Sunday 1 April 2012

உலகுக்காய் வாழாமல் ...


மனிதனை மனிதன் உண்ண
மனக்கணக்கு போட்டெதற்கு
மயக்கத்தில் வாழ்வதினால்
மலர்மணம் அழிக்கின்றோம் !
எது விடியல் எது வாழ்க்கை
விட்டுக்கொடுக்க மனமிருந்தால்
பட்ட உறவும் பசுந்தளிராய்
மீண்டும் வளரும் மாட்சியுறும்!
எதை நாம் படைத்தோம்
எல்லாமே இருப்பதுதான்
கோர்க்கின்ற வேலையாளாய்
எதைஎதையோ  செய்கின்றோம் !
முத்தைக் கோர்க்க நூல்
கவிதை பாட வார்த்தை
காதல் செய்ய இதயம்
கண்டு பிடிப்பு பொய்யுரையே !

ஒருவயிற்றில் பிறந்தவரே
ஒருங்கிணைந்து ஓடாவிட்டால்
அறியாத புரியாத உறவெங்கே
சேர்ந்து வாழும் புரியவில்லை !
மனத்தால் இணைந்து வாழும்
வாழ்விருந்தால் போற்றுங்கள்
இணைந்தாலும் பிரிந்தாலும்
ஒன்றை ஒன்று வாழவைக்கும் !
வெற்றி வெற்றி வெற்றியென
முழக்க ஒலி கேட்கிறது
வென்றது யார் எனப் பார்த்தால்
அண்ணன் தோற்றதற்கு
தம்பியின் கொக்கரிப்பு !
விழுந்ததும் ஒரே இரத்தம்
எழுந்ததும் அதே உதிரம்
உறவு தோற்றதனை, அவர்
உள்ளம் அறியாமல்
பாராட்டும் சீராட்டும்
பாடை வரை -அதன் பிறகு ?
வாழும் வாழ்வைத் தொலைத்து விட்டு
வசந்தமென சூளுரைத்தால்
வாடி விழும் நாளில்
வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
எண்ணல் நன்றென்பேன் !

அன்பை மட்டும் போற்றிப்பாடி
ஆலயத்தில் ஒன்றாய்க்கூடி
இறைவனையும் வென்றிடுவோம்
இதுவே உண்மை உறவாகும் .
உணர்ந்தவர் நட்பில் களங்கமில்லை
உலகுக்காய் வாழாமல் உயிர்
அன்புக்காய் வாழ்ந்திடுவோம் !
   

36 comments:

  1. இந்த
    உலகமும் இதில்
    ஜீவராசிகளும் மனிதன் உள்ளபட
    இறைவன் நமக்காக படைக்கபட்டது
    இவைகளை சார்ந்தே நம் வாழ்கையும் அமைகிறது
    இறைவன் அமைக்கிறான்

    மனித உறவுகளும்
    மற்ற ஜீவராசிகளும் இல்லாமல்
    ஒரு மனிதஜீவி வாழ முடியாது

    மரணம் வரை அனுமதிக்கபட்ட இந்த
    இறை வரப்பிரசாதமான இந்த வாழ்கையை
    உணர்ந்தும் உறவாடியும் வாழ்வோம்

    என்று சொல்லிச் செல்லும் உங்கள் கவிதை அருமை
    உணர்பவர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கு

    ReplyDelete
  2. எல்லாமே இருப்பதுதான்
    கோர்க்கின்ற வேலையாளாய்
    எதைஎதையோ செய்கின்றோம் !/

    இந்த ஒரு எண்ணம் உங்கள் அடிமனதில்
    நிலையாய் சிலையாய் இருப்பதனால்தான்
    உங்கள் இத்தனை தரமான பதிவுகளைத் தொடர்ந்து
    தர முடிகிறது
    மனம் கவர்ந்த தரமான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்புக்காய் வாழ்ந்திடுவோம். நன்று. அது ஒன்றே நிலையானது. ரமணி ஸாரும் தென்றலும் பகிரும் நற்சிந்தனைகள் ஒவ்வொரு பதிவிலும் வியக்க வைக்கத் தவறுவதில்லை. பிரமாதம்.

    ReplyDelete
  4. //பாராட்டும் சீராட்டும்
    பாடை வரை -அதன் பிறகு ?//

    அனைவரும் கட்டாயம் சிந்திக்க வேண்டிய அருமையான வரிகள்!... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. “உணர்ந்தவர் நட்பில் களங்கமில்லை
    உலகுக்காய் வாழாமல் உயிர்
    அன்புக்காய் வாழ்ந்திடுவோம் ! “

    அருமையானப் பதிவு சசிகலா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே நாடு அமைதிப் பூங்காவாக மாறிவிடும்.........அருமையான கவிதை!

