Friday 2 November 2012

வேண்டவே வேண்டாம் வேறெதும் !


கலைந்தது கலைந்தது
நினைவும் கலைந்தது
தொடர்ந்தது தொடர்ந்தது
கவலை தொடர்ந்தது!
தொலைந்தது தொலைந்தது
 நிம்மதி தொலைந்தது
சிரிக்குது சிரிக்குது
காலம் கைகொட்டிச் சிரிக்குது!

வேகுது வேகுது
நெஞ்சம் வெம்பி வேகுது
கொடியது கொடியது
பிரிவுகள் பெருங்கொடியது!
உருளுது உருளுது
எண்ணமெங்கோ உருளுது
உடையுது உடையுது
இதயகண்ணாடி உடையுது!

நின்றது நின்றது
 உயிர் துடிப்பெல்லாம் நின்றது
முளைத்தது முளைத்தது
 கேள்விகள் முளைத்தது!
களைத்தது களைத்தது
நினைத்துக் களைத்தது
அணைத்தது அணைத்தது
கடமைகள் அணைத்தது!
போதும் போதும்
அன்புமட்டுமெனக்குப் போதும்
வேண்டாம் வேண்டாம்
வேறெதும்  வேண்டாம்!

35 comments:

  1. 'வேண்டவே வேண்டாம் வேறெதுவும் வேண்டாம்' என்கிறீர்கள். அழகிய கவிதைகள் கூடவா?

    அருமையான கருத்துக்கும், சொல்லாட்சிக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நான் வேண்டாம் என்றாலும் விடாது எனை கவிதைகள். நன்றிங்க.

      Delete
  2. அன்புக்கு நிகர் வேறது..
    அதனால் போதும் அன்புமட்டும் எனக்கு
    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. அன்பை போதிக்கும் கவிதை

    ReplyDelete
  4. Replies
    1. அன்பே அனைத்தும்...

      அருமை... வாழ்த்துக்கள்...

      tm5

      Delete
  5. முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  6. நினைவு கலைந்து, நிம்மதி தொலைந்து, தொடர்ந்த கவலையை பிரிவின் கொடுமையால் எண்ணங்களின் உருளலில் இதயம் உடைந்து நெஞ்சம் வெந்து போவதால் உயிர்த்துடிப்பே நின்று கேள்விகள் எழுந்து கடமைகள் முடிந்து விட்டதால் அன்பு மட்டும் போதும் என்கிறீர்கள். இல்லையா!! (ஷ்.... அப்பாடா... இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்!) :)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஏன் இப்படி பொறுமையா படிங்க.

      Delete
  7. நல்ல தொரு படைப்பு! அன்பே சிவம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  8. அன்பு மட்டும் இருந்துவிட்டால் போதும் எல்லாவற்றையுமே சாதித்துவிடலாமே! அருமை... த.ம. 6

    ReplyDelete
  9. கலக்குது கலக்குது கவிதை கலக்குது!

    ReplyDelete
    Replies
    1. மகிழுது மகிழுது நெஞ்சம் மகிழுது.

      Delete
  10. அன்பே அகிலத்தை வெல்லும்
    அதனால் அதுவே வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. அன்புக்கும் அடிமை ஆகதோர் அகிலத்தில் உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. சுற்றுது சுற்றுது சிந்தையில் சுற்றுது உங்கள் கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா மிக்க நன்றிங்க.

      Delete
  13. நல்ல கவிதை.கேள்விகள் முளைக்கையில் மற்றதெல்லாம் தானாகவே தேடல் முளைக்கும்,தேடல் முளைக்கையில் வேண்டாம்,வேண்டாம் எனச் சொன்னதெல்லாம் நின்று போகக்கூடும்.நன்றி வணக்கம்/

    ReplyDelete
    Replies
    1. தேடல் இருக்கின்ற வரையிலே வாழ்வு சுகமாகும் அருமைங்க நன்றிங்க.

      Delete
  14. அன்பிற்கு முன் வேறெதுவும் வேண்டாம் தான்

    ஆனால் இது போல் கவிதைகள் நிறைய வேண்டும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அன்பொன்றேபோதுமென்ற கவியே
    வேறேதுமுண்டோ உலகவாழ்வில்?
    நூறூவழுக்காடாய் அன்பு வாழின்
    அதற்காய் வாழ்ந்து மரித்தல் பேரின்பம்!
    மனதிலொன்றைவைத்து வலைவிரித்து
    கா்திரு்போரின் நடிப்பு அன்பாவதில்லை
    பளபளவென அழகாயாடும் பாம்பவர்
    அது அன்பல்ல ஆசைகாட்டும் மோசம்
    சிலர் தனையுமறியார் அன்புமறியார்
    தான்நினைத்தது நடக்காமல்போனால்
    கருத்திலும் கபடுரைப்பார் உண்மையன்பு
    வாழும் வாழவைக்கும் மெழுகுவர்த்தியாய்!!
    அன்புபோல் கவியின் கவிதையும் அழகு!!!

    ReplyDelete
  16. "அன்புமட்டுமெனக்குப் போதும்" அன்பின் முக்கியத்துவத்தைத் சொல்லும் நல்ல கவிதை.

    ReplyDelete
  17. சரளமாகவும் கருத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது, நன்று.
    //கொடியது கொடியது
    பிரிவுகள் பெருங்கொடியது!//
    எல்லா வரிகளிலும் கலைந்தது,தொடர்ந்தது,தொலைந்தது என்று வினைச் சொற்களாக அமைந்திருக்கையில் கொடியது மட்டும் என்று உரிச் சொல்லாக அமைந்திருக்கிறதே!

    ReplyDelete