Tuesday 17 April 2012

சமர்த்து கண்ணா...

தினசரிஅதிகாலை எழுந்து,  வீடெல்லாம் பெருக்கி கதிரவன் மலருமுன் குளித்து,  அழகாய் கோலமிட்டு ,மான்போல் நடந்துவந்து,மலராய் சிந்திய சிரிப்போடு  கவிதையாய் வந்துநின்று, எழுமபுங்கப்பா என்றழைத்து, கண் முன் காப்பியோடு வந்து நிற்கும் அவளது நடவடிக்கைகள் யாவும் இன்றுஎப்போதும்போலில்லாமல் விந்தையாய் இருந்தது .
 எதையோபறிகொடுத்ததைப்போல் சுரத்தில்லாமல் சோகம் வடிந்த முகத்தோடு சர்க்கரை இல்லா காப்பியும் , சாந்தமில்லா அவள் முகமும் அவனை நிலைகுலையச் செய்தது.  அதற்கு தான் தானே காரணம் என்ற வலியும் அவனை வாட்டியது.
  சூழ்நிலை உணராமல்   தானே முடிவெடுத்ததால் விளைந்த விபரீதம்,   அவளையும் சோக நகரத்தில் தள்ளி, மலர் கொண்டு பிரிவை வரவேற்றது அவளது  நடவடிக்கை! .
 அமுதா .... என அழைக்கும் போதெல்லாம் ‘இன்னும் எத்தனை நாளைக்கு’ எனக் கூறி விம்மி விம்மி அழத்தொடங்கி விடுவாள் .
 மகப்பேறுக்கு கூட தன்னை விட்டு பிரிய மனமில்லாது தாய் வீடு போக மறுத்தவள் இனி தாய் வீடே கதி என இருக்கப் போவதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது .  
அவளைப் பற்றிய சிந்தனையிலேயே எங்கோ நிலைத்து விட்ட பார்வையின் முன் அவளே வந்து நின்று; ...
         ‘சாப்பிட வாங்க’ என்றால் ...
         சுரத்தில்லாத அவள் உபசாரத்தால் ‘சாப்பாடே வேண்டாம்’ என்றான் அவன் .
இயலாமை அணைத்தபோதும்,மெல்ல அவன் அருகில் அமர்ந்தவள் முகத்தில் திடீரென பற்றிக் கொண்டது மகிழ்ச்சி! .     
‘இங்க பாருங்க’ என கையை மெல்ல எடுத்து தன் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றில் வைத்தாள், .  வலமிருந்து இடம் சிறு உயிர்  நகர்வதை அவனாலும் உணர முடிந்தது .  அவன் கண்களிலும் ஆனந்தம்! மெதுவாக அவளை தோளில் சாய்த்து,தலையைக் கோதிவிட்டு ‘என்னம்மா,குரல் தழுதழுத்தது .
         ‘நம்ம  குழந்தை பிறக்க போற நேரம் கூட நீங்க என்னோடு இருக்க முடியாததை நினைத்தால்’ என்று சொல்லி முடிக்கும் முன்னே நெஞ்சம் விம்ம அழஆரம்பித்தாள்!
            ‘குணா .....குணா’  .. என அழைக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்தான் .    கையில் பெட்டியோடுஅவன் நண்பன் மணி நின்றிருந்தான் .        சுமூக பேச்சி வார்த்தைக்கு உங்க முதலாளி ஒத்துக்கிட்டாராம் .ஸ்டிரைக் வாபஸ்.போராட்டம் முடிஞ்சாச்சி,  இனி நீ எதிர்பார்த்த சம்பளம் வரும்.  உன் வெளிநாட்டு பயணம் கான்சல்!                 ‘நான் வேற உன்னை என்னோட கூட்டிட்டு போறதா சொல்லி  தங்கச்சிய கஷ்ட படுத்திட்டேன்! .  சரிடா போய் சமாதானம் பண்ணு .  எனக்கு பிளைட்டுக்கு நேர மாச்சி கிளம்புறேன்’ என்று நகர .    கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருந்தவளின் வயிற்றில் பிள்ளை துள்ள “சமர்த்து கண்ணா”என்றாளவள்!


முதல் முறையாக ஒரு சிறுகதை தலையில் ஓங்கி குட்டு குட்டுவதாக இருந்தால் மெதுவா குட்டுங்க சொல்லிட்டேன் ..ஆமா .
            

