Monday 16 April 2012

அழியா கிராமியக் கலைகள்-2


பரதக்கலை ...
தமிழ்த்தாயின் தலைமகளாய்
ஒளிர்கின்ற பரதக்கலை
உலகாளும் மந்திரத்தை
தமிழினம் உணரவேண்டும் !
நெற்றிச் சூடி
காதில் ஜிமிக்கியிட்டு
வைரமாய் சுண்டியிழுக்கும்
மூக்குத்தி பரிணமிக்க
அழகு பதுமையாக சலங்கையும்
ஜல் , ஜல் , ஜல் ஒளியோடு
புருவம் முதல் பாதம் வரை
அபிநயம் புரிகின்ற
இக்கலையை வெல்வதற்கு
எக்கலையும் பிறக்கவில்லை !

நாடகக் கலை ...
கதை சொல்லும் தெருகூத்து
வில்லுப் பாட்டு இவையெல்லாம்
தெருமுனையோடு நிற்க
சமூக சரித்திர பாத்திரத்தை
கண்முன்னே நிற்க வைத்து
நாடகமே இன்று வரை
ஆள்கின்ற வண்ணத் திரையின்
ஆரம்பம் இது உண்மை !
தனை மாய்த்து வாழ்விக்கும்
மெழுகு போல் தான் வீழ்ந்து
சினிமாவை வாழவைக்கும்
நாடகக் கலை கருவறையே ...!
வில்லுப் பாட்டு ...

வில்லெடுத்து போர்க்களம் கண்ட
வீரர்கள் திரும்பி வந்து
வெற்றிஎக்களிப்பில்  வில்லுக்கு மணி சூடி
பாடியாடும் கலையை
சொல்லை போர்க்களமாக்கி
இசையோடு பாடுகின்ற
வில்லுப் பாட்டில் கதை கேட்டால்
இராமாயணமும் நமதாகும் ...!
          இன்னும் எத்தனையோ அழிந்து வரும் தமிழ்க் கலைகள்.  அவை நம் எண்ணத்திலாவது வாழ அடுத்த பதிவில் தொடருவோமே  ...

24 comments:

  1. நம்
    பாரம்பரிய கலைகள் பற்றிய
    அழகிய பதிவு தோழி

    ReplyDelete
  2. வாழ்க தமிழனின் பாரம்பரிய கலைகள்!

    ReplyDelete
  3. அழிந்து வரும் கலைகளை காப்பாற்றுவதற்கு முன் அந்த கலைஞர்களின் வாழ்வாதரத்திற்கு அரசு உதவி புரியுமாயின் அக்கலைகள் ஒரு போதும் அழிந்திடாது.
    கலைஞர்கள் இல்லாமல் கலையை வைத்துக் கொண்டு என்ன செய்ய..கலைகள் குறிப்பிட்டு காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. செய்தாலி ...
    தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  5. koodal bala...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. மதுமதி ...
    தங்கள் கருத்து முற்றிலும் சரியே . மக்களும் , அரசும் சிந்திப்பார்களா ?

    ReplyDelete
  7. அழகான தொகுப்பு - தொடருங்கள் சகோ

    ReplyDelete
  8. கலைகளின் பாரம்பரியம் ஒவ்வொரு இனத்திற்கும் உண்டு. ஈழத்தில் பிரசித்தி பெற்றது நாட்டு கூத்து. இப்போது அக்கலை சங்கள கலை எழுச்சியாளர்களால் நொருக்கப்பட்டு கண்டிய நடனம் எனும் கலை புகுந்துள்ளது..அருமையாக கவி அக்கா தொடருங்கள்.

    ReplyDelete
  9. மனசாட்சி™ ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. ஈழத்தில் பிரசித்தி பெற்றது நாட்டு கூத்து. இப்போது அக்கலை சங்கள கலை எழுச்சியாளர்களால் நொருக்கப்பட்டு கண்டிய நடனம் எனும் கலை //
    அரிய தகவல்களையும் பின்னூட்டத்தில் கூறியது கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    ReplyDelete
  11. நல்ல ஒரு பதிவு....
    பழயதை ஞாபகப் பட்சுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  12. பரதநாட்டியம் இப்போதும் புகழுடன் ஆடப்பட்டு வரும் கலைதானே தென்றல்! மற்றக் கலைகளுக்காக கவலைப்படுவது போல அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். வில்லுப்பாட்டு... நான் ஒரு முறைகூடக் கேட்டதில்லை. கேட்க ஆசை உண்டு. நினைவுகளில் தென்றலின் பதிவுகள் நறுமணம் வீசுகிறது. தொடரட்டும்...

    ReplyDelete
  13. மே மாதம் எங்கள் ஊர் பொங்கலுக்கு வில்லுப்பாட்டு. வாருங்கள் சசிகலா.

    ReplyDelete
  14. பரதம்.நாடகம்,வில்லுப்பாட்டு என்று நமது சிறப்பான கலைகளைப் பற்ரிப் பதிவிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. nalla pakirvu!

    vittu vitaatheer-
    thodarungal!

    ReplyDelete
  16. First Time உங்க இடத்துக்கு வர்றேன். ரொம்ப நல்லா இருக்கு தளம். அதைவிட உங்களோட Writing ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு. தொடர்ந்து வர்றேன். Thanks!

    ReplyDelete
  17. சிட்டுக்குருவி...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. கணேஷ் ....
    வருக வசந்தமே விச்சு அவங்க ஊர்ல வில்லுப்பாட்டு நடக்க இருக்கிறதாம் சென்று வரலாம் நமது நண்பர்கள் அனைவரும் செல்வோம் வாருங்கள் .

    ReplyDelete
  19. பண்பாட்டின் சிகரமாக விளங்கிய பழங் கலைகள்
    தேய்ந்து வருவது கவலைக்குரியதே!
    படமும் பாடலும் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. விச்சு...
    அழைப்பிற்கு நன்றி சகோ கண்டிப்பாக நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுத்து இது போன்ற நிகழ்வுகளில் அறிமுகமானால் நன்றாகத்தான் இருக்கும் .

    ReplyDelete
  21. சென்னை பித்தன்...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  22. Seeni ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. நிரஞ்சனா ...
    முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் சகோ . தொடருங்கள் ...

    ReplyDelete
  24. புலவர் சா இராமாநுசம் ...
    ஐயா வருக தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா .

    ReplyDelete