Tuesday 20 November 2012

நெருங்காதிரு....!



சோம்பல் முறித்து
வரும் சூரியனும்
சோலைப்பூவை முகர
வரும் வண்டினமும்
மனதை மயக்கும்
மெல்லிசையும்
தொட்டழைக்கும்
தென்றலும்....
மெட்டெடுக்கும்
இலையசைவும்
தோகைவிரித்தாடும்
மயிலும்....
தொய்வில்லாதோடும்
ஆற்றுப்படுகையும்
வாழ்வு தாபத்தோடு
ஓடும் மீனும்...
தாவியணைக்கத்துடிக்கும்
கொக்கும்....
தத்தி நடக்கும் வாத்தும்
மழலை தரையில்
 பழகும் நீச்சலிலும்
அன்பாய் தலைக்கோதும்
மரக்கிளையிலும்
அடித்தோடி மறையும்
அலைக்கடலிலும்
இவைகளுடனான
என் ஸ்பரிசம்
நீங்காதிருக்கவே....என்னோடு
நெருங்கவிடாதிருக்கிறேன்
உனதன்பை.

26 comments:

  1. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. என்னவொரு காரணம்
    அன்பென்ற ஒன்றினை
    இழந்தால் மட்டுமே இவை
    அத்தனையும் பெறமுடியுமோ..

    அழகாகத்தான் இருக்கிறது
    சொன்ன அத்தனையும்
    இதுதான் உலக நியதியோ
    பாராட்டுக்கள் தங்களுக்கு...

    வாழ்வியிலை அப்பட்டமாக
    எல்லோரும் அறிய தெளிவாக
    விளக்கிய தங்களுக்கு அனைத்தும்
    கிடைக்கவே என் அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. கவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அழகிய சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரி ......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. ரசிக்கும் வரிகளில் ஆழமான அன்பு....:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete


  8. இயற்கையை சொல்லும் வரிகள் ரசித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதை அழகு சகோதரி

    ReplyDelete
  10. அதீதமான அன்பை சொல்லும் அழகான கவிதை. அருமை.

    ReplyDelete
  11. உனது அன்பு என்பது காதலைக் குறிக்கிறதா? காதல் வந்தால் உலகமே மறந்து விடும் என்று காதலின் சிறப்பைச் சொல்கிறது கவிதை, சரியா? :))

    ReplyDelete
  12. தென்றலே தென்றலாய் உள்ளது

    ReplyDelete
  13. ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...
    tm6

    ReplyDelete
  14. நல்ல வரிகள். இனிய வாழ்த்து.
    ஏன் இயற்கையை அனுபவிக்க ஒரு அன்பை நிராகரிப்பதா?....
    நெருங்க விடாது விலக்குவதா????
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. அன்பைவிட...
    இவையெல்லாம் அழகா சசிகலா...?

    ReplyDelete
  16. எப்போதும்போல சிறப்பு சசி !

    ReplyDelete

  17. /// இவைகளுடனான
    என் ஸ்பரிசம்
    நீங்காதிருக்கவே....என்னோடு
    நெருங்கவிடாதிருக்கிறேன்
    உனதன்பை.//

    வளம் செறிந்த கற்பனை ! அழகு நன்று!

    ReplyDelete
  18. சொல்லிச் சென்றவிதமும்
    முத்தாய்ப்பும் மனம் தொட்டது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete