Tuesday 18 September 2012

அவன் கனவே...!


காத்து வந்து கதவடைக்க
கண நேரம் மனந்துடிக்க
ஆத்தோரம் தோப்போரம்
அருகிருக்கும் உன் விழியோரம்..

அடுக்கடுக்கா தும்மல் வர
அலர்ஜி என்றே மனம் கதற
அடுத்த வேள என்ன செய்ய
ஆத்தாடி ஒண்ணும் விளங்கலியே.

சூதாட்டம் போல  என்ன
சொக்குப் பொடி வச்சானோ ?
சொக்கி தினம் தவிக்கவிட்டே
சொப்பனத்தில் மிதக்கவிட்டான்.

கரையேற வழியுமில்ல
கனாக் காண உறக்கமில்ல
கண்கட்டு வித்தையாட்டம்
கண்ணுக்குள்ள அவன் கனவே...
காணும் பொருளிலெல்லாம் சிரிக்குதடா.

45 comments:

  1. என்ன செய்ய.. காதல் என்ற ஓர் தென்றலும் நம் வாழ்வில் வீச ஆரம்பித்துவிட்டால்...எதுவுமே தெரியாது, எதுவுமே விளங்காது... கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலைதான்.. உலகத்தில் பாதிக்கும் மேல் இப்படித்தான் அலை பாய்ந்துகொண்டிருக்கிறார்கள் சரி பாதியினர்...அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சசி கலா...அதற்கு என் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. காதல் படுத்தும் பாடு...
    அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. என்ன சொக்குப் பொடி போட்டான் அவன்...? சொப்பனத்திலேயே இப்படி மிதக்க வைத்து விட்டானே...! காதலின் தவிப்பை அழகாச் சொல்லியிருக்கீங்க தென்றல். அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
    2. சொக்கு பொடி போட்டதும் உண்மை.
      மாட்டிக்கிட்டதும் உண்மை.
      ஆனா, மாட்டிக்கிட்டது சசிகலா இல்ல சங்கர். பாவம்ண்ணா சங்கர் அண்ணா.

      Delete
  4. ஆமாம் ஆமாம் அவன் கனவேதான்

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு இத்தன ஆமாம் சகோ.

      Delete
  5. ஆயிரம்தா இருந்தாலும் அவன் கனா அவன் கனா தான்..

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா சரிதான்.

      Delete
  6. எங்கெங்கு நோக்கினும் அவன் பிம்பமே...அப்படிங்கிறீங்க! அப்பிடித்தானே...ம்ம்ம்ம்..நல்ல கவிதை!

    ReplyDelete
    Replies
    1. அழகிய வரிகள் சகோ. உங்க பின்னூட்டம் தான்.

      Delete
  7. ம்ம்ம் ....
    இப்பம் நீகள் எழுதுகிற வரிகளில்
    கிராமத்து மண்வாசனை தமிழ் அழகாய் இருக்கிறது

    ReplyDelete
  8. ஆஹா.....
    என்வொரு கோர்வை அப்படியே புல்லரிக்குது...
    அழகான கவிதை மிக அழகு + மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. கவிதை படித்த உடன் "சொக்கு பொடி போட்டாண்டி மச்சான் மச்சான் ..அவன் சொன்னதெல்லாம் கேட்கும்படி வச்சான் வச்சான் ."பாட்டு நினைவுக்கு வருது சசி..

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாட்டு தான் சகோ.

      Delete
  10. கண்கட்டு வித்தையாட்டம்தான்....அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  11. //கரையேற வழியுமில்ல
    கனாக் காண உறக்கமில்ல//

    தவிப்பை உணர்த்தும் வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    S பழனிச்சாமி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. கண்ணுக்குள்ள அவன் கனவே...
    காணும் பொருளிலெல்லாம் சிரிக்குதடா.

    // பாடுபொருளானவன் பார்க்கும் பொருளிலெல்லாம்!
    -காரன்ஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  13. கொஞ்சம் தாமதமாயிட்டது பின்னூட்டமளிக்க அதற்கு முன் எத்தனைப் பேரை கீழே மவுஸை வைத்து கீழே இறக்க வேண்டியுள்ளது.

    கிராமத்து வாசத்தை உங்களின் தளத்தில் ஒவ்வொரு வரியிலும் பார்க்க முடிகிறது. ஆத்தோரம், தோப்போரம் என்று வரிகளிலாவது ஆறையும், தோப்பையும் நான் உங்கள் மூலம் தரிசித்துக் கொள்கிறேன்.

    கவிதையின் மண்வாசனை கணினியைத் தாண்டியும் என் நாசிகளைத் துளைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அந்தந்த இடத்திலிருந்த உணர்வும் வருமே.

      Delete
  14. //சொக்குப் பொடி வச்சானோ ?
    சொக்கி தினம் தவிக்கவிட்டே
    சொப்பனத்தில் மிதக்கவிட்டான்.//

    அழகான கவிதை வரிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  15. எத்தனை விதமாக சொன்னாலும் காதள் அவஸ்தை அழகுதான் சசி !

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ இதில் மட்டுமே அவஸ்தையும் அழகு.

      Delete
  16. காதல் படுத்தும்பாடு அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. அதிஷ்டசாலிதான் நீங்க.

      Delete
  17. கிராமத்து குயிலின் சத்தம் கேட்கலையோ? கேட்டுவிட்டு அவஸ்தையை ரசிப்பதேனோ?

    ReplyDelete
    Replies
    1. குயில் சத்தம் கேட்குதே.

      Delete
  18. ராஜி மேடத்தின் கருத்தை வழி மொழிகிறேன்.
    எளிமையாக அழகான முன்னேறிய கிராம நடையில் கவிதை.
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. ராஜி அக்காவோட நீங்களுமா ? சரிதான்.

      Delete
  19. காதலின் இம்சைகள்

    அருமையான கவி அக்கா...................

    ReplyDelete
  20. காதலின் தவிப்பைச் சொல்லும் கவிதை அருமை
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

    ReplyDelete
  21. ஆஹா மெட்டுக்கட்டி பாடவைத்த அழகிய வரிகள் சசி.... மெல்லிய காதல் மனதில் நுழைந்ததும் என்ன பாடு படுத்துகிறது....

    உறக்கமும் இல்லை.. கனவிலாவது கண்ணடைக்க வரும் கண்ணனிடம் அடைக்கலாமாக...

    முத்தாய்ப்பாக காணும் பொருளில் எல்லாம் தெரிவதாக கவிதை வரிகள் நிறைவு செய்தது சிறப்பு...

    எளிய நடையில் அழகிய பாடல் வரிகள் சசி.... அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete