Friday 13 April 2012

அழியா கிராமியக் கலைகள்


கரகாட்டம் ...
தலைமேல் செம்பு சூடி 
கை கொண்டு ஏந்தாமல் 
உடலை வில்லாய் வளைத்து 
ஆடுகின்ற கரகாட்டம் 
ஆரம்ப நாட்களில் 
ஆண்களின் ஆட்டக்கரகமாய் 
துளிர்விட்டு பின்னாளில் 
மங்கையரின் ஆட்டமாகி 
இது வரை அழிவின்றி 
வாழுகின்ற தமிழ்க்கலையாய்...

மயிலாட்டம் ...
மயில் போன்ற முகமூடி 
இடுப்பினிலே தோகைகள்
வான்பார்த்து சிலிர்த்தெழுந்து 
தோகை மயிலாடுதல் போல்
உச்சி முதல் பாதம் வரை 
இரைதேடி ஓடுதல் போல் 
அசைக்கின்ற பொழுதினிலே 
அழகுமயில் நேரினிலே 
ஆடுதல் போல் கம்பீரம் ...

காவடி ஆட்டம் ...
அரைவட்ட வில்லாக வளைத்தெடுத்து 
நடுவிலொரு கம்புகட்டி 
காவடியை அலங்கரித்து 
கவிபாடி ஆடுகின்ற 
காவடி ஆட்டமதை
முருகனின் ஆட்டமென்ற 
முன்னுரையோடு ஆடிடுவர் 
ஆனாலும் 
வழிபாட்டு ஆட்டம் தனி 
கலை ஆட்டம் ஆறு பாகம் ...

பொய்க்காலாட்டம் ...
கொக்கலி ஆட்டமென்ற 
உயரக்கால் ஆட்டத்தில் 
பொய் கால்களைப் பூட்டி 
கொக்கின் கால் போல் 
நீண்ட கட்டையோடு 
ஆறடி உயரம் வரை 
ஆகாயத்தில் நின்றாடும் 
ஆட்டமிது தமிழன் கலை ...

தெருக்கூத்து ....
திருக்கூத்து என்ற கலை 
காலத்தின் பிடியில் சிக்கி 
தெருக்கூத்தாய் நிற்கிறது 
கலைஞ்ரின் வாழ்வாதாரம் போல் 
ஆடல் நாயகன் சிவபெருமான் 
தில்லையில் ஆடியத்   தெருக்கூத்து 
பார்த்தாடியதால் பரவசமாய் 
பாரதக் கூத்தென்ற கதை 
சொல்லும் திரு - தெருக்கூத்து ...
        
   இன்னும் எத்தனையோ அழிந்து வரும் தமிழ்க் கலைகள்.  அவை நம் எண்ணத்திலாவது வாழ அடுத்த பதிவில் தொடருவோமே  ...

37 comments:

  1. கரகாட்டம், தெருக்கூத்தாவது இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற அரிய கலைகள் அன்று அரிதாகித்தான் விட்டன. உங்களின் அழகுத் தமிழ் வரிகளிலாவது அவை வாழட்டும் தென்றல். தொடர்ந்து எழுதுங்கள். கைகுலுக்கி தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. தமிழ் கலைகள் அழிந்து வருவது கவலையே - எப்படி உயிர்பிப்பது??????

    ReplyDelete
  3. தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அழியாமல் காப்பது தமிழர்கள் அனைவரது கடமையாகும்....

    ReplyDelete
  4. கலைகளை விளக்கிய விதம் அருமை!

    ReplyDelete
  5. வணக்கம்! அருகி வரும் கிராமியக் கலைகள் குறித்து, அழகான வார்த்தைகளில் அருமையான கவிதை!

    ReplyDelete
  6. தமிழர் பண்பாட்டில் கிராமிய கலைகள் இன்றியமையாதவைகள்.... சிறப்பான கவி

    ReplyDelete
  7. உங்களின் வார்தைகளின் அழகிய ஆட்டதை இங்கு சேர்க்க மறந்து விட்டீர்களே....

    ReplyDelete
  8. ஒயிலாட்டம் போல இன்னும் பல கலைகள் உள்ளன .. தொடருங்கள்

    ReplyDelete
  9. அன்புத் தங்கையே,
    தங்களின் கவிதைக்கு முதலில்
    தலை வணங்குகிறேன்.
    நமது கலைகள் அழியாப் பெரும்புகழ்
    பெற வேண்டும் என்ற தீராத தாகத்துடன்
    அதன் வளர்ச்சிக்காய் சிறு முயற்சிகள்
    எடுத்து வருகிறேன்.. ...
    இந்நிலையில் என் தங்கையும் என்னுடன்
    கைகோர்த்து பயணிப்பது
    எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..

    அழகான விளக்கங்கள்
    கொடுத்திருக்கிறீர்கள்.

    நன்றிகளுடன்..
    மகேந்திரன்

    ReplyDelete
  10. கணேஷ் ....
    வருக வசந்தமே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. மனசாட்சி™ ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. koodal bala ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  13. தி.தமிழ் இளங்கோ ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. Esther sabi ....
    வருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. Avargal Unmaigal ....
    வருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. என் ராஜபாட்டை"- ராஜா ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. மகேந்திரன் ...
    அண்ணா வணக்கம் எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. அருமையான கிராமத்துக் கலைகளை ஞாபகமூட்டியுள்ளீர்கள். உள்ளூர் திருவிழாக்கள் இப்போது வெறும் சினிமாப் பாடல்களின் ஆட்டங்களாக மாறிவிட்டன.

    ReplyDelete
  19. விச்சு...
    தாங்கள் சொல்வது உண்மையே நாகரீகம் என்ற பெயரில் நசுக்கப் படும் கலைகள் .

    ReplyDelete
  20. கிராமியக் கலைகள் குறீத்த விளக்கமான பதிவு அருமை!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  21. கிராமில் கலைகளை ரசிப்பவர்கள் முகவும் குறைந்துவிட்டனர். நல்ல நினைவூட்டுப் பதிவு

    ReplyDelete
  22. பத்து வருஷங்களுக்கு முன்
    எங்க ஊர்ல திருவிழான்ன
    கரகாட்டம் ,மயிலாட்டம் ,பொய்க்கால் ஆட்டம் ,தெருக்கூத்து
    இப்படி பத்துநாள் கலை நிகழ்ச்சி இருக்கும்
    இப்பம் ..............இந்த கலைகள் அபூர்வமா சில கிராமங்கள் மட்டும்

    நம் மண்வாசனை கலைகள் அழிவது வேதனை

    ReplyDelete
  23. azhiyum visayathai-
    azhuyaath ezhuthil
    solliteenga!

    ReplyDelete
  24. அழியாக் கிராமியக் கலைகளை அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.திருக்கூத்துத்தான் தெருக்கூத்தாக திரிந்தது என்பது புதிய செய்தி. தமிழர்களின் கலையை கவிதைமூலம் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. சிறப்பான கலைகளை சீரிய படங்களுடன் வடித்த விதம் பாட்டுகளுக்கு உரியது

    ReplyDelete
  26. அழிந்துகொண்டு வரும் நம் கலைகளை நினைவூட்டியிருக்கிறீர்கள் சசி.உண்மையில் கரகாட்டம்,பொய்க்கால்க்குதிரை,தெருக்கூத்து இது எதுவுமே நான் கண்டதில்லை !

    ReplyDelete
  27. Seshadri e.s.
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. T.N.MURALIDHARAN
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. செய்தாலி...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. Seeni...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. வே.நடனசபாபதி
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. மாலதி ...
    வருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. ஹேமா ...
    வருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  34. vanakkam sasikala avargale ungaludaiya padhivu nandru aanaal ennul avvappodhu ezhugindra oru kelvi ikkalaigal indru ikkalaigali eedupattirupavargal aruvarukka thagundha murayil seigindranar 2000aaandugalukku murppatta ikkalaigalukku oru vazhimurai,vadivam kattayam irukkum. ikkalaigali evvaru madhippeedu seiyappadugiradhu nammudaiya pattanukku paattan kalaththil eppadi ikkalaigal irundhanavo appadi irundaal anaivaridaththilum madhippedu uyarum nandri
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  35. விழித்துக்கொள்...
    தங்கள் கருத்து மிகவும் சரியே . என்ன செய்வது கால மாற்றம் எல்லா வற்றையும் நாகரீக முறையிலேயே பார்க்கிறது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  36. ungalin idugai kanden magizhchchi, ennudaiya ekkam ellaam malayaligal avargaludaiya kathakaliyai avargal eththuraiyil irundhalaum kurippaaga thiraiththurai,vilambaraththurai,pondravattril mudhanmaipaduththuvadhupol naamum namudaiya kalaiyai merkkurippitta iruthuraigalilum nagareegamaga (paruththiveeran ) padaththil vandhadhupol allamal payanpaduththavendum engira ekkame ondre enakku nandri
    surendranath1973@gmail.com

    ReplyDelete