Wednesday 3 July 2013

இயற்கை சீரழிவு !

சிறு சிறு அலையாய்
சில் வண்டின் ரீங்காரம் 
கேட்டு தவழ்ந்து வந்த
ஏரிப்படுகையை காணோமடி...

நாணல் நிற்கும் கரையோரம்
நாணிச் சிரித்த மலர் 
வனத்தையும் பார்த்தாயோடி...

அழுக்கெடுத்த ஒரு கூட்டத்தின்
ஆலேலோ பாட்டுச் சத்தம் கேட்கலையே...

குடம் குடமா நீரெடுத்து -தண்ணி
குடிச்ச தாகம் தீரலையே..
விதைச்ச விதை முளைச்சிடவே
ஏரிப்பாசனத்துக்கும் வழியில்லையே.

காத்து  போன பலூனாட்டம்
சுருங்கிப் போன ஏரியப் பாரு
சிறு பிள்ளைகள் விளையாடும்
சறுக்குப் பாறையாட்டம் அணையப்பாரு.

அடுக்கடுக்கா மாடி வீடு
தவிச்ச வாய்க்கு தண்ணியில்ல
ஓலம் கேளு.

வாய் இருந்தா வசைபாடியிருக்கும்
கை, கால் இருந்தா தப்பி ஓடியிருக்கும்.
இயற்கையை சுரண்டிப்பிழைக்கும் மானுடமே
மனித இனமே அழிந்து போகும் 
காலம் வெகு சீக்கிரமே.

13 comments:

  1. குடம் குடமா நீரெடுத்து -தண்ணி
    குடிச்ச தாகம் தீரலையே..
    விதைச்ச விதை முளைச்சிடவே
    ஏரிப்பாசனத்துக்கும் வழியில்லையே.

    உங்கள் ஏக்கம் மட்டுமல்ல எல்லாருடைய ஏக்கமும் உங்கள் கவிதையாய் வந்திருக்கிறது.

    ReplyDelete
  2. காலம் வெகு சீக்கிரமே.
    >>
    நல்லா சொல்லியிருக்கேம்மா குறி. நான் வர மாட்டேன்.., இப்போதான் டிவில புது சீரியல்லாம் ஆரம்பிச்சிருக்காங்க. முடியட்டும் அப்புறம் வரேன்

    ReplyDelete
  3. இயற்கையை சுரண்டிப்பிழைக்கும் மானுடமே
    மனித இனமே அழிந்து போகும் காலம் வெகு சீக்கிரமே....!


    இயற்கை சீரழிவு !

    ReplyDelete
  4. இயற்கையை அழித்து அழிந்துகொண்டு இருக்கிறோம்! நல்லதொரு கவிதை! நன்றி!

    ReplyDelete
  5. சுரண்டிப்பிழைக்கும் மானுடத்தால் வந்துகொண்டிருக்கும் விளைவுகள். எத்தனை பேரளிவுகளை சந்தித்தாலும் திருந்தப்போவதே இல்லை.

    பிணத்தின் கைகளை தங்கத்துக்காக வெட்டும் மிருகஇனம் ஒரு புறம்.

    நல்ல கவிதை. .

    ReplyDelete
  6. அழிந்து கொண்டிருக்கும் கிராமும், கிராமம் சார்ந்த இயற்கையும் கண் முன்னே வந்து போனது.. அருமை..

    ReplyDelete
  7. எப்போதும் இது குறித்து மனதிலோர் தாக்கம் ஊள்ளது தோழி என்செய்வது
    இந்த சமூதாயம் இதனை உணராதவரைத் துன்பம்தான் .

    ReplyDelete
  8. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ என்று அச்சமாகத் தான் உள்ளது...

    ReplyDelete
  9. புலம்பித் தவித்து கொந்தளித்துக்
    குமறி கவிதை வடிப்பதும் கண்ணீர்
    வடிப்பதுமே வாழ்வாகிப் போனது இங்கு.....
    என் செய்வது ?

    ReplyDelete

  10. வணக்கம்!

    தமிழ்மணம்!

    தண்ணீா் நிலையெண்ணித் தந்த கவிதையிலே
    கண்ணீா் இருக்கும் கரைந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  11. உண்மை தான் சீக்கிரமே இது நடக்கும் - நடக்க வைத்து விடுவோம் நாம்! :((((

    ReplyDelete
  12. அருமையான கவிதை!

    ReplyDelete