Monday 5 November 2012

புயலோடு ஓர் பயணம் !



புயலின் விரல்பிடித்து
தெருக்களின் புழுதியில்
முகம் படாது பூகம்பமாய்
கிளைக்கு கிளை தாவி
அலைகளை அன்னார்ந்து
பார்க்க வைத்து...
ஆகாயத்தில் கண்ணாமூச்சியாடி

காவிய மண்டபங்களின்
கதைகளை புரட்டிப்பார்த்து'
கண்ணகியின் சிலம்பணிந்து
காவிரியில் நீராடி...
கம்பனின் கவிகேட்டு
கட்டாந்தரையையும் ஆராய்ந்து
வரலாறுகளை திரும்பப்பார்த்து.

மின்சாரக் கம்பிகளில் நடந்து
மீன் பிடிக்கும் வலையை போர்த்தி
மரங்களின் வேர்களில்
மருதாணி பூசி மகிழ்ந்து
இடி மின்னலை அழைத்து
இன்முகமாய் நலம் விசாரித்து
இரண்டொருநாள் சுகம் போதுமென
இயல்பாகவே திரும்பியது தென்றலும்.

18 comments:

  1. தென்றலுக்கு சில நேரம் புயல் கூடப் பிடிக்கிறதோ?

    நல்ல கற்பனை...

    ReplyDelete
  2. இனியும் இப்படித்தான் செல்லும்
    மீதமுள்ள அனைத்து நாட்களும்...

    மின்சார கம்பியில் நடந்து மீன்
    பிடிக்கும் நிலையும் மாறவேண்டும்...

    மீன் பிடிக்கும் வளையும் மாறியே
    மீன்கள் மட்டுமே இருக்கவேண்டும்...

    இலையும் மாறி வேர்களில் மருதாணி
    இப்படி இருந்தாலும் நன்றாக இருக்குமே...

    இடியும் மின்னலும் இனி விருந்தாளி இல்லை
    நம் குடும்பத்தில் ஒன்றான பின்னே...

    நல்லவர்களுக்கு காலமில்லையே அதனால்தானோ
    தென்றலுக்கு கூட இரண்டொரு நாள் இங்கே...

    என்னவொரு சிந்தனை பெருந்துளிகள் சசி கலா
    சீசனுக்கு வாராத என்றுமே சுரக்கும் ஜீவநதியா...

    பாராட்டுக்கள் என்று சுலபமாக சொல்லி
    விடாமல் வாழ்த்தியே வாழ வேண்டுகிறேன்...

    ReplyDelete
  3. தெருக்களின் புழுதியில்
    முகம் படாது பூகம்பமாய்
    கிளைக்கு கிளை தாவி
    அலைகளை அன்னார்ந்து
    பார்க்க வைத்து...

    இடி மின்னலை அழைத்து
    இன்முகமாய் நலம் விசாரித்து
    இரண்டொருநாள் சுகம் போதுமென
    இயல்பாகவே திரும்பியது தென்றலும்.

    கற்பனை வரிகள் ரசிக்க வைக்கின்றன

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை வரிகள் சகோ...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  5. கிளாஸ். கவிதை.நல்ல படைப்பு.
    த.ம. 4

    ReplyDelete
  6. புயலின் அகோரப் பசித் தாண்டவம்
    என்னெவெல்லாம் செய்கிறது ....
    தொடுத்த விதம் சுகம் !

    ReplyDelete
  7. இயல்பானதாகத் தெரியவில்லை! என்றும் போல் புயலாகத்தான் வந்துள்ளது தென்றல்!

    ReplyDelete
  8. புயலின் கை பிடித்து நடந்ததா தென்றல்? ரெண்டு நாள் புயல் தென்றலை ஆகாயத்துல பறக்க வெச்சு கண்ணகியோடயும் கம்பனோடயும் பேசவெச்சு என்னல்லாம் விளையாடியிருக்கு... அதுசரி... தென்றலுக்கு எதுவும் ஆயிடலை தானே... ஹி... ஹி....

    ReplyDelete
  9. சிந்தனைத்துளிகள் அற்புதம் புயலின் பசித்தாண்டவத்தை அழகாக தொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  10. பூந்தென்றல் புயலானதோ?

    ReplyDelete
  11. உடன் பயணித்து மகிழ்ந்தேன்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தென்றல் புயலா மாறிடுச்சோ?! நீலம் புயலுக்கு சென்னை பட்ட பாடு போதும்மா நாத்தனாரே!

    ReplyDelete
  13. "தன்னால் தள்ள முடியாத கப்பலைத் தள்ளி, ஒதுக்கி" வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாமோ! அல்லது, "காவேரியைச் சென்னைக் கரைக்கு அழைத்து வந்து"....! :))

    ReplyDelete
  14. ‘தென்றலின்’ பயணத்தை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. தென்றலின் புயல் பயணம் ...!

    ReplyDelete