Wednesday 28 November 2012

வார நாட்களில் !


ஞாயிறு ஒளியாய் வந்து நிற்கும்
திங்கள் மான்போல் பார்த்திருக்கும்
செவ்வாய் மயிலாய் ஆடிப்போகும்
புதன் புண்ணியர் வாழ்த்துரைக்கும்
வியாழன் இசையைச் கொண்டுவரும்
வெள்ளி முளைத்து சிரித்து மகிழ்கைியில்
சனி மட்டும் கோபம் கொண்டதனால்
பிரிவெழுதி மீண்டும் ஞாயிறு வரை....

காதல் காத்திருந்து வாடி பார்த்திருந்ததால்
விதி என்வழி என்றுரைக்கும்
நவகிரகமும் சுற்றுகின்ற புள்ளி
 'காதல்' பொய்யில்லை.

அள்ளி அணைக்கப்போகையிலே
மேகம் போய் அணைக்கிறது
துள்ளிப்பிடிக்க நினைக்கையிலே
நீலவானம் தடுக்கிறது
நீர்துளியாய் வீழ்ந்து பார்த்தால்
பூமி உண்டுவாழ்கிறது
வாழாகாதல் உன்காதல்
சொல்கின்றார் பாரினிலே
காதல் வாழும் உலகம் உள்ளவரை!

35 comments:

  1. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. //காதல் வாழும் உலகம் உள்ளவரை!//
    உண்மை.உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. வாரத்தின் இறுதி நாளாம் சனி
    பெயரிலே மட்டுமல்ல அடுத்து
    வரும் விடுமுறையின் நாளுக்கு
    முன்னாள் வருவதால் நமையும்
    பிரிப்பதாலும் அதுவும் சனிதான்....

    வாழாக்காதல் என்றே எப்போதும்
    சொல்வதுதானே இந்த உலகத்தின் வழக்கமாகிப்போன ஒன்றாயிற்றே
    அவர்களுக்கு என்ன தெரியும்
    இருவருக்கும் இடையில் உள்ள
    அன்பின் ஆழத்தையும் நேசத்தையும்...

    அழகான நாட்களை வரிசைப்படுத்திய
    விதத்தில் தனக்கென ஓர் இடத்தையும்
    காதலின் உன்னதத்தை உயர்த்தி நிறுத்தி
    அதற்கென உள்ள தனிச்சிறப்பை அதன்
    அழியா தன்மையை அதன் நிலை மாறாது
    கூறிய சசி கலா தாங்களும் ஆண்டுகள் பல
    வாழ அன்பாக பாராட்டி மகிழ்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. unmai,
    காதல் வாழும் உலகம் உள்ளவரை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அருமை..அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. அருமையான வரிகள் சகோதரி... அதுவும் சிறப்பாக முடித்துள்ளீர்கள்...

    (சமீபத்தில் ஏதேனும் ஜோசியம் பார்த்தீர்களோ...)

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஏன் அப்படி ஒரு சந்தேகம் ?

      Delete
  7. காதல் வாழும் உலகம் உள்ளவரை!

    உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. காதல் இருப்பதால் தான் உலகம் உயிர்பெறுகிறது... அழகான கவிதை சசி அக்கா!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  9. காதல் என்ற அச்சில்தான் இவ்வுலகமே சுழல்கிறது சசி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க நலமா பார்த்தே நாள் ஆகிவிட்டதே ?

      Delete
  10. ஏழு ஸ்வரங்கள் போல பிரிச்சிருக்கீங்களே காதலை. அருமை.

    ReplyDelete
    Replies
    1. எந்த விதத்தில் அனுகினாலும் நன்றாகத்தானே இருக்கிறது.

      Delete
  11. நவகிரகமும் சுற்றுகின்ற புள்ளி..காதல்-நல்லாயிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நலமா ? மிக்க மகிழ்ச்சி.

      Delete
  12. சாகும்வரை காதல் இருப்பதால்தானே மனம் வெறுமியில்லாமல் இருக்கிறது சசி !

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ. மிகச்சரியாக சொன்னீங்க.

      Delete
  13. அழகான வரிகள்...
    தொடருங்கள் கவிதாயினி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  14. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  15. எதையும் வித்தியாசமாகச் சிந்தித்து
    அருமையான படைப்பாக கொடுத்து விடுவது
    தங்களுக்கு கை வந்த கலையாயிருக்கிறது
    இந்தப் படைப்பும் விதிவிலக்கல்ல
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி ஐயா.

      Delete
  16. உலகம் உள்ள வரை காதலும் இருக்கும்... உண்மை.

    த.ம. 9

    ReplyDelete
  17. மேகம் போய் அணைக்கிறது
    துள்ளிப்பிடிக்க நினைக்கையிலே
    நீலவானம் தடுக்கிறது//அழகான கவிதை.

    ReplyDelete
  18. வார நாட்கள்- கிரகங்களை
    வைத்து வித்தியாசமாகப்
    படைத்துள்ளீர்கள்.

    "... அள்ளி அணைக்கப் போகையிலே
    மேகம் போய் அணைக்கிறது
    துள்ளிப்பிடிக்க நினைக்கையிலே
    நீலவானம் தடுக்கிறது..."
    அருமையான வரிகள்

    ReplyDelete