Monday, 18 March 2013

ஏதுமில்லாததாய் பயணம் !செந்தூரப் பொட்டு வைத்து
செங்கதிரும் துளிர்த்ததடி.

செங்கால் நாரையொன்று
ஒற்றைக்காலை  சேற்றிலூன்றி
மீன் வரவை தேடுதடி.

ஆலமர கிளையொன்றில்
ஆசையாய் இரண்டு கிளிகள்
ஆனந்தமாய் கூடிவாழ.

இன்னிசைக் குயிலதுவும்
இசைப்பாட்டு தான் பாட.

ஈரக்காற்றை உண்ட இரவு
ஈசல்கள் புற்று துறக்க
அதன் முடிவு இன்னாளே.

உச்சாணிக் கொம்பிலொரு
தேன்கூட்டுத் தேனொழுக
கண்ணாடி மேனியனிந்த
ஆற்று நீரில் அது கலக்க.

ஆமையும் கெண்டையுமே
மேல்மட்டம் வந்து பார்க்க
பசுந்தளிர் தானிருப்பை
காற்றாடி வெளிப்படுத்த.

வளை எலியும் தன்பங்காய்
கதிரதை வெட்டிச் செல்ல.

அரசமரம் சுற்றியே
சுமங்கலிகள் அடி வைக்க.

ஊஞ்சல்கள் இரண்டு மட்டும்
ஊரின் கதை பேசியே
கடந்த காலம் நினைத்திருக்க.

வந்ததும் போவதும்
நடந்ததும் நடப்பதும்
கடந்தோடி கலைந்தோடும்
மேகமாய் வரவுகள்.

நன்மையுடன் தீமையுமே
மாய்ந்து மடிந்து போக
நிஜமில்லா கடந்த காலம்
நினைவலையாய் கலந்து விட
யார் யாருடனோ யாருக்கும்
ஏதுமில்லாததாய் பயணம்.

28 comments:

 1. அப்படித் தான் போகுதோ வாழ்க்கை...?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 2. இயற்கையை ரசித்து வாழும் வாழ்க்கைக்கு நிகர் எதுவும் இல்லை அருமையான வரிகளில் இந்த ரசிப்புதான் கடந்த காலத்தின் இனிமைகளோ...

  பூமியவள் பொன் தோய்க்க
  ஒளி கொடுத்து உரமிழந்த
  உதயனவன் ஓய்வெடுக்க
  ஆழியிடை அரண் திரும்ப
  வானவில் வண்ண கோலமிட
  முகிலுறவு மகிழ்ச்சிகொண்டு
  அரவணைத்து உரசிடவே
  வாத்தியமாய் இடிமுழங்கிட
  திளைத்திருந்த சோகமது
  தடமின்றி தணிந்திடவே
  இதமான இயற்கைதனை
  தித்திக்க ரசித்து நின்றேன்
  மேலெழுந்த அலைநடுவே
  புகுந்துவந்த தென்றலது
  தாங்கி வந்த அலைத்துளியை
  இதமாக தெளித்திடவே
  இமை மூடி எனை மறந்து
  இதயமது உணர்ந்திடவே
  தென்றலோடு தழுவிநின்றேன்
  இயற்கையது இருக்கும்வரை
  இன்புறவே ரசித்திடுவோம்
  துன்பமெலாம் போக்கிடுவோம் ...!!!

  ReplyDelete
  Replies
  1. இயற்கையை ரசிக்க வைத்த வரிகள் அழகுங்க. நன்றி தங்களுக்கு.

   Delete
 3. உண்மையான வரிகள். அழகிய கவிதை!
  அப்படியே கிராமத்துத் தென்றலும் காலைக்காட்சியும் வருடிக்கொண்டு போகிறது.
  அழகோ அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. ஏதும் இருப்பது போன்ற தோற்றத்துடன்

  ஏதுமில்லாததாய் பயணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. இயற்கை மட்டுமே நிஜம் கடந்து போகாதது வாழ்வை போல்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 6. இயற்கையை கண் முன்னே கொண்டு வந்து அதில் ஏதுமில்லா பயணத்தை சொல்லிட்டிங்க.. அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 7. வந்ததும் போவதும்
  நடந்ததும் நடப்பதும்
  கடந்தோடி கலைந்தோடும்
  மேகமாய் வரவுகள்.

  இயற்கையின் ரசனை அருமை ..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. இயற்கை அழகு மெளிரும் அழகிய கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. வாழ்க்கையின் போக்கு இப்படித்தான் இருக்கிறதோ? டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டால் எதுவும் பிரச்சனையில்லை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. அப்படியே நன்றிங்க.

   Delete
 10. பயணங்களில் அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, சுவையாவது இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. தேடுவோம். நன்றிங்க.

   Delete
 11. இயற்கை அழகைக் கண்முன் கொணர்ந்து ஒரு யதார்த்தத்தையும் சொல்கிறது கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 12. சிறப்பான கவிதை. இன்று என் பதிவில் கவிதாயினி உங்களுக்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கிறேன்....

  ReplyDelete
 13. ஆலமர கிளையொன்றில்
  ஆசையாய் இரண்டு கிளிகள்
  ஆனந்தமாய் கூடிவாழ.

  இன்னிசைக் குயிலதுவும்
  இசைப்பாட்டு தான் பாட.//

  இந்த வரிகளை கற்பனையில் காண்பதே இனிமையாக இருக்கிறது.
  நல்ல கவிதை.

  ReplyDelete
 14. வாழ்க்கையில் எதுவும் உடன் வருவதில்லை; இதுகாறும் நாம் பெற்ற அநுபவகளைத் தவிர...நற்செயலால் கிட்டும் புண்ணியமும் தீச்செயலால் உயிர் அழுத்தும் பாவமும் அன்றி ஏதுமற்றதாய் தொடரும் வாழ்க்கை பயணத்தை அழகுறக் காட்டும் கவிதை....அருமை சகோதரி...

  ReplyDelete
 15. அருமை ...அருமை ....!வாழ்க்கையின் எதார்த்த நிலைமையை மிகவும்
  அழகாகப் படம் பிடித்துக் காட்டிய என் தோழிக்கு நாவில் ஒரு துளி
  தேன் சொட்டுக்கள் ஏழை என் அன்புப் பரிசாக .இருந்தாலும் உங்கள்
  கவிதையை விடவும் இதில் ஒன்றும் அப்படி இனிப்பு இருப்பதாகத்
  தெரியவில்லையே எனக்கு...! :)

  ReplyDelete
 16. நிஜமில்லா கடந்த காலம்
  நினைவலையாய் கலந்து விட
  யார் யாருடனோ யாருக்கும்
  ஏதுமில்லாததாய் பயணம்.////உண்மையான வரிகள்.

  ReplyDelete