Tuesday 11 September 2012

மறைந்தோடிப் போனானே ..!


பார்வையாலே கயிறு திரித்து
பம்பரமாய் சுழல வைத்தான்.

சுவாசத்தில் பொடி வைத்தே
சுத்திச் சுத்தி சுழல விட்டான்.

வார்த்தியிலே வசியம் வைத்து
வாழ்வே அவனென புலம்ப விட்டான்.

கன்னக்குழி இரண்டில் மயங்க வைத்தே
கதை கதையாய் பேச வைத்தான்.

கையசைவில் எனை அழைத்தே
கரகாட்டம் ஆடவைத்தான்.

நடை பழக விரல் பிடித்தே
நாட்டியத்தை பயிற்றுவித்தான்.

மவுனத்தின் பாஷை தனில்
மன்மதனாய் அம்பெய்தி...

மலங்க மலங்க விழிக்க வைத்தே
மறைந்தோடிப் போனானே ..!

26 comments:

  1. வெரி குட் நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அழகு நடை...தெளிவான அன்பு...
    இருந்தும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும்
    நாயகன்.. இதுவே வேலையாகி போனது காரணம்
    அவனின் வாடிக்கையாளராக நான் இருப்பதால்....
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சசி கலா தங்களுக்கு...

    ReplyDelete
  3. வார்த்தைகளின் அணிவகுப்பில் கவிதை ஒன்று நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மறைந்தோடிப் போனவனை தேடிப் பிடிச்சிரலாம் கவிதாயின். கலங்காதீங்க. வார்த்தைகள் அழகா இருக்குது. சூப்பர் கவிதை.

    ReplyDelete
  5. இப்போது தாங்கள் எழுதிவரும் பாடல்களைப் படிக்கும் போது, நான் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றபோது பாடமாக இருந்த பாரதியாரின் கண்ணன் பாட்டு எனக்கு ஞாபகம் வந்தது.

    எண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன்தான்
    யாரெனச் சிந்தை செய்தேன்
    கண்ணன் திருவுருவம் – அங்ஙனே
    கண்ணின் முன் நின்றதடீ! .
    - கண்ணன் என் காதலன்( பாரதியார் )

    ReplyDelete



  6. அடடா !!
    " மறைந்து மட்டுமில்ல,
    ஓடி வேற போயிட்டானா "
    போகட்டும்.
    அவன் இல்லை எனினும்
    இருந்த வரை என்ன ஓர் இன்பம் !!
    ஆனந்தம் !! ஆனந்தம்.!!

    அம்ப்து வருசம் முன்னாடி
    இந்தக் கிழவி பாடினது
    அம்புட்டும் நினைவுக்கு வருதே !!

    இருந்தாலும்
    இத்தனை இமோஷன் கூடாதுங்க்க...
    இதயம் வெடிச்சுடுங்க்...

    ஆனந்த பைரவிலே
    பாடப்போறேன்.
    கேளுங்க..
    அவரையும்
    கேட்கச்சொல்லுங்க்...


    சுப்பு தாத்தா.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  7. அடடா அருமை
    கண்ணன் குறித்து கோபியர்கள்
    தேடிக் களைத்துக் கூறுவதுபோல்
    அமைந்த பதிவு அருமையிலும் அருமை
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அன்பான அழகான வரிகள்... அருமை...

    ReplyDelete
  9. நல்ல காதல் கவிதை! சிறப்பான தேடல்!

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

    ReplyDelete
  10. நீங்க பாடினா போனானே!நாங்க பாடினா போனாளே!அம்புடுதேன்!
    நன்று
    த.ம.7

    ReplyDelete
  11. ம்ம்ம் . நளினமான வரிகள் ,... நச்சென்று இருக்கு

    ReplyDelete
  12. சிறப்பான கவிதை....

    தொடரட்டும் கவிதை மழை...

    ReplyDelete
  13. ஆஹா பொதுவாக ஆண்கள் தான் பெண்களைப்பற்றி இப்படி வர்ணிப்பார்கள் முதல் முறை இப்படியான ஒரு கவிதையை அட ஒரு பதிவைப் பார்க்கிறேன் என்று கூட சொல்லலாம்

    ReplyDelete
  14. சிறப்பான வரிகள்...

    ReplyDelete
  15. தென்றல்.... பாடிப் பாடி ஓட விட்டுட்டீங்களோ....

    பாவம் அவன்..!!!!

    ReplyDelete
  16. சும்மா சொன்னேன்.

    கவிதை நன்றாக இருக்கிறது சகோதரி.

    ReplyDelete
  17. கண்ணா வருவாயா?/
    என்று
    அன்று ராதையின்
    புலம்பல் ஒலி
    கேட்கிறது சகோதரி...

    ReplyDelete
  18. கண்ணாம்மூச்சி விளையாடுறார் போல !

    ReplyDelete
  19. Replies
    1. சும்மா கவிதைக்காக.

      Delete
  20. யாரவனோ? அவன் எங்கிருக்கானோ?

    என்னக்கா என்ன ஆச்சு?......

    கலக்கலான ஒரு கவி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............

    ReplyDelete
    Replies
    1. சும்மா கவிதைக்காக.

      Delete