Thursday 14 March 2013

வியர்வைத் துளிகள் !

எல்லோரும் தான் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்....
ஆனாலும்
வீழ்ந்து கிடக்கும் 
விவசாயியை பார்க்காமல்
ஓடுவதில் பயனில்லை..


பசித்த போதும்
பைசாவைத் தேடுபவன்
உண்டே தவிர.....
உழுதவரை நினைப்பவர்
யாரும் இலர்.

21 comments:

  1. உண்மை... அவர்கள் நிலை தான் மேம்பட வேண்டும்....

    ReplyDelete
  2. பசித்த போது நமக்கு நினைவுக்கு வர வேண்டியவர் விவசாயி அவரது வாழ்க்கை மேம்பட்டால் நம் வாழ்க்கை மேன்மை அடையும் அதை உணர வேண்டிய தருணம் இது

    ReplyDelete
  3. Sariyaakach sonnirkal vaazhththukkal

    ReplyDelete
  4. உழுகின்றவனை நினைக்காவிட்டால் எதிர்காலத்தில் பைசாவைத்தான் சாப்பிடவேண்டியிருக்கும். சிந்திக்கவைத்த கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தோழி!....
    நல்ல கவியென்பதா நம் தலைகுனிவைச் சொல்வதா
    உள்ளதை உரைத்திட்ட உம்கவி மிகமேன்மை!
    வாழ்த்துக்கள்!

    சேற்றில் கால்வைத்துத்தான் சோறு தந்தான்என்பதை
    ஈற்றுவரையாரும் எண்ணுவதே இல்லையே துவளுமவனை
    கூற்றுவன் அலைகிறான் கூட்டிச்சென்றிடவே ஐயகோ
    வேற்றுமனிதரல்ல விவசாயியும் மனிதன் தானே...

    ReplyDelete
  6. விவசாயிகளின் கையில் தான் உள்ளது இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் !

    ReplyDelete
  7. நிஜம்தான் சசி...

    ReplyDelete
  8. பசுவதை மறந்துவிட்டோம்
    பண்பதை ஒதுக்கிவிட்டோம்
    மூச்சிலும் சுயநலங்கள் நம்
    பேச்சில் மட்டும் பொதுநலம்
    மாறினதுநன்று மனம்மாறின்
    வாழ்வும் வளமும் தென்றலாய்!

    ReplyDelete
  9. நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்கள்

    ReplyDelete
  10. விவசாயத்தின் அருமையை உணரத்தியதற்கு நன்றி.

    ReplyDelete

  11. உங்களைப் போல் சிலர் நினைக்கின்றனர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கிராமத்தில் இருந்து வந்த உங்களுக்கு நல்லாத் தெரியுமே

    ReplyDelete
  13. உணவு பொருள்கள் வீணாக்கும் போதெல்லாம் விவசாயியின் உழைப்பு நினைவிற்கு வந்து மனதை வருத்தும்.

    ReplyDelete
  14. நல்ல கருத்து.

    பையில் பணமிருந்தாலும்
    பண்டம் இருந்தால் தான்
    வாங்க முடியும்...!!

    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete

  15. வணக்கம்!

    உழவன் நிலையை உணா்த்தும் வரிகள்!
    இழிவைத் துடைப்போம் இனி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  16. உழவர் பெருமை உணர்த்தும் கவிதை அருமை.
    இன்னல்கள் பல பட்டாலும் உழவர் நம் பசியை போக்கு கடவுள்.
    உழவர்கள் நிலை உயரவேண்டும்.

    ReplyDelete
  17. விவசாயிகளை நினைத்து பார்க்காத
    உலகம் எப்போதுமே வாழ்ந்துவிடவே
    முடியாது அதேவேளையில் வீழ்ந்து
    போகும் என்பதே சத்தியமான ஒன்று...

    உலக நடப்பை சர்வ சாதாரணமாக
    சொல்லி இருக்கும் தென்றலே என்
    பாராட்டுக்கள் என்றுமே உண்டு
    வாழ்க வளமோடு நிறைவாய்....

    ReplyDelete
  18. உண்மை... தான்.
    வாழ்த்து சசிகலா.
    வாழ்த்துக்கள் சசிகலா.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  19. சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்று அன்று சொன்னவவர்கள் இன்றும் உழுதவன் கணக்கு பார்த்தா உருப்படியா ஒண்ணுமில்ல என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டார்கள்

    ReplyDelete