42 comments:

  1. வெளிநாட்டுக்காரன் பொழப்பு இப்படிதான் இருக்கு - கதை சொன்ன விதம் எனக்கு பிடிச்சிருக்கு சகோ.

    //இங்க பாருங்க’ என கையை மெல்ல எடுத்து தன் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றில் வைத்தாள், . வலமிருந்து இடம் சிறு உயிர் நகர்வதை அவனாலும் உணர முடிந்தது . அவன் கண்களிலும் ஆனந்தம்! மெதுவாக அவளை தோளில் சாய்த்து,தலையைக் கோதிவிட்டு ‘என்னம்மா,குரல் தழுதழுத்தது .
    ‘நம்ம குழந்தை பிறக்க போற நேரம் கூட நீங்க என்னோடு இருக்க முடியாததை நினைத்தால்’ என்று சொல்லி முடிக்கும் முன்னே நெஞ்சம் விம்ம அழஆரம்பித்தாள்!//

    மனதை அழுத்திய வரிகள் என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வு - படிக்க படிக்க எழுத்துகள் தெரிய வில்லை.

    சகோவின் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள் - தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சசிகலா அவர்களே நலமா?
    இயல்பான எழுத்து வாழ்த்துக்கள்
    இடைவெளி விடாமல் தட்டச்சு செய்தால் கட்டங்கட்டமாக விழுவது குறையும் என்று நினைக்கிறேன் முயற்சித்துப் பாருங்கள்

    ReplyDelete
  3. மனசாட்சி™ ...
    தங்கள் உடன் வருகையும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    ReplyDelete
  4. ஹைதர் அலி ...
    நலம் தங்கள் நலன் அறிய ஆவல் . கட்டங்கட்டமாக எனக்கு எதுவும் தெரியவில்லை சகோ எனினும் முயற்சிக்கிறேன் நன்றி சகோ .

    ReplyDelete
  5. ஒரு சோகம் திருப்பம் சந்தோசமான முடிவுஎன அனைத்தும் கலந்த சுவையான கதை அருமை

    ReplyDelete
  6. ம்ம்ம் கதை அருமை
    முதல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழி

    ReplyDelete
  7. “சமர்த்து கண்ணா”

    ReplyDelete
  8. இளந்தென்றல்...
    தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  9. செய்தாலி ...
    தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  10. சின்னப்பயல்...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  11. அட..
    என் தங்கை கதையும் எழுதுகிறார்களா..
    பல்சுவை வித்தகர் தான் நீங்கள்..
    முதல் முயற்சி என்றே சொல்ல முடியாது பா..

    இயல்பா வந்திருக்கு..

    நல்லா இருக்குது..
    தொடருங்கள்..

    ReplyDelete
  12. மகேந்திரன் ...
    அண்ணா தங்கள் வருகையும் தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா .

    ReplyDelete
  13. கட்டியணைக்கும் உரிமையினை,
    கலயாணச் சந்தையிலே,
    விலைகொடுத்து வாங்கிவிடடு,
    வருகிறேன் என்றுரைத்து,
    கடல்கடந்து சென்றுவிட்டாய்!
    நான் உன் அடிமைதான்,
    எனஆைசைமனத் தேடலுக்கு,
    என்னவிடை நானுரைக்க! பணம்தேடி வெளிநாடோடும், பலர்,மனந்தேடும் வாழ்வை, மறந்து போவதனால், பிணம்தின்னி கழுகுகளின், பிடியில்-மணிப்புறாக்கள்......... நல்லவேளை உங்கள் கதை, முடிவில்-சமர்த்தாக! உங்களால் முடியுமென்று, கதை-கதை சொல்கிறது!

    ReplyDelete
  14. ம்ம்ம் கதை சொன்ன விதம் மிக அருமை அக்கா. வெளிநாட்டு காரரின் நிலைதான் இது...

    ReplyDelete
  15. மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு, கதைபோல் தோன்றவில்லை,

    மிக மிக அருமை!

    ReplyDelete
  16. அருமையான நகர்வு.குட்ட வேண்டிய முயற்சி அல்ல!முதுகில் தட்ட வேண்டிய முயற்சி!

    ReplyDelete
  17. அருமையான ஓட்டம்!
    வாழ்த்துக்கள் சசிகலா!

