Monday 9 January 2012

நினைவுகளின் வருடல்கள்


கண்ணாடி மாளிகைக்குள்
இருந்து கொண்டு
வீதியில் போகும் உன்னை
கல் எறிந்து கூப்பிடுகிறது காதல்


 காக்கைக்கும் தன் குஞ்சு
 பொன் குஞ்சாம்
என்னை நீ வர்ணிக்கும்
போதெல்லாம் இப்படிதான்
நினைத்துக்கொள்கிறேன் .


உன்னை தீண்டினால்
காற்றுக்கும் காய்ச்சல்
வந்துவிடும் ....
அதுதான் அசைய
மறுக்கின்றன மரங்கள் .
 
மின்னலுக்கும்
உனக்கும் ஒரு ஒற்றுமை
மின்னலை பார்த்து
பயத்தில் கண் மூடிக்கொள்வேன்
உன்னைப் பார்த்து
வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறேன் .





15 comments:

  1. கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கொரு சந்தேகம் இந்த காலப் பெண்களுக்கு வெட்கபட தெரியுமா அல்லது வெட்கப்படுவதுமாதிரியாவது நடிக்க தெரியுமா?

    ReplyDelete
  2. நினைவுகள் பலநேரம் நம்மோடு நிம்மதியாய் கைகோர்த்து.....

    ReplyDelete
  3. அடடே..அருமை..இந்தப் பாதையை விட்டுவிட வேண்டாம்..தொடர்ந்து இதிலே பயணியுங்கள்..வாழ்த்துகள்..

    த.ம.1

    சந்தேகம்

    ReplyDelete
  4. வருடுகிறாய்...தென்றலாக,மணக்கிறாய்...மலராக,இசைக்கிறாய்...குயிலாக,எழுதுகிறாய்...கவியாக!...பயணம் தொடரட்டும்.....

    ReplyDelete
  5. மிக மிக அருமையான படைப்பு
    கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துதான்
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கவிதைகள் அனைத்தும் அருமை. அனைத்திலும் முதலாவது மிக அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  7. வருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும்
    எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  8. //கண்ணாடி மாளிகைக்குள்
    இருந்து கொண்டு
    வீதியில் போகும் உன்னை
    கல் எறிந்து கூப்பிடுகிறது காதல்//

    காதலே இப்படித்தானோ?

    ReplyDelete
  9. நண்டு @நொரண்டு -ஈரோடு,veedu

    வருகை தந்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  10. // மின்னலுக்கும்
    உனக்கும் ஒரு ஒற்றுமை
    மின்னலை பார்த்து
    பயத்தில் கண் மூடிக்கொள்வேன்
    உன்னைப் பார்த்து
    வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறேன் //

    ரசித்தேன் :-)

    ReplyDelete