Wednesday 31 July 2013

இல்ல விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் !

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி


ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.


இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில்  எனது  "தென்றலின் கனவு' " கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்
வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.


(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது) 




வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.
கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.


  -          ஆரூர் மூனா செந்தில்   
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார்  மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·         தமிழ்வாசி பிரகாஷ்  மதுரை
·         சதீஷ் சங்கவி  கோவை
·         வீடு சுரேஷ்குமார்  திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம்  பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

நன்கொடை:





இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)




                                                                   மகிழ்ச்சியுடன் 

                                                                                                                              நிர்வாகக் குழு

48 comments:

  1. நிர்வாகக் குழு என்பதைவிட ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரைப் பயன்படுத்துவதே பொருத்தமாயிருக்கும். TEAM WORK - காலத்தின் கட்டாயம். முடிவெடுப்பதில் குழப்பம் என்றால் ஜனநாயகம் பின்பற்ற ஒற்றைப்படை எண்ணில் ஒருங்கிணைப்புக்குழுவினர் அமைய வேண்டும். பங்கேற்கும் ஒவ்வொரு வலைப்பதிவரிடமும் குறந்தபட்ச நன்கொடை/ கட்டணம் தாராளமாக வாங்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒருங்கிணைப்புக்குழு நல்ல பொருத்தமான பெயரும் கூட நன்றிங்க. தங்களையும் அழைக்கிறேன் .

      Delete
  2. சிறப்பாக நடத்துவோம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சிங்க சகோ.

      Delete
  3. தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete
  4. அப்பப்பா... எத்தனை பெரிய அளவில் விழா நடைபெறவுள்ளதே...
    வாசிக்கும் போதே ஹையோ நாமெல்லாம் இப் பிறப்பில் இவைகளைக் காண்போமா என ஏக்கம் கூடவே வருகிறது தோழி!

    அருமை!. விழா ஒழுங்கமைப்புகள் கனகச்சிதமாக இருக்கின்றது.

    யாவும் சிறப்புற அமைந்திட மனமார வாழ்த்துகிறேன்!
    பகிர்வினுக்கு மிக்க நன்றி தோழி!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி தாங்களும் வருகை தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      Delete
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க சகோ.

      Delete
  6. சகோதரி....

    கண்டிப்பாக வருவோம் நமளுக்கு அனைவரிடும் பழகும் பழக்கமும், சுத்தமான அன்புதான் பிடிக்கும்...


    ////
    (மகசாட்சி...

    அம்மணி...

    கறிகஞ்சி இருக்கா... கறிகஞ்சி ஊத்துறமாதிரி இருந்தா சொல்லுங்க அங்கிட்டு நாங்க கண்டிப்பாக இருப்போம்...)

    ReplyDelete
    Replies
    1. எப்படி கறிகஞ்சிய குடிச்சிட்டு படம் எடுக்க சொன்னா முகம் தெரியாம எடுக்கவா..?

      Delete
    2. சைவ சாப்பாடு போடும்போதே ரெண்டு இலையில உக்காந்து சாப்பிட்ட சௌந்தர் தம்பி, கறிக்கஞ்சி ஊத்துனா?!

      Delete
  7. சென்றமுறை நீங்கள் அழிப்பு விடுத்தும் வரவில்லை இந்தமுறை தவற விட மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை நீங்க எங்களை அழைக்கிறிங்க.. மகிழ்ச்சி.

      Delete
  8. I read this Thank you for info.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களையெல்லாம் பார்க்கும் ஆவல் இருந்தும் பார்க்க முடியவில்லை. மகிழ்ச்சி தோழி.

      Delete
  9. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்களும்வர வேண்டும் தோழி.

      Delete
  10. நாங்களும் வருவோம்ல....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க...மகிழ்ச்சி.

      Delete
  11. மகிழ்ச்சியாக ஒன்றிணைவோம் சிறப்பாக நடத்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சிங்க சிறப்பாக நடத்துவோம்.

      Delete
  12. Replies
    1. வாழ்த்து சொன்னால் போதாது நீங்களும் வருகை தர வேண்டும்.

      Delete
  13. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொன்னால் போதாது நீங்களும் வருகை தர வேண்டும் தோழி.

      Delete
  14. நூல் வெளியீடு: -பதிவர் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொன்னால் போதாது நீங்களும் வருகை தர வேண்டும் தோழி.

      Delete
  15. பதிவை வாசிக்கும்போதே ஆசையா இருக்கு. ஆனால்.... சட்னு கிளம்பி வரமுடியாத தொலைவில் இருக்கிறேன்:(

    எல்லாம் நல்லபடி நடக்கணுமுன்னு மனதார வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சிங்க தங்கள் வாழ்த்துரையுடன் தாங்களும் வருகை தந்தால் மிக்க மகிழ்வாக இருக்கும்.

      Delete
  16. விழா சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அது என்ன வாழ்த்து நீங்க சென்னையில் தான் இருக்கிங்க தெரியும் வாங்க வந்து விழா சார்பான பணிகளை பாருங்க.

      Delete
  17. இல்ல விழானு சொல்லிட்டீக... வந்திருவோம்ல ("மொய்"யோடு தாங்க அம்மிணி... பயப்டாதீங்கோ!)

    ReplyDelete
    Replies
    1. நம்ம இல்ல விழாங்க ... வாங்க வாங்க.

      Delete
  18. விழா சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துக்கள். பதிவுலகின் பெருமையை மேம்படுத்துவதாகவும் பதிவர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதாகவும் இருக்கட்டும் இவ்வினிய விழா. விழா ஒருங்கமைப்புக் குழுவினருக்கு சிறப்பு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களின் ஒற்றுமையை நிலைநாட்டவும் மேம்படுத்தவுமே இச்சந்திப்பு தோழி தாங்களும் வருகை தந்தால் சிறக்கும்.

      Delete
  19. மிக்க மகிழ்ச்சி விழா சிறக்க வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க தோழி.

      Delete
  20. மகிழ்ச்சியான தகவல். பதிவர்களை ஊக்குவிக்கும் விழா சிறக்க நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்களும் வருகை தர வேண்டும். மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  21. சகோதரி...! மாட்னீங்க...!!!

    http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எல்லாம் உங்க பதிவின் தொடர்ச்சி தானே.

      Delete
  22. விழா சிறக்க வாழ்த்துகள்......

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. தாங்கள் வருகை தந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
  23. நாங்க வர்றமுள்ள...

    ReplyDelete
    Replies
    1. தெரியுமுங்க. நல்வரவு.

      Delete
  24. இது என்ன தொடர் பதிவு வாரமா ?

    ReplyDelete