Friday 6 January 2012

யார் கற்றுக்கொடுத்தது

காக்கைக்கும்
யார் கற்றுக்கொடுத்தது
ஏமாற்றும் புத்தியை
முதியோர் இல்லத்தின்
முகவரி தேடிச் சென்று
தினம் தினம் கரைகிறதே .....
சசிகலா

13 comments:

  1. ஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ!

    ReplyDelete
  2. புகைப்படம் பார்த்து தோன்றிய கவிதை அருமை

    ReplyDelete
  3. ஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ!

    ReplyDelete
  4. முதியோர் இல்லத்துக்கு அதாவது சென்று பார்க்குதேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க சகோ

    ReplyDelete
  5. அருமையான மாறுபட்ட சிந்தனை
    விருந்தினர் வருகைக்காகத்தானே
    காக்கா விடாது கத்தும் ?
    இன்று யாரோ
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    Tha.ma 3

    ReplyDelete
  6. avainaayagan,ராஜி&Ramani ஐயா வந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  7. புகைப்பட கவிதை நன்று..த.ம-5

    ReplyDelete
  8. படத்துக்குக் கவிதையா.இல்லை கவிக்குப் படமா.அருமை சசி.பாவம் காக்காவும் ஏமாந்துபோகும்.காக்கா புத்தி இப்ப மனுஷருக்குள்ள !

    ReplyDelete
  9. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி .பதிவுக்காக உருவான படம்

    ReplyDelete
  10. மற்ற உயிர்களுக்கும் உணவளிக்கும் மனிதாபிமானம் கூட இந்தத் தலைமுறைக்கு இல்லை என்று எண்ணியே முதிய தலைமுறையைத் தேடிச்சென்றதோ காகம்!

    ReplyDelete
  11. எனக்கென்னவே காக்கை ஏமாற்றவில்லை என்று தான் தோன்றுகிறதது.... காக்கை அம் முதியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று வேண்டுமானால் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  12. எனது சந்தேகங்களுக்கு விடை அளிப்பது போல் உள்ளது தங்கள் விமர்சனகள் வருகை தந்த அணைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete