Monday 1 July 2013

அந்தி (அவன் )வரும் நேரம் !


உன்னை முழுவதுமாக
படித்து விட எண்ணுகிறேன்.
உனக்கு பிடித்தது
பிடிக்காதது... இப்படியாக...
உனக்கு என்னை 
பிடிக்கும் தெரியும்
எனக்கு உன்னை 
மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?

கனா காண இரவும்
நிலவும் தேவையில்லை
எனக்கு இப்போதெல்லாம்
உன் நினைவுடன்
இருப்பதே 
கனா காலந்தான்.

என்ன வித்தை கற்றும்
உன் விழிகளுக்கு முன்பு
என் வார்த்தை குழந்தைகள்
விளையாட மறுக்கின்றன.
பார்வையாலே மிரட்டும்
வித்தையை எங்கு கற்றாயோ ?

உன் வரவிற்கு 
காத்திருக்கும் பனித்துளியாகிறேன்
நீயோ சூரியராய் 
வந்ததும் எனை விழுங்கிவிட்டு
அனைவரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறாய்....

இளைப்பாற நிலவை
அழைப்பாய் அல்லவா..
வா ...வா அப்போது 
கவனித்துக்கொள்கிறேன்.

இதய வாசலுக்கும்
வானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்.

44 comments:

  1. ஆஹா.... அருமை..

    அந்தியோடு பிரியமானவனையும் ஒப்பிட்டு சொன்னதிங்கே...அழகோ அழகு....

    இருவருக்கும் பிடித்த ஒரே விஷயம்
    ஒருவரை ஒருவர் மட்டுமே என்பது ஒற்றுமை...

    பிரியமானவனை சூரியனை என்று சொன்னால்
    மரியாதை குறையும் என்பதால் சூரியரோ இங்கு...

    இளைப்பாற அழைப்பாய் அல்லவா அப்போது பார்த்து கொள்கிறேன் என்பதில் இருவேறு அர்த்தங்கள்...

    கேட்பவர்களுக்கு ஒன்றாகவும் சூரியராய்
    இருப்பவருக்கு வேறுவிதமாகவும் அர்த்தம் புரியும்...

    இதய வாசலுக்கும் வானுக்கும் கர்ணமடிக்கிறேன்
    விரைந்துவா இதிலும் என்ன ஓர் நயம் சசி...

    அந்தியும் சூரியரும் ஒப்பீடு ஒப்பில்லா
    ஒன்றாக எல்லோரும் பாராட்டும் ஒன்றாய்...

    என்றுமே வாழ்த்துகிறேன் தங்களின்
    அனைத்து எண்ணங்களும் அழகாய் ஈடேற...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  2. இதய வாசலுக்கும்
    வானுக்குமாய் கர்ணமடித்துக்
    கொண்டிருக்கிறேன்.
    அந்தியே விரைந்து வா
    அவனையும் அழைத்து வா...

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  3. விரைவாக வந்துவிடும்படி எங்கள் சார்பாகவும் தூதுவிடுகிறோம்...

    நல்லது
    அழகிய கவிதை

    ReplyDelete
  4. /என்ன வித்தை கற்றும்உன் விழிகளுக்கு முன்புஎன் வார்த்தை குழந்தைகள்விளையாட மறுக்கின்றன.பார்வையாலே மிரட்டும்வித்தையை எங்கு கற்றாயோ ?//

    அருமையான உவமை,

    //

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  5. இளைப்பாற நிலவை
    அழைப்பாய் அல்லவா...?
    வா... வா... அப்போது
    கவனித்துக்கொள்கிறேன்...!

    ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  6. /என்ன வித்தை கற்றும்உன் விழிகளுக்கு முன்புஎன் வார்த்தை குழந்தைகள்விளையாட மறுக்கின்றன.பார்வையாலே மிரட்டும்வித்தையை எங்கு கற்றாயோ ?//

    அருமையான உவமை..

    உங்க பாட்டில் பிழை உள்ளது. சொற்குற்றமில்லை, பொருட்குற்றமே!

    உங்களவரை "சூரியர்" என்கிறீர். அந்தியிடம் அவரை அழைத்து வர பணிக்கிறீர், அந்தி அழைத்து வருவது இரவை அல்லவா? இது முரண் அன்றோ?

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன். நன்றிங்க.

