Wednesday 4 April 2012

முடிவில் எதுவும் நமதில்லை !

நூலுக்கும் ஊசிக்கும்
இடைப்பட்ட உறவென்ன ?
இணைப்பது அதன் வேலை
பிரிப்பது காலம் தான் !

ஆடைக்கும் மனிதனுக்கும்
ஆயிரம் பந்தங்கள்
மானம் காத்தபின்னர்
தூக்கி எறியும் உள்ளங்கள் !

மயானத்தைக் காத்து நிற்கும்
வெட்டியானின் கண்ணெல்லாம்
இன்று யார் போவார்
என்பதிலேயே லயித்திருக்கும் !

வட்டி வாங்கும் வஞ்சகன்
கொடுத்த பணம் இரட்டிப்பாய்
மாறும் நாள் எதுவென்று
கணக்கிட்டு அமர்ந்திருப்பான் !

மாதமெல்லாம்   உழைக்கின்ற ஊழியனின் மனமெல்லாம்
வாங்கிய கடனை அடைப்பதற்கு
சம்பள நாளை யாசிக்கும் !

தனியாய் வீட்டில் அமர்ந்திருந்து
உலகம் அறியா தாய்க்குலங்கள்
கணவன் வரும் நேரமெண்ணி
கனவுடன் காத்திருக்கும் !

முத்து விளையா சிப்பிஎல்லாம்
வானைப் பார்த்து வாய்மலர்ந்து
மழைத் துளி விழும் நாளை
கவலையோடு தேடி நிற்கும் !

பசியால் வாடும் சிங்கங்கள்
மான்கள் தண்ணீர் பருகவரும்
காலம் அறிந்து பதுங்கி நின்று
அடித்துக் கொல்ல வழிதேடும் !

பட்டுப் போன காதல் மனம்
 விட்டுப் போன உறவுகளின்
தொட்டுப் போன நடப்புகளை
எண்ணி எண்ணி அழுதிருக்கும் !

நினைத்தது  கிடைத்தவர் வெற்றிஎன்பர்
இழந்தது எல்லாம் தோள்விஎன்பார்
உனது எனது ஓட்டத்தில்
முடிவில் எதுவும் நமதில்லை !      
 

20 comments:

  1. // முடிவில் எதுவும் நமதில்லை !//
    முத்தாய்ப்பாய் முடித்திருக்கும் வரிகள், சொல்லாமல் பல செய்திகளை சொல்கின்றன. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கவிதை வரிகளில் - இது தான் வாழ்க்கை........... அம்புட்டுதேன்.

    ReplyDelete
  3. ஃஃஃஃவெட்டியானின் கண்ணெல்லாம்
    இன்று யார் போவார்
    என்பதிலேயே லயித்திருக்கும் ஃஃஃஃ

    ஒவ்வொரு மனிதனுள்ளும் தேங்கிக் கிடக்கும் பல விடயங்கள் விதைக்கப்பட்டிருக்கிறது...

    ReplyDelete
  4. வாழ்கையின் யதார்த்தம்
    நல்ல கவிதை தோழி

    ReplyDelete
  5. Excellent Thendral! Total Portrait of Human Life.

    ReplyDelete
  6. வணக்கம் தங்கையே,

    உள்ளதை தொலைத்து
    நாளும் நாளும்
    தொலைத்ததை தேடும்
    சென்மம் எடுத்தவர் தானே நாம்...

    தேடல்கள் நிற்காமல் இருந்தால்
    என்றாவது ஓர் நாள் தேடுவது கிடைக்கும்
    முடிவில்...

    ஆனால் முடிவில் நமக்கு சொந்தமா என்று பார்த்தால்
    இல்லைதான்..

    அழகிய கவிதை.

    ReplyDelete
  7. ஆடைக்கும் மனிதனுக்கும்
    ஆயிரம் பந்தங்கள்
    மானம் காத்தபின்னர்
    தூக்கி எறியும் உள்ளங்கள்

    அருமையாக வரிகள் அக்கா நன்றி கெட்ட உள்ளத்தினரின் செருக்கை படமிட்“டு காட்டுவதாய் அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  8. வே.நடனசபாபதி ...
    தங்கள் முதல் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. மனசாட்சி™ ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. ♔ம.தி.சுதா♔ ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. செய்தாலி ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. கணேஷ்...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  13. மகேந்திரன் ...
    வணக்கம் அண்ணா தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி அண்ணா .

    ReplyDelete
  14. Esther sabi ...
    தங்கையின் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

    ReplyDelete
  15. Wonderful poem! Appreciate that!

    ReplyDelete
  16. எனக்கு //நூலுக்கும் ஊசிக்கும்
    இடைப்பட்ட உறவென்ன ?
    இணைப்பது அதன் வேலை
    பிரிப்பது காலம் தான் !// இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  17. நூலுக்கும் ஊசிக்கும்
    இடைப்பட்ட உறவென்ன ?
    இணைப்பது அதன் வேலை
    பிரிப்பது காலம் தான் !

    -அருமையான வரிகள்
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  18. தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  19. அட!

    முடிவு நமதில்லை!
    முடித்த விதம்-
    நல்லா இல்லை என-
    பொய் சொல்ல முடியல!

    ReplyDelete
  20. உனது எனது ஓட்டத்தில்
    முடிவில் எதுவும் நமதில்லை !

    காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது,என்ற தத்துவ விளக்கமே இப்பாடல்! அருமை!அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete