Sunday 1 January 2012

விலைவாசியைப்போல

எண்ணுவதை எல்லாம்
ஏட்டில் எழுதி
கடிதங்களாய் பரிமாறிக் கொண்ட
காலம் மாறி
நினைத்தால் பேசிக்கொள்ளும் நிலையில்
அலைபேசியில் அழைக்கிறாய்
ஹலோ..... ஹலோ என நியும்,
கேட்குதா ...கேட்குதா என நானும் .....
அறையை விட்டு வெளியில் வந்தும் ,
விறுவிறுவென மாடிக்கு ஓடியும் ,
கிழக்கு மேற்க்கு திசைகளை அளந்து பார்த்தும்  ....
ஒரு வார்த்தையும் கேட்க வியலாது
எனக்கு எங்கு துண்டித்து போக
உனக்கோ அங்கு ...
கிடு கிடு வென ஏறும் விலைவாசியைப்போல
எகிறிக்கொண்டு இருக்கும்
என்னோடு பேசவியலாது போன ஏக்கமும் ....
அலைபேசி கட்டணமும் .
சசிகலா

22 comments:

  1. அன்றாட வாழ்வில் நிகழும் சிறுச் சிறு நிகழ்வுகளைக் கூட
    அருமையான கவிதையாக்கி விடமுடியும்
    கவித்துவம் மிக்க மனம் இருந்தால் என்பதற்கு
    இந்தப் படைப்பே அத்தாட்சி
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1
    (எனக்கு இங்கு....
    உன்னோடு பேச இயலாத
    என் இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமோ)

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி

    ReplyDelete
  3. //உனக்கோ அங்கு ...
    கிடு கிடு வென ஏறும் விலைவாசியைப்போல
    எகிறிக்கொண்டு இருக்கும்
    என்னோடு பேசவியலாது போன ஏக்கமும் ....
    அலைபேசி கட்டணமும் .//

    அருமையான வரிகள் சகோ. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழ்மணம் வாக்கு 2.

    ReplyDelete
  4. துரைடேனியல் அவர்களே மிக்க நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. செம கலக்கல் வரிகள் ..
    என்னங்க பண்றது சில நேரங்களில் இப்படியும் நடக்கத்தான் செய்கின்றது ..

    ReplyDelete
  6. மிக்க நன்றி அரசன் அவர்களே

    ReplyDelete
  7. செம கலக்கல் சசி !

    ReplyDelete
  8. எல்லோரும் தினமும் கைபேசியுடன் படும் அவ்ஸ்தை களை மிக அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளது இக்கவிதை அதிலும் இவ்வரிகளில்
    "எகிறிக்கொண்டு இருக்கும்
    என்னோடு பேசவியலாது போன ஏக்கமும் ....
    அலைபேசி கட்டணமும்" .

    ReplyDelete
  9. ஹேமா,avainaayagan அவர்களே மிக்க நன்றி

    ReplyDelete
  10. உண்மைதான் சில சமயம் ஏக்கத்தோடு எரிச்சலும் ,இயலாமையும் சேர்ந்து ஒருவித கோபம் கலந்த பெருமூச்சு தான் ,அருமை சகோ

    ReplyDelete
  11. கவிதை அற்புதமாய் வந்திருக்கின்றது

    ReplyDelete
  12. ''...கடிதங்களாய் பரிமாறிக் கொண்ட
    காலம் மாறி
    நினைத்தால் பேசிக்கொள்ளும் நிலையில்
    அலைபேசியில் ....''
    நவீன காலங்கள் இத்தனை வசதியோடு...
    சாதாரண வரிகளோடு கவிதை .மிக்க நன்று வாழ்த்துகள் சகோதரி. அந்திமாலையில் வரிகள் தந்தமைக்கும் மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. பிரிவின் ஏக்கம் தாங்கிய வரிகள். அங்கே அவர் படும்பாட்டை அழகாய் சொல்லி, இங்கே தான் படும் அவதியை நாசுக்காய் மறைக்கிறதோ நாணம் ஏந்திய நங்கை மனம். கவி நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
  14. என்னோடு பேசவியலாது போன ஏக்கமும் ....
    அலைபேசி கட்டணமும் .
    செல்போன் கம்பெனிக்காரர்களுக்குத்தான் லாபம். சூப்பர்.

    ReplyDelete
  15. Facebookல் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  16. கீதா,M.R ,சந்திரகௌரி ,kovaikkavi ,விச்சு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  17. அவன் தான் அழைக்க வேண்டும், அவள்தான் கேட்க வேண்டும்.நிதர்சனம் கவிதையிலும்.

    ReplyDelete
  18. அவன் தான் அழைக்க வேண்டும், அவள்தான் கேட்க வேண்டும்.நிதர்சனம் கவிதையிலும்.

    ReplyDelete
  19. உணர்வுகளை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்..

    ReplyDelete
  20. எங்கள் வாழ்கையில் கேட்கும் சத்தங்களை சங்கீதமாக ரசிக்க சிலரால் தான் முடியும்
    ஒவ்வொரு செயலை கவிதையாக்க உங்களுக்கு தெரிந்திருகிறது.......நல்ல ரசனை.

    ReplyDelete
  21. G.M Balasubramaniam,guna thamizh,இடி முழக்கம்
    வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete