Tuesday, 13 November 2012

மகிழ்வனைத்தும் குத்தகையெடுத்த தினம் !ஆணும் பெண்ணும் சரிசமம்
அதை உணர்த்தும் இத்தினம்

மலராய் தொடுதல் இருக்குமே
மன்னிப்பும் சரளமாய் வேண்டுமே

அன்பாய் பார்வை விரியுமே
அகிலமே அதுவென நினைக்குமே

தீயை அணைக்கும் துணிவுமே
அஃதே துரத்தியடித்ததே பகையுமே

பட்டாம்பூச்சியாய் எண்ணம் விரியுமே
புள்ளிமானாய் துள்ளியோடி மகிழுமே

கொஞ்சியழைக்கும் உறவையே
கூடி வாழும் ஒரு கூட்டிலே

அறியாமல் இருந்த அறிவுமே-இன்று
அறிந்தும் மூடர் ஆவதேன் ?

அன்னை மடி சொர்க்கம் என்றானபின்
வளர்ந்து துன்ப வலையில் வீழ்வதேன்?


பிஞ்சு மழலையர்க்கு ஓர் தினம்
மகிழ்வனைத்தையும் குத்தகையெடுத்த தினம்.


25 comments:

 1. சிறப்பான வரிகள்...

  முடிவில் நல்ல கேள்விகள் சகோதரி...

  குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
  tm2

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க உங்க வீட்டு குழந்தைக்கும் நான் கூறியதாக சொல்லுங்க.

   Delete
 2. மழலையர் தின வாழ்த்து சசி.
  தீபாவளி வாழ்த்து என்வலையில் போட்டிருந்தேன்.
  அது உமக்கும் சேரும்.
  இக்கவிதை 4வது வரி விளங்கவில்லை சசி.
  அவசரத்தில் போட்டதோ!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கால குழந்தைங்க சண்டையிட ஆரம்பிச்சா சீக்கிரத்தில் முடிபதில்லை அதனால மன்னிப்பு என்ற பக்குவமும் தெரியனும்னு சொன்னேன்.

   Delete
 3. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதானே...
  இதை உணர்ந்தவர்கள் மட்டுமேதானே மனிதர்கள்...

  அத்தகைய செல்வங்களுக்கும் ஒரு தினமாம்...
  அதை சிறப்பாய் போற்றுவோம் பாகுபாடில்லாமல்...

  ஜாதி மதம் பார்ப்பவர்கள் கூட இந்த மழலைகள்
  விஷயத்தில் மட்டுமே யாருடைய குழந்தை என்ற
  வித்தியாசம் சிறிதும் பார்க்காமல் கொஞ்சுவார்கள்...

  குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று சொல்லும்
  அளவுக்கு உயரிய இடத்தில் இருக்கும் பொக்கிஷம்
  அல்லவா வாழிய இத்தினத்தில் பல்லாண்டு வாழிய
  என்றே மனதார வாழ்த்துகிறேன் குழந்தைகளை....

  பாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு இனிதான
  பொன்னான நாளை அழகாய் வாழ்த்தியமைக்கு..

  ReplyDelete
  Replies
  1. அழகாய் வாழ்த்திய விதம் அழகு.

   Delete
 4. தலைப்பும் சொல்லிப்போனவிதமும்
  முடித்த விதமும் மிக மிக அருமை
  குழந்தைகள் தின சிறப்புக் கவிதை மிகச் சிறப்பு
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அதுசரி... சரளமாய்-ன்னு வரவேண்டிய வார்த்தைய தப்பா டைப் பண்ணினதை வேதா கேக்கறாங்க. என்னா சமாளிபிகேஷன் தென்றல்? மழலையைர் தினத்தில் அருமையான சிந்தனையைத் தூண்டும் நல்ல கவிதையைத் தந்திருக்கீங்க. உங்கள் குழந்தைகளுக்கும். (வளர்ந்த குழந்தையான) உங்களுக்கும் என் இதயம் நிறைந்த குழந்தைகள்தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. குழந்தைகள் தினத்தில் அருமையான பாடல். நன்று.

  ReplyDelete
 7. குழந்தைகள் தின சிறப்பு கவிதை மிகச்சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 8. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  மிக வேகமான திரட்டி
  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 9. பட்டாம்பூச்சியாய் எண்ணம் விரியுமே
  புள்ளிமானாய் துள்ளியோடி மகிழுமே

  குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள் ...!

  ReplyDelete
 10. மகிழ்வனைத்தையும் குத்தகையெடுத்த தினம்.

  குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. கவிதை சிறப்பு...குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. குழந்தையைப் போலவே
  அழகிய கவிதை சசிகலா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. குழந்தைகள் தினத்தன்று
  அவர்களுக்கான
  சிறப்பான கவிதை....
  வாழ்த்துக்கள் தங்கை சசி...

  ReplyDelete
 14. எளிமை இனிமை அருமை

  ReplyDelete
 15. ‘’பிஞ்சு மழலையர்க்கு ஓர் தினம்
  மகிழ்வனைத்தையும் குத்தகையெடுத்த தினம்.’’

  முத்தாய்ப்பான வரிகள்! பாராட்டுகள்!

  ReplyDelete
 16. அன்பைமட்டும் போற்றிப்பாடி
  அறிவையாடையாய் அணிந்தே
  அகிலிலென்ன அலைந்துதேடி
  அகஅழுக்கின்றி வாழ்ந்தகாலம்!

  அம்மாவின் முந்தானைதனைபற்றி
  அப்பாவிடம் செய்தி கொண்டுசேர்த்து
  அடுத்தமுறை முதல் மார்க்கென அழுது
  அட்டையில் கைஎழுத்தைவாங்கியோடி
  அடிபடாமல் தப்பிமகிழ்ந்த பொன்நேரம்!
  அரைாள் விடுப்பில் ஆற்றில்மீன் பிடித்து
  அவி்ந்தவியாமல் சுட்டுப் பகிர்ந்த நினைவு!
  அடைக்கலான் குருவிபிடித்து அதைவளர்த்து
  அதுபறக்க மகிழ்ந்து நின்ற அக்கணங்கள்
  அழகு அழகு எல்லாமே அழகாகத் தெரிய
  அறிவு அறிவென இன்றைய மழலைகள்
  அனைத்தையும் தொலைத்து பொதிமாடாய்
  அக்கினிப்போர் நடத்த ஓடும் இந்தக்காலம்!
  அத்தனையுமெதற்காய் அரைஜாண்வயிறுக்கா?
  அதிகப்படியான தேடலும் ஆசையும் நமையாள
  அன்புச்செல்வங்களை இயந்திரமாய் உருமாற்றி
  அன்பில்லா உலகின் அங்கமாய் மாற்றுகிறோம்
  வாழ்த்துக்கள் அன்புச் செல்வங்களுக்கு
  வணக்கங்கள் கவிதை தந்த தமிழுக்கு!

  ReplyDelete
 17. மழலை நம் மடியில் இருப்பதை விட மழலை மடியில் நாம் இருப்பது மிகவும் சிறந்ததாய்/

  ReplyDelete
 18. அருமை!
  நன்றி!

  ReplyDelete
 19. குழந்தைகளை முதலில் குழந்தைகளாகக் கொண்டாடுவோம் எதையும் திணிக்காமல் !

  ReplyDelete