Tuesday 4 June 2013

செய்யும் தொழிலே தெய்வம் !


சோம்பிக் கிடத்தல் நலமன்றோ
சோகம் பெருகும் தினமன்றோ
செய்யும் தொழிலே தெய்வமென்று
செய்தால் வாராதே இழிவுமின்று

மண் உழுத விவசாயி
மனம் சொல்லும் (அவனே) மண்தாயி.

நூலிழையை சேர்த்து கட்டி
நூற்றிடுவார் தறியில் பூட்டி
மானம் காக்கும் தொழிலதுவும்
மனமுவந்து செய்யின் பலனதுவும்.

உப்பு காரம் சுவை கூட்டி
உண்டு வாழ நாள் கூட்டி
பலசரக்கு விற்கும் வியாபாரி
பார் எங்கும் சிறக்கும் புகழ்பாரி.

வான் தந்த மழையதனை
வளம் சேர்க்கும் நீரதனை
குளம் கிணற்றில் தேக்கிடவே
குடும்பத்துடன் பணி செய்திடவே
ஊற்றெடுக்கும் கிணற்று நீராமே
ஊர் போற்றும் நாள் தோறுமே.

மரத்தை தட்டித் தட்டி தச்சனுமே
மனக்கண் உருவத்தை அக்கணமே
கதவு சன்னல் அழகு வடிவாக
காண்போர் எண்ணம் நிறைவாக.

சிமெண்டு சல்லி செங்கல்லும்
சீராய் கலந்து கையள்ளும்
உயர்ந்து நிற்கும் வீடும் கோபுரமே
உணர்வோர் வாழ்வில் வீசும் சாமரமே.

தண்ணீர் ஊற்றி பிசைந்தெடுத்து
தனியொரு பாண்டம் செய்தெடுத்து
குயனவன் வாழ்வதுவே - மன
குளர்ச்சியடையும் செயலதுவே.

ஆற்றோர கோரையுந்தான்
ஆகிடுதே உறங்க பாயுந்தான்.

உண்டு உறங்கி செய்ய தாராளம்
உன்னத தொழில்கள் ஏராளம்
கண்டு கேட்டு செய்திடவே
கவலை தீரும் உய்திடவே.

உழைப்பீரே வாழ்வது உயரவே
உணர்வீரே உண்மை தெரியவே.

12 comments:

  1. அருமையான வரிகள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    உழைப்பே உன்னதம்...

    ReplyDelete
  2. உழைப்பீரே வாழ்வது உயரவே
    உணர்வீரே உண்மை தெரியவே.

    உழைப்பின் உன்னதம் ..!

    ReplyDelete
  3. //தண்ணீர் ஊற்றி பிசைந்தெடுத்து, தனியொரு பாண்டம் செய்தெடுத்து
    குயனவன் வாழ்வதுவே - மன குளர்ச்சியடையும் செயலதுவே.//

    ;)))))

    அனைத்துத் தொழில்களும் தங்கள் எழுத்தில் வளம் நிறைந்ததாக ... அருமை,. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. தொழில் புரிவதன் அருமை
    பெருமைகளை சொல்லிச்
    சென்ற விதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தொழிலதைத் தெய்வமாய்க்காண துளிர்த்திடும் வாழ்வுஎன்றே
    பலன்தரும் தொழிலின்மேன்மை பகர்ந்தனை பாட்டிலினிதாய்
    சுகம்தரும் தென்றலிங்கே தினந்தரும் செய்திநன்றே
    மனம்நிறை வாழ்த்துபலவே மகிழ்வுடன் தந்தேன்தோழி!

    த ம. 4

    ReplyDelete
  6. மண் உழுத விவசாயி
    மனம் சொல்லும் (அவனே) மண்தாயி

    அருமை வரிகள்

    உழைப்பின் உன்னதம் சொல்லும் கவிதை ரசித்தேன்

    ReplyDelete
  7. உழைப்பின் பெருமை சொல்லும் சிறப்பான கவிதை......

    பாராட்டுகள்.

    ReplyDelete