Sunday 16 September 2012

உள்ளத்த மூடிவச்சி...!


புல்லுகட்ட தூக்கிட்டு
பொம்மலாட்டம் போட்டுகிட்டு
பொழுது சாயும் நேரத்துல...
பொறுமையாதான் போறவரே !

கரகாட்டக் கூட்டத்திலே
கண்ணடிச்சி அழைத்தவரே
கனகம்மா பார்த்துப்புட்டே
கனகாம்பரம் கடனாக் கேட்டா...

சவுக்குத் தோப்புப்பக்கம்
சாயங்கால நேரத்துல
சத்தம் போட்டு அழைச்சவரே
சந்தானம் தான் கேட்டுப்புட்டான்.

உலைவாய மூடி வச்சி
உள்ளத்தையும் மூடிபுட்டேன்
ஊர் வாய என்ன சொல்ல
ஊர்கோலமா வந்து அழைப்பீரோ ?

22 comments:

  1. நல்ல கிராமத்து மணம்.......வரிகளில்

    ReplyDelete
  2. அட... அப்புறம் கனகாம்பரம் கடன் கேட்ட கனகம்மாவையும், சத்தத்தைக் கேட்ட சந்தானத்தையும் எப்படி சமாளிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே... ஹி... ஹி... உள்ளத்தை ரொம்ப இறுக்க மூடிடாதம்மா... சஙகர் திறக்க ரொம்ப திணறிடப் போறாரு..,

    ReplyDelete
    Replies
    1. // உள்ளத்தை ரொம்ப இறுக்க மூடிடாதம்மா... சஙகர் திறக்க ரொம்ப திணறிடப் போறாரு..,// ஹா ஹா ஹா வாத்தியாரே ஏன் இப்புடி... நல்லத் தான போயிட்டு இருக்கு

      Delete
  3. உலைவாய மூடி வச்சி
    உள்ளத்தையும் மூடிபுட்டேன்
    ஊர் வாய என்ன சொல்ல
    ஊர்கோலமா வந்து அழைப்பீரோ ?

    உங்களின் கவிதை வரிகளில் எப்பொழுதும் ஒரு சந்த நயத்தைப் பார்க்க முடிகிறது.சொற்களை படிக்கும் பொழுதே மனதில் ஒரு இசை தோன்றி தாளமிடுகிறது.காதலி தன் காதலனை திருமணம் பேச அழைக்கும் விதம் அருமை.

    ReplyDelete
  4. கிராமத்து மெட்டுக்கு ஏற்ற நல்ல வரிகள் இக் கவிதையில்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கிராமீய வாசனை மணமணக்குது.

    ReplyDelete
  6. அருமையான கிராமீய மணம் வீசும் அழகான பாடல். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. அப்படி இப்படி எதையாவது சொல்லியாவது மச்சானை சட்டுபுட்டென்று கண்ணாலத்துக்கு சம்மதிக்கவைக்கப் பாக்கும் பெண்பிள்ளை சாமர்த்தியம்தான். கிராமியநடையில் மனங்கவரும் பாடல். பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  8. அருமையான கிராமத்து கவிதை...

    ReplyDelete

  9. ம்ம்ம்ம்..... என்ன சொல்ல. ! ?

    ReplyDelete
  10. புல்லுகட்ட தூக்கிட்டு
    பொம்மலாட்டம் போட்டுகிட்டு
    பொழுது சாயும் நேரத்துல...
    பொறுமையாதான் போறவரே !

    nallarukku

    ReplyDelete
  11. >>
    சவுக்குத் தோப்புப்பக்கம்
    சாயங்கால நேரத்துல
    சத்தம் போட்டு அழைச்சவரே


    உங்களை யார் அங்கே போகச்சொன்னது? ;-0

    ReplyDelete
  12. எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் பாடும் ஒரு இனிய நெஞ்சத்தின் கவிதை!

    ReplyDelete
  13. பொழுது சாயும் நேரத்துல...
    பொறுமையாதான் போறவரே !
    >>
    உன்னை பார்த்தப்பின் கோவமா போகாம இருந்தா சரி

    ReplyDelete
  14. நாட்டுப்புற பாடல்கள் உங்களுக்கு நன்றாக வருகிறது பாராட்டுக்கள்

    ReplyDelete
  15. கிராமத்து மண்வாசம்... கவிதையில்....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. கிராமிய மணம் கமழும் கவிதை!

    ReplyDelete
  17. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...கை ஜாடை காட்டி அங்குமிங்கும் அழைத்தாலும் ஊர் பார்க்க எனை கல்யாணம் செய்திடு என்பதை என்ன ஒரு நயமாக கூறி இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்...சசி கலா.

    ReplyDelete