Sunday, 18 November 2012

காதல் தூது !பூபோட்ட தாவணியில்
புது மஞ்சள் சிரிக்குதடி
தீபாவளியும் போச்சுதடி
தினுசா தான் அசத்துறியே..

புதுசாத்தான்  உடுத்திகிட்டு
பொம்மலாட்டம் போடுறியே
திசையளந்தது போதுமடி
கொஞ்ச(சு)மெனை திரும்பித்தான்
                                                 பாரேன்டி.....

காத்திருக்கிறேன் காவகாரனாட்டம்
போவதெங்கே நீயும் ஓடும்
தண்ணியாட்டம்....
மனசக் காட்டத் தெரியளடி
நானும் அலைந்தேனே
                        குடிகாரனாட்டம்...

சந்தையிலே பார்க்கையிலே
சொந்தமாக்க துடிக்கிறேனடி
பந்தபாச உள்ளவந்தான்-நானும்
பரிசம் போட வரட்டுமா ?

முன்னே  பின்னே வந்து நின்னு
பல் இளிக்க தெரியாதேடி-நீ
போகும் வழி பூத்திருக்கேன்
போதை தரும் பார்வையைத்தான்
                                    தூதுவிடேன்....!

31 comments:

 1. adengappaaaaaa.....


  nalla kavithai!

  ReplyDelete
 2. இப்படி சொல்லியுமா இறக்கமின்னும்
  பிறக்கவில்லை இந்த அப்பாவியின்
  மேல் யோசித்து பார்க்கவும் நேரமில்லை
  சீக்கிரமா முடிவு பண்ணி சேரும் நாளை
  சொன்னாலே சொந்தமோடு உன்னை
  நீ வாழும் வீட்டிற்கு அழைத்து வந்து
  இருவரும் வாழ்வோம் இன்பமாக என்றுமே...

  அத்திருநாளை பார்த்து காத்து நின்னேனடி
  மனதுள் வைத்த எண்ணத்தை வெளியில்
  சொன்னால் தானே எதுவுமே தெரியுமடி...
  பேசாத காதல் என்றும் சொர்கத்தை சேராது
  பேசினால் தானே அன்பிற்கும் பலனுண்டு
  அந்த பலனை நீ தரும் நாளே எனக்கு திருநாள்...

  தொடராக எழுதினேன் அருமையாக இருக்கிறது
  ஆரம்பமும் முடிவில்லா முடிவும் சசி கலா
  அழகாக சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்கள்
  வளரட்டும் இதுபோன்ற விதவிதமான படைப்புகள்
  அத்தனையும் ஆரவாரமில்லா திருவிழாக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

   Delete
 3. இன்னுமா தாவணிகள் இருக்கு???

  ஒரு காலத்தில் தாவணிதான் தமிழக பெண்களின் அடையாளமாக இருந்தது
  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என்று சிவாஜி உருகியதும்
  பாவாடைக் கனவுகள் பாக்ஜியராஜ் பட டைட்டில்களும் அதுலாம் ஒரு காலம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. கிராமத்து பாடல்..சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. இந்த பக்கம் இன்னைக்கு காதல் மணம் பயங்கரமா வீசுதே ...அக்கா

  ReplyDelete
  Replies
  1. அப்படியாப்பா ?

   Delete
 6. பார்வை மட்டும் போதுமே...!

  அழகிய வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 7. வரிகள் அழகு...

  ரசித்தேன்...
  tm5

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. கிராமிய மணம் வரிகளில் துள்ளி விளையாடுகிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. பார்வைகள் தீண்டிக் கொண்டால்
  பூமாலை சூட்டிக் கொள்ளதான்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 10. பாவாடை,தாவணி கதைகளிலும் கவிதைகளிலும் தான் படிக்க முடியுது..பார்க்க முடியலை..காதலை கொஞ்சு தமிழில் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்கும் கவிதை..அருமை சசி.

  ReplyDelete
 11. காதல் தூது......அட

  ReplyDelete
 12. தங்கச்சிக்கு ஒரு பாவாடை தாவணி பார்சல்

  ReplyDelete
 13. அழகிய காதல் தூது சகோ....

  ReplyDelete
 14. மனம் மயக்கும் பாடல் சகோதரி...

  ReplyDelete
 15. கிராமதுது காதல் பொறுமையானது நேர்மையானது அவசரமில்லாதது

  ReplyDelete
 16. தாவணிக்கனவுகள்! இரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
 17. தாவணிக்கனவுகள்! தாலாட்டும் நினைவுகள் ஆவனிப் பிறக்கட்டும் அழகுமலர் மணக்கட்டும்

  ReplyDelete
 18. அன்புடையீர்,

  வணக்கம்.

  நல்லதொரு அழகான படைப்பு. மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள்.

  தங்களின் வலைத்தளம் பற்றியும்
  தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
  நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
  வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
  பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/11/2.html

  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  தங்களுக்கு என்
  மனமார்ந்த பாராட்டுக்களும்
  அன்பான வாழ்த்துகளும்.

  அன்புடன்
  வை.கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா. வலைச்சரமும் சென்று வந்தேன் மகிழ்ந்தேன் நன்றியையும் உரைத்தேன்.

   Delete
 19. பார்வையாலே துாது...
  ம்ம்ம்.... நடக்கட்டும்.
  கவிதை அழகாக இருக்கிறது சசிகலா.

  ReplyDelete
 20. முன்னே பின்னே வந்து நின்னு
  பல் இளிக்க தெரியாதேடி

  அழகான சந்த நயத்துடன் எழுதுவது உங்களுக்கு வெகு இயல்பாய் அமைந்துவிடுகிறது சகோதரி

  ReplyDelete