Monday, 30 January 2012

அவர் வாழ்வு கனவுகளோ?

“உன் மீது கொண்ட காதலை
என்னென்று உரைப்பேனடி!
உரக்கச் சொல்லி மாளாது !!
ஊர்ப் பஞ்சாயத்திலும் ஜெயிக்காது !!!
"உப்பிட்டவரை உள்ளளவும் நினைகச் சொன்னார்;
எங்கள் உயிர் காக்கும்
உனை காக்க வியலாத, பாவியாய்,நானிங்கே!
கருவறையை விற்கும்
புதுமை காலமிது ...
நெல்மணியை சுமக்கும் ;
என் தாய் மண்ணே! உனை
உன் பிள்ளைகளே கூறுபோடும் அவலமும் கண்டேனே!
ஏர் பிடித்து,நெல் அறுத்து,
என்பிள்ளை வாழ்வினிலே; ஏற்றம் கண்டேனே!
இன்றவனே; மாளிகை இருக்க
மண் எதற்கு என்றுரைத்தானே?
ஏர் உழவன் எதிர்காலம் ,
கேள்வியாக!,இயற்கைக்கு இடிதாங்கி ,
வீட்டிற்கு சுமை தாங்கி ,
நமக்கு பாலையில் துடிக்கும்,
அறியாத மண்புழுவாய் !
கடலைரித்து காயங்கள், புயலாக வேதனைகள். ..,
உன் பிள்ளையாலும் போராட்டம்.
உழவன்,உழவுமாடு இல்லையெனில்,
உலகம் நாளையில்லை.ஆனாலும்,
அவர் வாழ்வு கனவுகளோ?
கண்ணீர்வருகிறது்.கவனிப்பார் யாருமில்லை...
சசிகலா

23 comments:

 1. NICE PA.. REALLY APPRECIATE YOU... MY BEST WISHES

  ReplyDelete
 2. இன்னும் கொஞ்சக் காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு வந்தாலும் ஆச்சரியமில்லை.ஆதங்கம் சசி.இதுக்கு அரசுகளும் ஒரு காரணம்தானே !

  ReplyDelete
 3. அவர்களை மழையும் ஏமாற்றுகிறது.

  ,மனிதர்களும் கூட ....... நல்ல கவிதை .

  என்றாவது அவர்கள் வாழ்வு விடியும்

  பசுமையாகும் என்ற நம்பிக்கையில் ....

  ReplyDelete
 4. உழவை மறந்த சமூகம் தன் சுயத்தை இழக்கும்... ஆதங்கத்தின் நல்ல பதிவு அக்கா...

  ReplyDelete
 5. விலை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறி வரும் அவலம் என்று மாறுமோ ?
  மோகன் , ஹேமா & ஸ்ரவாணி,மரு.சுந்தர பாண்டியன் தங்களின் தொடர் வருகைக்கும்
  கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 6. வீட்டிற்கு சுமை தாங்கி ,
  நமக்கு பாலையில் துடிக்கும்,
  அறியாத மண்புழுவாய் !
  கடலைரித்து காயங்கள், புயலாக வேதனைகள். ..,

  கருத்துக்களும் சொற்களும் அடுக்கு அடுக்காய் தவழ்கின்றன.அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 7. //ஏர் உழவன் எதிர்காலம் ,
  கேள்வியாக!,//
  உண்மை சசிகலா.
  அருமையான கவிதை

  ReplyDelete
 8. எங்கள் ஊரில் சுற்றியுள்ள எல்லா நிலங்களும் பிளாட் போட்டு விட்டார்கள். செங்கலைச் சாப்பிட்டு உயிர்வாழ வேண்டியதுதான்.

  ReplyDelete
 9. அருமையான பதிவு
  பச்சைப் பசேலென நடவுப் படத்தைப் பார்த்துவிட்டு
  பதிவைப் படிக்க கூடுதலாக மனம் சங்கடப் படுவதை
  தவிர்க்க இயலவில்லை
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 10. வயல்களெல்லாம் வீடுகளாய் மாறும்போது
  வீடுகளெல்லாம் சுடுகாடாய் மாறும். அருமையான கவிதை. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

  தமஓ 4.

  ReplyDelete
 11. துரைடேனியல் ,ரமணி ஐயா,விச்சு ,சென்னை பித்தன் &தனசேகரன் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்களோடு கூட நன்றிகள் பசுமைகளை வேக வேகமாய் அழித்துவிட்டு உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் மட்டும் இருந்து என்ன பயன் ....

  ReplyDelete
 12. உழைப்பை மறந்த காலம்.லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடும் காலம்.வசிக்க ஒரு வீடு இருந்தாலும் பேராசையினால் நான்கு மனைகள் வாங்கி போடுபவர்கள் அதிகம் இருக்கும் காலம்.இந்த அரக்கர்கள் ஓயும் வரை பசுமைக்கும் வறுமைதான்..

  ReplyDelete
 13. அன்பின் தோழமைக்கு வணக்கம் ..
  வரும் காலத்தில் இதை விட கொடிய நிகழ்வுகள் அரங்கேறலாம்...
  உணர்வுள்ள வரிகளுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. கருவறையை விற்கும்
  புதுமை காலமிது ...///

  வணக்கம் சசிகலா அக்கா, இந்த வரிகள் மிக அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. //கருவறையை விற்கும்
  புதுமை காலமிது ...
  நெல்மணியை சுமக்கும் ;
  என் தாய் மண்ணே! உனை
  உன் பிள்ளைகளே கூறுபோடும் அவலமும் கண்டேனே!//

  ஆதங்கம்...ஆதங்கம்!
  அருமையான கவிதை.

  ReplyDelete
 16. ராதா ராணி அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 17. நண்பர் அரசன் அவர்களே கொடிய நிகழ்வுகளை எதிர்கொள்ளும் தைரியம் உண்டா என்பது தெரியவில்லை தான் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 18. நமது ஆதங்கத்தை எழுத்துக்கள்மூலம் மட்டுமே பகிர முடிகிறதல்லவா பி.அமல்ராஜ் &சத்ரியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 19. இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
  காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

  ReplyDelete
 20. வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
  http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html

  ReplyDelete
 21. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  ReplyDelete