Sunday 2 June 2013

விழித்திரையில் நூறு கனா !



செவ்விளநி பறிக்கையில
செவ்வந்தி இதழ் விரிக்கையில

ஜன்னலோர மொட்டு ஒன்னு
ஜதிநயத்யோட தயங்கி நின்னு

பாடலொன்னு முனகுதம்மா
பாயும் நதி பாதை விலகுதம்மா

நதியோர நாணலெல்லாம் வாடுதடி
நங்கை முகம் தேடி தினம் பாடுதடி

பாடும் ஊமைக்குரல் கேட்டிருச்சா ?
பாவனைப் பொருள் விளங்கிருச்சா ?

கோலமிடும் பூங்குயிலே பாரேன்
கோடி முறை என் முகத்தை

காத்திருக்கேன் ராப்பகலா
காவலேன்டி நீ வேர்பலாவா ?

விழித்திரையில் பலநூறு கனா
விடியலிங்கே எனக்கு பகல் கனவா .

31 comments:

  1. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. உன்கவியை என்னசொல்ல
    ஊறுதடி களிப்பெனக்கு
    யாருனது வாத்தியாரு சொன்னா
    நானும்என்னை தேத்திக்கலாம்
    பாடுறியே நல்லபாட்டு
    தாளமிங்கை நானும்போட்டு
    சேர்ந்திங்கே பாடிடவே
    தூண்டுதடி உன்படைப்பு...

    மிக்க அழகான கவிதை தோழி!
    ரொம்பவே ரசித்தேன். மகிழ்ந்தேன்.
    வாழ்த்தினேன்!...

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. அழகான உங்க பின்னூட்ட வரிகள் தான் தோழி எழுதவைக்கின்றன. நன்றி தோழி.

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அழகு வாழ்த்துக்கள் சசி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. விடியலிங்கே எனக்கு பகல் கனவா
    >>
    விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகிட்டுது. நீ இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கினா தெரியாது. ஜன்னலையாவது தொறந்து பாரு வெளிச்சம் கண்ணை குத்தும்

    ReplyDelete
    Replies
    1. தென்றல் சசி கொடுத்து வைச்ச மகராசி கனவுகாணவும் அவங்களுக்கு நேரம் கிடைக்கிறது பாவம் அவரின் அப்பாவி கணவர்தான் காலையில் அவருக்கு காபி,டீ கட்டு ஆகிறது

      Delete
    2. இருவரும் உறங்கியது போதும் எழுந்திருங்க...

      Delete
  7. //கோலமிடும் பூங்குயிலே பாரேன் கோடி முறை என் முகத்தை//

    ;)))))

    பாடல் மிகவும் அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  8. அழகு வரிகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. மனம் திறந்திருந்தால் விடியல்
    மனக்கதவு தட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. தலைப்பே நல்ல கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. ஆஹா... காதல் கதை ஒண்ணுக்கு தலைப்பு என்ன வெக்கலாம்னு ரொம்ப யோசிச்சுட்டிருந்தேன். இந்தக் கவிதைத் தலைப்பே சூப்பரா இருக்கு. நன்றி! வரிகளும் ரசனையா வந்து விழுந்திருக்கு. தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. கனவுகளும் கற்பனைகளும் அருமை ..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. நீ வேர்பலாவா ?அருமை ..!

    ReplyDelete
  15. காவலேண்டி நீ வேர்பலாவா.....

    ரசித்தேன்.

    தொடரட்டும் கவிதைகள்.....

    ReplyDelete
  16. கொட்டும் பூவழ்கு கோலவிழியழகு மெட்டுக்கு இட்டது போல் மேனி நிறை சந்தனமாய் கொட்டி விட்டாய் 1000 பூக்கள் கோடி முறை சொல்வேன் குறைவிலாது நீ வாழ்க அன்புடன் ஆரா

    ReplyDelete