Wednesday 12 June 2013

பாக்காம போறியே !

 
ஆத்தோர நாணலுந்தான்
அவன் வரவை கூறிடுதே

பறிச்சி வைச்ச மொட்டெல்லாம்-திரும்பி
பார்க்கும் முன்னே மலர்ந்திடுதே

முடிஞ்சி வைச்ச கனவினிலே-சொல்ல
முன்னூறு மீதமுண்டு....

மரநிழலும் காத்திருக்கு
மனம் முழுக்க ஆசையிருக்கு

முறைச்சிப் பார்த்து போறவறே
முன்னெதிரே வந்தாயென்ன

முளைப்பாறி கட்டி வச்சேன்-உன்
முன்கோபம் தீர்ந்திடவே

நாலு வார்த்த பேசி போனா-உசுர
நாள பொழுது தாங்கிடுமே

காக்க வச்சி பார்த்திருந்தா-மனசு
காயம் பட்டுப் போகுமய்யா.

சேர்த்தனைச்ச சேறாலே
தேங்கி நிக்கும் நீரய்யா-உனக்கு

பார்த்துவச்ச பொண்ணு இவளை
திரும்பி பார்க்காம போவதேன்யா ?

30 comments:

  1. அடேங்கப்பா இம்புட்டு ஆசையோடு காத்திருக்க
    யாருயா இவக பாக்காமல் போறது !!!!........:))))
    அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் என் தோழி .

    ReplyDelete
    Replies
    1. ஹஹ யாருங்க காத்திருப்பது ?

      Delete
  2. கவிதையின் ஒவ்வொரு வரியிலும் ஆசை, பாசம், நேசம் நிறைந்து ஓடுதே.. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி தோழி.

      Delete
  3. நான் போய் கூட்டி வரேன் தங்கச்சி

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து வீட்டு பொண்ணுக்குத்தான் பரிசம் போட்டிருக்காங்க இருங்க அவளிடம் சொல்கிறேன்.

      Delete
  4. காக்க வைப்பதும் காதலில் அழகுதானே? ''நாத்து நட்டுக் காத்திருந்தா நெல்லு கூட வெளஞ்சிருக்கும்... காக்க வச்சிக் கன்னி வந்தா காதலுண்டா கேட்டுச் சொல்லு' என்று நினைத்தாலே இனித்த காலத்தில் நான் கேட்டேனே.... இப்போ எப்படி இருக்கு" என்கிறானோ!

    ReplyDelete
    Replies
    1. எந்த காலத்திலும் காக்க வைப்பது இருக்கும் போல.

      Delete
  5. என்ன ஒரு பிரியம்...! அக்கறை...!! உரிமை...!!!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    (கடிதம் என்னவாயிற்று...?)

    ReplyDelete
    Replies
    1. எழுதினேன் எழுதுகிறேன்... எழுதிவிடுவேன் சகோ ஹஹஹ.

      Delete
  6. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  7. யாரவது ஒரு இசையமைப்பாளரிடம் மெட்டமைக்கச் சொல்லுங்கப்பா...அருமையான மெலடிப் பாட்டுக்கான வரிகள் தயாராய் இங்கே.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  8. பறிச்சி வைச்ச மொட்டெல்லாம்-திரும்பி
    பார்க்கும் முன்னே மலர்ந்திடுதே

    மலர்ச்சி மலரட்டும் வாழ்வில்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. நான் வேண்டுமானால் துர்து போய் சொல்லட்டுமா சசிகலா...?

    ReplyDelete
  10. Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழி.

      Delete
  11. முடிஞ்சி வைச்ச கனவினிலே-சொல்ல
    முன்னூறு மீதமுண்டு....

    அருமை... கிராமத்து வாசம் மனதை தொடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. சரளமான வார்த்தைகளில்
    தெரியுது அன்பின் ஆழம்
    அதைச் சொன்னவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  13. \\சேர்த்தனைச்ச சேறாலே
    தேங்கி நிக்கும் நீரய்யா-உனக்கு
    பார்த்துவச்ச பொண்ணு இவளை
    திரும்பி பார்க்காம போவதேன்யா ?\\

    அட..என்ன ஒரு ரசனையான உவமை. அசந்துபோகிறேன். பாராட்டுகள் சசி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  14. என் முகப்பில் உங்கள் பக்கம் வராததால் நிறைய பார்க்காமல் போய்விட்டேன் ...........

    அற்புதமான கவி ......
    சந்தமும் சிந்தும் ......
    சிந்தனையை தூண்டி .....
    சிலிர்க்க வைக்கிறது தோழி .......

    இப்படி உருக உருக .........
    மணக்க மணக்க பாடியபின்னும் ..

    .பார்க்காமல் போகமுடியுமா ? பெண்ணின் ஏக்கம் தொக்கி நிற்கும் கவி வரிகள் பாராட்டுகள் தோழி

    ReplyDelete
  15. mmmm-----


    nallaaa irukku..

    ReplyDelete