நேரம் நம்மிடமில்லை
    /////////

    மரணத்தின் நேரமும் நம்மிடமில்லை..
    உண்மை வரிகள் + அர்த்தமுள்ளதுவும் கூட

    ReplyDelete
  16. அருமை அக்கா......

    ReplyDelete