      Delete
  7. உவமைகளும் சொல்லிச் சென்றவிதமும்
    மிக மிக அருமை
    ஒரு காதல் காவியம் படித்த நிறைவு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.

      Delete
  8. .. உன்னை முழுவதுமாக
    படித்து விட எண்ணுகிறேன்.
    உனக்கு பிடித்தது
    பிடிக்காதது... இப்படியாக...
    உனக்கு என்னை
    பிடிக்கும் தெரியும்
    எனக்கு உன்னை
    மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?....

    அருமை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  9. ///உன்னை முழுவதுமாக
    படித்து விட எண்ணுகிறேன்.
    உனக்கு பிடித்தது
    பிடிக்காதது... இப்படியாக...///
    யாரையும் யாராலும் முழுமையாக படித்துவிட முடியாது எனபதுதான் உண்மை...கவிதை வழக்கம் போல அருமை

    ReplyDelete
    Replies
    1. யாரையும் யாராலும் முழுமையாக படித்துவிட முடியாது எனபதுதான் உண்மை.
      உண்மை தாங்க.

      Delete
  10. ம்... அழகு... தன்னவனைத்தேடும் ஒருபெண்ணின் தவிப்பு... புரிகிறது...,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  11. ''..இதய வாசலுக்கும்

    வானுக்குமாய் கர்ணமடித்துக்

    கொண்டிருக்கிறேன்.

    அந்தியே விரைந்து வா

    அவனையும் அழைத்து வா...''
    very nice.congratz,
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  12. அட என்ன ஒரு அழகான தேடல்..
    //இளைப்பாற நிலவை
    அழைப்பாய் அல்லவா..
    வா ...வா அப்போது
    கவனித்துக்கொள்கிறேன்.//

    ஹாஹா அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  13. வா அப்போது கவனித்துக்கொள்கிறேன்.//மிரட்டலோ?

    ReplyDelete
  14. " என்ன வித்தை கற்றும்
    உன் விழிகளுக்கு முன்பு
    என் வார்த்தை குழந்தைகள்
    விளையாட மறுக்கின்றன.
    பார்வையாலே மிரட்டும்
    வித்தையை எங்கு கற்றாயோ ?"

    அழகான வரிகள்.மிகவும் இரசித்தேன் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றியும்.

      Delete
  15. உன்னை முழுவதுமாக
    படித்து விட எண்ணுகிறேன்.
    உனக்கு பிடித்தது
    பிடிக்காதது... இப்படியாக...
    உனக்கு என்னை
    பிடிக்கும் தெரியும்
    எனக்கு உன்னை
    மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?

    அது சரி ;)))))))))))) !
    முடிந்தால் தணல் பறக்கும் காதல் கடிதம்
    வரைந்துள்ளேன் வாசித்துச் சொல்லுங்கள்
    பரிசாக ஆயிரம் பொற் காசுகள் கொடுக்க
    உள்ளனர் .அதாவது வெற்றி பெறுபவர்களுக்கு
    மட்டும் :)))))

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்துவிட்டேன்.

      Delete

  16. கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  17. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  18. // என்ன வித்தை கற்றும்
    உன் விழிகளுக்கு முன்பு
    என் வார்த்தை குழந்தைகள்
    விளையாட மறுக்கின்றன.
    பார்வையாலே மிரட்டும்
    வித்தையை எங்கு கற்றாயோ ?//

    ரசித்த வரிகள்.... நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete
  19. வணக்கம்...

    புதிய பகிர்வு...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html

    நன்றி...

    ReplyDelete
  20. இதய வாசலுக்கும்
    வானுக்குமாய் கர்ணமடித்துக்
    கொண்டிருக்கிறேன்.
    அந்தியே விரைந்து வா
    அவனையும் அழைத்து வா...
    /இரசித்தேன்! நன்றி!//

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.

      Delete

  21. வணக்கம்!

    அந்திவரும் நேரம்! அமுதக் கவிபடித்தால்
    முந்திவரும் காதல் முகிழ்த்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  22. இதய வாசலுக்கும்
    வானுக்குமாய் கர்ணமடித்துக்
    கொண்டிருக்கிறேன்...

    நன்றாக முடித்துள்ளீர்கள்...

    அழகு, முதல் வருகை...

    ReplyDelete