    ReplyDelete
  7. செய்தாலி...
    எனக்கு ஒரு பெரிய சந்தேகம் சகோ . அது எப்படி எல்லா பதிவர் பதிவுகளிலும் முதல் பின்னூட்டம் தங்களுடையதாகே இருக்கிறது . தங்கள் ஆர்வம் எனை பிரம்மிக்க வைக்கிறது நன்றி சகோ .

    ReplyDelete
  8. Ramani ...
    ஐயா தங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர்களின் ஆசிர்வாதம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

    ReplyDelete
  9. கணேஷ் ...
    ரமணி ஐயாவோடு ஒப்பிடும் அளவுக்கு இன்னும் வரலங்க . வசந்தமே உங்கள் ரசிகை நான் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. hi sasi i am very proud of u and your poem. u are extra ordinary. good

    ReplyDelete
  11. Syed Ibramsha ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. AROUNA SELVAME ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  13. அன்பை மட்டும் போற்றிப்பாடி
    ஆலயத்தில் ஒன்றாய்க்கூடி
    இறைவனையும் வென்றிடுவோம்

    அன்பால் எதையும் வென்றுவிடலாம் சசி அக்கா

    ReplyDelete
  14. koodal bala ...
    வீடு செழித்தால் நாடு செழிக்கும் என்பதை அழகாய் சொல்கிறது தங்கள் பின்னூட்டம் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. Esther sabi ...
    வருக தங்கையே தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  16. ஆம் அன்புக்காய் வாழ்ந்திடுவோம்.

    அழகான கருத்தாளமுள்ள கவிதை நன்றி

    ReplyDelete
  17. மனசாட்சி™ ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. அன்பை மட்டும் போற்றிப்பாடி
    ஆலயத்தில் ஒன்றாய்க்கூடி
    இறைவனையும் வென்றிடுவோம்
    >>>>
    அன்போடு ஒற்றுமையும் நம்மில் இருந்தால் நாம் இறைவனை மட்டுமல்ல ஈரேழு உலகத்தையும் நம் வசம் ஆக்கிடலாம் தோழி. நல்லதொரு கவிதை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. /வாழும் வாழ்வைத் தொலைத்து விட்டு
    வசந்தமென சூளுரைத்தால்
    வாடி விழும் நாளில்
    வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
    //
    அருமையான வரிகள்

    ReplyDelete
  20. அன்பும்,ஒற்றுமையும் சொல்லி வருவதில்லை சசி.இயல்பாய் இருக்கவேணும்.மனிதனின் வக்கிரபுத்திக்குள் அன்பு அடக்கம் !

    ReplyDelete
  21. //விழுந்ததும் ஒரே இரத்தம்
    எழுந்ததும் அதே உதிரம்//

    - அருமையான வரிகள் சகோ. அழகு கவிதை. ஏக்கமும், ஆதங்கமும் பொங்கும் வரிகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வணக்கம்! அன்பின் வழியது உயிர்நிலை என்பதனை, தங்கள் கவிதையும் கொடுக்கப்பட்ட படங்களும் உணர்த்துகின்றன.

    ReplyDelete
  23. anpai patri-
    azhuththamaa sollideenga!
    seythali
    ramani ayyaa !
    sonnathai naanum aamothikkiren!

    ReplyDelete
  24. ஒருவயிற்றில் பிறந்தவரே
    ஒருங்கிணைந்து ஓடாவிட்டால்
    அறியாத புரியாத உறவெங்கே
    சேர்ந்து வாழும் புரியவில்லை !
    மிகச் சரியான கருத்து. ஏற்றிடும் உள்ளங்கள் மகிழ்ந்திடும் என்பதில் ஐயமில்லை..
    அருமையான பதிவு, நன்றி...

    ReplyDelete
  25. உங்கள் வலைப்பக்கம் திறக்க நீண்ட நேரம் பிடிக்கிறது சகோ!நேற்றும் வந்து ஓட்டுப் போட்டு விட்டுப் போய் விட்டேன்.
    //அன்பை மட்டும் போற்றிப்பாடி
    ஆலயத்தில் ஒன்றாய்க்கூடி
    இறைவனையும் வென்றிடுவோம்
    இதுவே உண்மை உறவாகும் .//
    அருமை.

    ReplyDelete
  26. ராஜி ...
    தங்கள் வருகையும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. "என் ராஜபாட்டை"- ராஜா ...
    தங்கள் வருகையும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. ஹேமா..
    தங்கள் வருகையும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. துரைடேனியல் ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. தி.தமிழ் இளங்கோ...
    தங்கள் வருகையும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. Seeni...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. S.Goutham ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. சென்னை பித்தன் ...
    ஆமாங்க எனக்கு மட்டும் தான் நேரம் பிடிக்கிறது என நினைத்தேன் . என்ன செய்வது என்று தெரியவில்லையே .
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete