Saturday 7 April 2012

ஜனனம் தொடங்கி மரணம் வரை ....



அதிகாரம் உள்ளவன் அதட்டியும் ...
ஆணவம் பிடித்தவன் மிரட்டியும் ...
இதயமில்லாதவன் பறித்தும்
ஈனமானவன் இழித்தும்
உணர்வற்றவன் ஏய்த்தும்
ஊக்கமானவன் அடித்தும்
எமனானவன் அழித்தும்
ஏடானவன் பொய்யுரைத்தும்
ஐயம்கொண்டவர் மாய்த்தும்
ஒடுங்கியவன்   எதிர்த்தும்
ஓங்கிநிற்பவர் ஒடுக்கியும்
ஔரங்கசீப் போன்றவர் மிரட்டியும் ....
அஃறிணை என்பவர் பேசியும்
பதவியில் இருப்பவன் பயந்தும் ...
வெறி பிடித்தவன்
செயல் ஜாலத்திலும் ...
சுயநலமிக்கவன்
சுரண்டுவதிலும் ...

சுக போக வாழ்விற்காய்
இயற்கையை காயப்படுத்தியும் .
மனச்சுரண்டல்
பணச்சுரண்டல்
பதவிச்சுரண்டல்
வியாபாரச்சுரண்டல்
கல்விச்சுரண்டல்
மருத்துவச் சுரண்டல்
ஜனனத்தில் சுரண்டல்
மரணத்திலும் சுரண்டல்
அடுத்தவரை சுரண்டும் நாம்
நம்மை அடுத்தவர்
சுரண்டுவதறியாமல்
உலகை, ஊரை
உறவை ,இனிமையை
பசுமையை, பண்பை ,அன்பை
வாழ்கையை சுரண்டும தீமையாய்!

23 comments:

  1. wow wow enna oru arpudamana oru padaibu. very very great poet sasikla avl. romba romba super saskala avl.

    ReplyDelete
  2. சுரண்டல்கள் எத்தனையெத்தனை... சுட்டிக் காட்டியமை அழகு. ’அடுத்தவரை சுரண்டும் நாம்
    நம்மை அடுத்தவர் சுரண்டுவதறியாமல்’ அருமையான வரிகள். நன்று.

    ReplyDelete
  3. சுரண்டல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதமோ.......ஆக மொத்தம் சுரண்டலில் தான் வாழ்க்கை ஓடுதோ

    ReplyDelete
  4. அருமையான கவிதை சகோதரி!

    ReplyDelete
  5. அடுத்தவரை சுரண்டும் நாம்
    நம்மை அடுத்தவர்
    சுரண்டுவதறியாமல்

    தொட்டில் பழ்க்கமல்லவா ??
    இடுகாடுவரை தொடர்கிறது..
    இறப்பிற்கான சான்று வாங்கும்வரையும் கூட.....

    ReplyDelete
  6. raja66
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  7. கணேஷ் ...
    வருக வசந்தமே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி .

    ReplyDelete
  8. மனசாட்சி™ ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. koodal bala ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. இராஜராஜேஸ்வரி ...
    தங்கள் கருத்தும் உண்மையே சகோ . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. //சுக போக வாழ்விற்காய்
    இயற்கையை காயப்படுத்தியும் //
    என்ற வரிகளும் அருமை. அதற்கு மேலே தந்துள்ள புகைப்படமும் அருமை. கவிதைக்கு வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
  12. அ தொடங்கி ஃ வரை, பிறகு அதற்கு மேலும் சுரண்டல், அருமையான ஒரு படைப்பு!.

    ReplyDelete
  13. இத்தனை சுரண்டலா!!! நல்ல கவிதை சசி..

    ReplyDelete
  14. அல்பா முதல் ஒமேகா வரை இந்த சுரண்டல் தொடரும் அக்கா அருமையாக வரிகள்...

    ReplyDelete
  15. வணக்கம்! மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் அடாவடிகளைக் கண்டு ஆதங்கமாய் உங்கள் கவிதை. ஆறுதல் சொல்ல இதோ ஒரு பாரதிதாசன் பாடல்:

    ஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
    உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ
    - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்..

    ReplyDelete
  16. உங்கள் கவிதையை, வாழ்வின் யதார்த்தத்தை ரசித்தது போல தி. தமிழ்இளங்கோ வின் கருத்தையும் ரசித்தேன் சகோதரி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. வே.நடனசபாபதி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. Syed Ibramsha ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. விச்சு ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. Esther sabi ..
    தங்கையின் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  21. தி.தமிழ் இளங்கோ ...
    தங்களின் வருகையும் தெளிவாக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  22. kovaikkavi ...
    வருகை தந்து ரசித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. எதார்த்த உண்மை-
    சொன்னீங்க!

    "அவுரங்கசீப் " போன்றவர்கள்-
    மிரட்டியும்!"

    வரலாறுகளில் -
    சில தீயவர்கள்-
    நல்லவர்களாகவும்!

    நல்லவர்கள்-
    தீயவர்களாகவும்!
    சித்தரிக்கபடுகிரார்கள்!

    அதில் ஒருவர்-
    அவுரங்கசீப்!

    அவரின் நல்ல விஷயங்கள்-
    மறைக்க பட்டுள்ளது!
    பொய்யில்ல!

    ஆங்கிலேயேர்கள் ஹிந்து-
    முஸ்லிம் ஒற்றுமையை-
    குலைக்க செய்த சதி!

    வரலாற்று திரிபு!

    அது இன்றும் வகுப்புவாதங்களுக்கு
    பயன்படுகிறது!

    எல்லா மொகலாய மன்னரும்-
    நல்லவர்கள் என்று நான்-
    சொல்ல மாட்டேன்!

    நான் மதங்களை பார்ப்பதை-
    விட உண்மையை பார்ப்பவன்!

    "வரலாற்று வெளிச்சத்தில்-
    அவுரங்கசீப்"-
    செ.திவான் எழுதிய புத்தகம்-
    நேரம் இருப்பின் வாங்கி படிக்கவும்!

    ReplyDelete