Sunday, 21 July 2013

உறவுகள் மேம்பட !


உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்....
ஒற்றுமையே பலம் என்றுணருங்கள்..
தந்தை தாய் எவ்வழி வந்தால் என்ன ?
தரணியில் நிலையாம் அன்பைப் பயிலுங்கள்.

அள்ள அள்ள சுரக்கும் செல்வம்
நல்ல நல்ல சேதிகள் சொல்லும்
கள்ளமில்லா உள்ளம் கொள்ளும்
கன்னித் தமிழ் அங்கே கொஞ்சும்.

மழைத்துளி ரசிக்க வைக்கும்
மண் வாசம் நுகர வைக்கும்
வானவில்லை பார்த்து மகிழ்ந்து
வட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.

கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்
கூடி திருவிழா பார்க்க வைக்கும்
பகிர்ந்துண்டு மகிழ வைக்கும்
பார்ப்போரை உறவாய் இணையவைக்கும்.

பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்
பட்டுப் போன உறவை துளிர்க்கும்
சிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)
செழித்து வளரும் பண்பதனை கற்றும்.

விருந்தோம்பல் பழக வைக்கும்
வீட்டிற்கொரு தோட்டமமைக்கும்
தொன்றுதொட்டு வரும் ஒழுக்கமதை
தொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.

19 comments:

 1. ''..பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்

  பட்டுப் போன உறவை துளிர்க்கும்..'' இதே சாயலுடை தலைப்பே எனது ஆக்கமும் இம்முறை.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 2. அழகான இப்போது காணமுடியாத
  ஓர் அற்புத புகைப்படமும் கூட....

  தனிமையை விரும்பும் உலகமாகிவிட்டது
  காரணம் பொருளாதாரம் என்கிறார்கள்....

  எப்படி இருந்தாலும் உறவுகளோடு
  உறவாடினால் அதிலுள்ள இன்பமே தனிதான்...

  அதனுடைய மகத்துவம் தெரியாத
  இளைய தலைமுறைகள் பாவம் அவர்கள்....

  மேற்சொன்ன எத்தனையோ அன்பான பாசமான
  விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன நம் சொந்தங்களில்..

  அன்புள்ள ஒருவரால் தான் அதனை
  உணர்ந்து எல்லோரையும் அரவணைக்க முடியும்...

  அப்பேற்பட்ட அருமையான பதிவு சசி
  தங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்...

  எனக்கும் இதுபோன்ற எண்ணங்கள் எப்போதுமே
  நெஞ்சோடு இருப்பதுண்டு உறவுகள் வேண்டுமென்றே...

  தானாக விலகி செல்லும் ஒருசில உறவுகளை
  நம்மால் இழுத்துபிடிக்கவும் முடியாது கூடாது....

  முடிந்தவரை ஒன்றாக இருங்கள் சொந்தங்களே
  போகும்போது என்னதான் கொண்டுபோகப்போகிறீர்கள்...


  ReplyDelete
 3. குடும்ப ஒற்றுமையை விளக்கும் அழகான கவிதை...

  இனிய வாழ்த்து....

  ReplyDelete
 4. அன்பை பறைசாற்றும் அருமையான் கவிதை

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. மழைத்துளி ரசிக்க வைக்கும்
  மண் வாசம் நுகர வைக்கும்
  வானவில்லை பார்த்து மகிழ்ந்து
  வட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.

  தென்றல் எழுதும் கவிதைகள் ரசிக்கவைக்கும் ..!

  ReplyDelete
 6. "உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்...."
  திருவிழாக்காலங்களில் ஒன்று கூடிய காலங்களும் இப்பொழுது குறைந்து விட்டன. கூடிக் குலாவுவதே மகிழ்ச்சிதான். அழகிய கவிதை.

  ReplyDelete
 7. இந்த காலத்துல அபூர்வமான போன விஷயங்களில் இதுவும் ஒன்று. புகைப்பட எல்லைக்குள் அடங்க மறுக்கும் இந்த குடும்பத்தைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் கவிதையும் அதற்கு அழகூட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்
  கூடி திருவிழா பார்க்க வைக்கும்
  பகிர்ந்துண்டு மகிழ வைக்கும்
  பார்ப்போரை உறவாய் இணையவைக்கும்.

  பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்
  பட்டுப் போன உறவை துளிர்க்கும்
  சிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)
  செழித்து வளரும் பண்பதனை கற்றும்.


  அருமையான வரிகள் - அழகான கவிதை.

  ReplyDelete
 9. வருடிச்செல்லும் தென்றல் போன்ற கவிதை வரிகளால் நிச்சயம் உறவுகள் மேம்படும். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. ஒற்றுமையை உரைக்கும் படைப்பு ... நான் உங்களின் குறுங்கவிதைகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அக்கா

  ReplyDelete
 11. இன்றைக்கு தேவையானது அருமையான வரிகளில்... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 12. தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/All-my-time.html

  ReplyDelete
 13. உறவின் ஒற்றுமையை உணர்ந்திட உரைத்த நல்ல சிந்தனை வரிகள்!

  அருமை! வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete

 14. உங்களின் இந்த கவிதையை பள்ளிப்பாடப் புத்தகங்களில் வெளியிடலாம். முடிந்தால் தமிழக் கல்வி ஆணையாளருக்கு அனுப்பி முயற்சி செய்யலாம்

  ReplyDelete
 15. சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தோழி .

  ReplyDelete
 16. இப்போது பார்க்க முடியாத படம்.....

  நல்ல கவிதை.....

  ReplyDelete
 17. விருந்தோம்பல் பழக வைக்கும்
  வீட்டிற்கொரு தோட்டமமைக்கும்
  தொன்றுதொட்டு வரும் ஒழுக்கமதை
  தொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.//
  அருமையான கவிதை.

  ReplyDelete
 18. இன்று வலைசரத்தில் மரபுக் கவிதை முத்துக்களின் ஊர்வலம்
  முடிந்தால் வாருங்கள் தோழி .
  http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_23.html

  ReplyDelete