Friday 28 June 2013

ஆயுட் கால தேடல் !


காற்றின் அசைவில்
ஒவ்வொன்றாய் உதிர்க்கும் 
ரோஜா இதழாய் உன் வார்த்தைகள்
முழுவதுமாய் உதிர்த்துப்பார்க்க
ஆசையில்லை மௌனத்தையே
கொடு போதும்.
**************************************************

- உன் மவுனத்திற்கான
அர்த்தத்தை தேடுவதிலேயே
என் ஆயுள் கழிந்துவிடும் போல.
*****************************************************

தென்னங்கீற்றசைய
மெத்தையாய் 
உன் மடியிருக்க
எதையாவது 
பேசித் தொலைக்காதே
காதலுக்கு மயக்கம் 
தெளிந்து விடும்.
*******************************************************

உன் மௌனம் தான்
என்னில் .... 
கோபத்தையும்
வெட்கத்தையும்
ஒரு சேர கொடுத்துவிடுகிறது.



30 comments:

  1. எல்லாக் கவிதையிலயும் தென்றல் வீசிச் செல்கிறதே

    ReplyDelete
    Replies
    1. வருக வருக நண்பரே.. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.

      Delete
  2. மௌனமாய் போய் விடலாம் என்றுதான் நினைத்தேன் தோழி
    மனசு தான் கேட்க்கவில்லை கவிதை அருமை !..என்று மட்டும்
    சொல்லி விட்டுப் போய் விடுகின்றேனே :) வாழ்த்துக்கள் தோழி
    மேலும் தொடரட்டும் இனிய கவிதை வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. தோழி நமக்குள் ஏன் மௌனம்... ஏதேனும் நான் பிழை செய்துவிட்டேனோ ?

      Delete
  3. மௌனம் கூட என்னவெல்லாம் செய்கிறது...! வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மௌனம் தான் சகோ எல்லாம் செய்கிறது.

      Delete
  4. உன் மவுனத்திற்கான அர்த்தத்தை தேடுவதிலேயே
    என் ஆயுள் கழிந்துவிடும் போல.

    மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்..!
    தென்றலே பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மௌனத்தை மொழிபெயர்க்க முடியாமல் தான் இப்படிங்க.

      Delete
  5. மௌனம் கவிதையில் பேசிவிட்டது.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  6. கலக்கல் கவிதை ஒவ்வரு வரியிலும் காதல் பேசுகிறது

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  7. வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete

  8. தென்னங்கீற்றசைய
    மெத்தையாய்
    உன் மடியிருக்க
    எதையாவது
    பேசித் தொலைக்காதே
    காதலுக்கு மயக்கம்
    தெளிந்து விடும்.

    உங்கள், "காதல் நனைத்த செல்லமான கோபம்" ரசிக்க வைக்கிறது தோழி! அழகு!!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  9. தேனென இனித்தது தென்றலின் கானங்கள்
    ஊனோடு உயிரும் உருகிடவே!.

    மிகமிக அருமை.
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.

      Delete
  10. கவிதைகள் அனைத்தும் அருமை தோழி.
    இவ்வரிகளை மிகவும் இரசித்தேன் .

    "உன் மவுனத்திற்கான
    அர்த்தத்தை தேடுவதிலேயே
    என் ஆயுள் கழிந்துவிடும் போல."

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றியும்.

      Delete
  11. கவிதைகள் எல்லாம் ரசிக்க வைத்தன என்றாலும் மூன்றாவது மனதை மயக்கி கட்டிப் போட்டு விட்டது சசி! அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க சகோ. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றியும்.

      Delete
  12. அருமையான கவிதைத் தூறல்கள்.. நன்றி,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. நல்ல கவிதைகள்.....

    பகிர்வுக்கு நன்றி தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. மெளனம் பேசியதே கவிதையாய், வருடி செல்லும் தென்றலாய்
    பார்வை ஒன்றே போதுமே ! பேச்சு எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. அழகான பாடலை நினைவு படுத்தியது உங்கள் பின்னூட்டம்.நன்றி தோழி.

      Delete
  15. அனைத்து கவிதைகளும் அழகு...

    ReplyDelete
  16. அனைத்து குறுங்கவிதைகளும் மிக அற்புதம் தென்றல்

    ReplyDelete