Wednesday 10 July 2013

நீ தந்த நினைவுப் பரிசு !


நினைவுப் பரிசென எதுவும்
நாம் பகிர்ந்து கொண்டதில்லை !

நினைவால் கூட நாம்
பிரிந்திடுவோம் என்று 
நினைத்ததுமில்லை.

கண் பட்டுப் போனதுவோ.
நாம் கூடி நின்று பழகிய
காட்சிகள் பொய்யானதுவோ.

பஞ்சனை தாங்கும் கண்ணீரை
நெஞ்சனையில் தாங்க
வாராயோ...?

தொண்டைக்குழி 
அடைத்திடுதே தோள்
தட்டி ஆறுதல் கூறாயோ ?

காலமெலாம் பார்த்திருக்க
கலங்கரை விளக்கமென-உனை
நான் நினைத்தேன்...

கண்கலங்க விட்டுவிட்டு
போனதெங்கே பூமகளே
நினைந்துருகி சாவதற்கோ
நினைவதனை விட்டுச்சென்றாய்.

மனமுருகி அழைக்கின்றேன்
மனமிலலையோ வந்து சேர.
என் தேடலுனக்கு இனித்திடுதோ
ஓடி ஓடி ஒளிகின்றாய்.

கரை சேர்க்கும் ஓடமிங்கே
நீயெனக்கு ஆனபின்னே
மூழ்கவிட்டு போனதெங்கே...

தாயில்லா பிள்ளையிவள்
தயவில்லையோ தாரகையே.
தஞ்சமென மடிசேர
தவமிருக்கேன் தரணியிலே.

32 comments:

  1. // தாயில்லா பிள்ளையிவள்
    தயவில்லையோ தாரகையே.
    தஞ்சமென மடிசேர
    தவமிருக்கேன் தரணியிலே.//

    மிக கவர்ந்த வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. //கண்கலங்க விட்டுவிட்டு
    போனதெங்கே பூமகளே
    நினைந்துருகி சாவதற்கோ
    நினைவதனை விட்டுச்சென்றாய்...//

    கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. உருக்கமான உணர்சிகரமான கவிதை...!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. காலமெலாம் பார்த்திருக்க
    கலங்கரை விளக்கமென-உனை
    நான் நினைத்தேன்...

    உணர்வில் உருக்கம் உள்ளத்தில் பெருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா .

      Delete
  7. //தஞ்சமென மடிசேர
    தவமிருக்கேன் தரணியிலே.//

    நெஞ்சைத் தொடும் வரிகள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. உங்களை புரிந்து சீக்கிரம் வருவாங்க அக்கா

    ReplyDelete
  9. நல்ல வரிகள்...

    கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. நயமான கவிதை.
    (நடுவில் கவிதைநாயக ஆண்/பெண் குழப்பம் வருகிறது:)

    ReplyDelete
    Replies
    1. நான் தேடும் என் சிநேகிதிக்கே இக்கவிதை...

      Delete
  11. நீங்கள் உருகி எழுதிய அழகான கவிதையை படிக்கும் போது மனமும் உருகிவிடும் போல இருக்கிறது சகோ

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு கேட்கவில்லையே..

      Delete
  12. நல்ல உருக்கமான கவிதை.
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. முதலில் ' அவர் ' போலவும்
    முடிவில் ' மகள் ' போலவும்
    தெரிகிறது . நெகிழ்ச்சி !
    .

    ReplyDelete
    Replies
    1. எல்லாமுமாய் என் சிநேகிதியே இருக்கிறாள் தோழி.

      Delete
  14. எந்த அன்பின் பிரிவிற்கும் பொருத்தமான கவிதை ...அருமை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. தென்றலின்
    வருகையாய் வருடும் கவிதை ..!

    ReplyDelete