    ReplyDelete
  18. நன்றாக இருக்கிறது!வாழ்த்துக்கள்!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  19. நானும் குட்டிவிட்டேன். செல்லக்குட்டு. அருமையாக கதை எழுதுகிறீர்கள். இன்னும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. கவிதைல உங்களை ரசிச்ச நான் இப்ப கதைலயும் ரசிக்கறேன். நல்லா வந்திருக்கு சசிக்கா. நான் கதைன்னு எழுதினா அதுக்கு Inspiration நீங்கதான்... சொல்லிப்புட்டேன்! (பயப்படாதீங்க. அதுக்கு கல் விழுந்தா நானே வாங்கிக்கறேன். Flowers மட்டும் உங்களுக்கு அனுப்பிடறேன்)

    ReplyDelete
  21. D.G.V.P.SEKAR ...
    கதைக்கு கதை சொன்ன விதம் அருமை நன்றி .

    ReplyDelete
  22. Esther சபி...
    அன்புத் தங்கைக்கு எனது அன்பான நன்றி .

    ReplyDelete
  23. Syed Ibramsha ...
    தங்கள் வருகையும் உற்சாக மூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  24. சென்னை பித்தன் ...
    ஆசிர்வாதத்துடன் அன்பாய் தட்டியும் கொடுத்ததற்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  25. AROUNA SELVAME ...\
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. Seshadri e.s....
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. விச்சு...
    தங்கள் வருகையும் உற்சாக மூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  28. நிரஞ்சனா...
    அன்புத் தங்கைக்கு எனது அன்பு வணக்கம் சிரிக்க சிரிக்க பேசுகிறீர்கள் நன்றி மா.

    ReplyDelete
  29. இந்த முறை ரொம்ப லேட்டாயிட்டேன் தென்றல். ஸாரி... கவிதையில் உங்களின் எழுத்தை ரசித்த நான் கதையிலும் ரசிக்க முடிகிறது. எனக்குத் தோன்றிய ஒரே குறை என்னவென்றால் பாராக்கள் இடைவெளி குறைவாக இருந்ததால் படிக்க சற்று சிரமப்பட்டது. மற்றபடி உங்கள கதைக் கருவிலும் எழுத்திலும் தவறேயில்லை. அவ்வப்போது இப்படியும் நிறைய எழுதுங்கள். வெல்லுங்கள் எங்கள் மனங்களை. இனிய நட்பின் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. சசி...கதை எழுதவும் வருகிறதே.குட்டி வாழ்த்தா இல்லை பெரிய வாழ்த்தும் பாராட்டும் உங்களுக்கு !

    ReplyDelete
  31. கணேஷ் ....
    தாமதமாய் வந்தாலும் தவறாது வந்தது குறித்து மகிழ்ந்தேன் வசந்தமே .

    ReplyDelete
  32. ஹேமா ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  33. மட்ட மான கதை!

    என எனக்கு-
    பொய் சொல்ல முடியல!

    நல்ல எழுத்தாக்கம்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. கவிதை எழுதுவது தங்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்போது,கதை எழுதுவது ஒன்றும் கடினமல்ல. முதல் முயற்சியானாலும் கதை அருமை. இனி கதைகளையும் தங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  35. முதல் கதை நன்றாகவே இருக்கிறது..,

    ReplyDelete
  36. Seeni ...
    குட்டப் போறதா நினைச்சேன் . ஆன இல்ல . நன்றிங்க .

    ReplyDelete
  37. வே.நடனசபாபதி ...
    வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  38. ...αηαη∂....
    வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  39. சிறுகதை சிறப்பாகவே உள்ளது.

    //‘நம்ம குழந்தை பிறக்க போற நேரம் கூட நீங்க என்னோடு இருக்க முடியாததை நினைத்தால்’ என்று சொல்லி முடிக்கும் முன்னே நெஞ்சம் விம்ம அழஆரம்பித்தாள்!//

    ஒரு கர்ப்பிணி பெண்ணின் உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

    //கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருந்தவளின் வயிற்றில் பிள்ளை துள்ள “சமர்த்து கண்ணா”என்றாளவள்!//

    வெரி குட். நல்லதொரு இனிமையான மகிழ்ச்சியளிக்கும் தருணம். நல்ல முடிவு.

    பாராட்டுக்கள்.

    [வலைச்சரம் மூலம் இன்று 13.05.2012 முதல் வருகை தந்துள்ளேன்]

    தொடர்ந்து இதுபோன்ற நல்ல படைப்புகளாக எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வை.கோபாலகிருஷ்ணன்...
      தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  40. Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete