Friday 2 August 2013

காதலின் புலனடக்கம் !


உன் வருகைக்காக
காத்திருக்க போவதில்லை
என் விழிகள்....

நீ வரும் பாதையில்
தவம் இருக்க போவதில்லை
என் கால்கள்.

உன்னிடம் பேச
வார்த்தைகளை 
சேகரிக்க போவதில்லை
என் உதடுகள்.

உன் அருகாமையில்
தன் துடிப்பை 
அதிகப்படுத்தப்போவதில்லை
என் இதயம்.

உணர்வுகளை கட்டுக்குள்
வைத்து..இறுக கண்களை மூடி
சாலையில்  நீ எனை 
கடந்து போகும் நேரத்தை
கடத்திக்கொண்டிருக்கிறேன்.
மூளை மட்டும் 
சொன்ன பேச்சை கேட்காமல்
முன்னே பல் இளித்து வைக்கிறது.

21 comments:

  1. காதலிக்க போதவில்லை என்று சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
  2. //மூளை மட்டும் சொன்ன பேச்சை கேட்காமல் முன்னே பல் இளித்து வைக்கிறது.//

    மூளையை இயங்காமல் செய்து விடுவதே “காதலின் புலனடக்கம்” .... அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மூளை மட்டும்
    சொன்ன பேச்சை கேட்காமல்
    முன்னே பல் இளித்து வைக்கிறது.//
    அதுதானே காதல்.

    ReplyDelete
  4. மூளை மட்டும்
    சொன்ன பேச்சை கேட்காமல்
    முன்னே பல் இளித்து வைக்கிறது.

    மூளை யை மழுங்கடிப்பதே காதலின் வேலை என்பதை உணர்த்தும் கவிதை

    ReplyDelete
  5. மூளை மட்டும்
    சொன்ன பேச்சை கேட்காமல்
    முன்னே பல் இளித்து வைக்கிறது.// அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அனுபவம் தந்த வரிகளா... என்று எண்ண தோன்றுகிறது,- அழகு!

    "சொன்ன பேச்சை கேட்காமல்

    முன்னே பல் இளித்து வைக்கிறது." அன்புகொண்டோரிடம் அறிவு சரணடையும்..!

    ReplyDelete
  7. எத்தனை அழகான கற்பனை!
    அடங்கா மூளை என்று அதை செல்லமாகக் கடிந்துகொள்வதுங்கூட
    இங்கே அருமையாக இயல்பாக இருக்கின்றது.

    இப்படியெல்லம் சிந்தித்தெழு உங்களால்தான் முடியும் தோழி!

    வியக்கின்றேன்...! ரசிக்கின்றேன்...! வாழ்த்துகின்றேன்...!

    ReplyDelete
  8. காதல் வந்தாலே எங்க றாங்கியெல்லாம் எங்கதான் போயிடுமோ தெரிலயே !

    ReplyDelete
  9. மூளை மட்டும்
    சொன்ன பேச்சை கேட்காமல்
    முன்னே பல் இளித்து வைக்கிறது.

    சொன்ன பேச்சு கேட்காத மூளை..!

    காதல் இதயம் சார்ந்ததன்றோ..!

    ReplyDelete
  10. காதலின் குணமே அதுதானே

    ReplyDelete
  11. துளித்துளியாய் மண்வீழும் மழைத்துளிகள்
    துளிர்விடுமே உயிர்மரமாய் அழிவின்றியே!
    துயரங்கள் பகிர்கின்ற துணையாயினும்
    துன்பங்கள் மனம்சூடிப் பறந்தோடுதே!
    தனதென்று எதைவைத்துக் கொண்டாட
    தவறும் சரியுமே தன்வழி தான்போகுதே!
    உண்மையெது பொய்யெது தேடல்களில்
    ஜனனமரண காட்சிமட்டும் மெய்யாகுதே!
    உதிராத இதழில்லை மடியாத மணமில்லை
    உறவுகளும் இதுபோன்ற நிழல்மேகமே!

    ReplyDelete
  12. நிச்சயமான உண்மை

    ReplyDelete
  13. நிச்சயமான உண்மை

    ReplyDelete
  14. உண்மையை ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  15. //மூளை மட்டும்
    சொன்ன பேச்சை கேட்காமல்
    முன்னே பல் இளித்து வைக்கிறது.//

    என்ன வரிகள்...

    கடைசியில் மனதைத் தொட்டுவிட்டீர்கள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. கவிதை அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. அனிச்சையாய் சில செயல்கள் அரங்கேறிவிடுகின்றன அன்பிற்குரியவர் அருகிலிருக்கையில். அதை அழகாய் உணர்த்தி காதலின் ஆழம் உணர்த்தும் கவிதைக்குப் பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  18. நல்ல கவிதை....

    இது போன்ற சமயத்தில் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.... இது தான் காதலோ......

    ReplyDelete
  19. நல்ல கவிதை நயமான கவிதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete