Tuesday, 5 March 2013

மல்லு கட்ட அவளுமில்ல மனக்குறைய எங்க சொல்ல !'ஏன்டி .....துலுக்காணம்
நான் போனேன் மரக்காணம்
என் வூட்டு மலைச்சிருக்கி
உலுக்காத மரம் உலுக்கி
வாங்கி வந்தா சீர்சனத்தி....

ஆத்துப்பக்கம் போகவேணாம்
அதுவாவே தொவச்செடுக்கும்
அழகான செவுர் ஒடச்சி
அதுக்கு வச்சா ஒரு பைப்பு....

கொளத்து மீன புடிச்சி வந்து
கொழம்பு வைக்க அம்மி வேணாம்
அரைச்செடுக்க மிசினிருக்காம்
அதுக்கு நாலு கிண்ணமிருக்காம்...

பச்ச மிளகாய் கடிச்சி தின்ன
பழங்கஞ்சி அலுத்திருச்சாம்
இட்லி தோசை இடியாப்பம்
அர அடுக்கு கிண்ணத்தில
குருக்கும் நெடுக்கும்  கல்லுரெண்டு
ஓடி ஓடி மாவரைக்க
அதுவா கவுத்து அரைக்குமாமே
அனியாயத்த கேளு புள்ள...

தண்ணி இரைக்க கிணறுமில்ல
தாகம் தீர்க்க இளனியில்ல
இளைப்பாற நிழலுமில்ல
என்னா பொழப்பு சொல்லு புள்ள...

ஆடு மாடா சுத்தி புட்டு
நடு நிசி ஊடு வந்து
உறங்கி யெழுந்து போறா அவளும்
விருந்தாளி முகமும் பார்க்கவில்லை
அவளுக்கு.....
புருசன் முகமாவது நினைவிருக்குமா ?
சொல்லு புள்ள....

குனிந்து நிமிர்ந்து வேலசெஞ்சி
குழாய் தண்ணி எடுத்து வந்து
குழம்பு சோறு ஆக்கி வச்சி
கண்டாங்கி சேல கட்டி
கட்டு சோறு கட்டிகிட்டு
கழனி பக்கம் நாம போன
கதைய சொல்ல அவளுமில்ல
காற்றும் வீசவில்ல
என் கொரைய எங்க சொல்ல....
கேக்க கொக்குமட்டும்
உச்சிவெயிலில் ஒத்தக்காலில்
என்னப்போல அதுவுமிங்கே!

34 comments:

 1. மல்லு கட்ட அவளுமில்ல மனக்குறைய எங்க சொல்ல !' ///

  சரி தான்.... தலைப்பு எப்படி இப்புடியெல்லாம்????

  ReplyDelete
  Replies
  1. தங்கள் டிரெனிங் தான் சகோ.

   Delete
 2. ஹா...ஹா...

  சிரிச்சிட்டேன் போங்க

  நிச சண்டையைப் நேரில் பார்த்தது போல் உள்ளது :)

  ReplyDelete
  Replies
  1. சிரித்து மகிழ்ந்தமைக்கு நன்றிங்க.

   Delete
 3. இயற்கையை செயற்கை வென்றது சோகமே! அந்தக்
  கடந்த கால நினைப்பெல்லாம் இன்னும் மனதுக்கு
  கவலை தரும் விடயங்கள் தான் என்ன செய்வது தோழி காலத்துக்கு காலம் எல்லாமே மாறிக்கொண்டே தான் போகும் இந்தக் காலம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும் .வாழ்த்துக்கள் தோழி அருமையான சிந்தனையை தாங்கிச் செல்லும் இக் கவிதை வரிகள் தொடர .

  ReplyDelete
  Replies
  1. எத்தனை வருத்தம் தரும் செய்தி பாருங்கள். இந்தக் காலம் மட்டும் மாறாமல் இருப்பது..

   Delete
 4. நல்லாத்தான் இருக்கு...!

  ReplyDelete
 5. இன்னும் கொஞ்ச நாள்தான்.... அப்புறம் இப்படிப் பேசுறதுக்கூட ஆள் இருக்காது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க உண்மை தான்.

   Delete
 6. வாவ்! ரொம்ப அழகா சொல்லிடீங்க....இந்த டெக்னாலஜி-யல எல்லாரும் தனியா புலம்பற நிலைக்கு வந்தாச்சு!

  ReplyDelete
 7. எதையெதையோ எப்படியெப்படியோ
  தேடியோடி நாடிவாடி பாடிக்கூடி
  கண்டதெலாம் தனிமை வெறுமை
  புதுமை தேடலில் பழமைஅழகாய்
  பழையகஞ்சின் ஞாபகமாய்
  வாடலாயோர் நாகரீக வாழ்வு!

  ReplyDelete
  Replies
  1. அழகான கவிதை நன்றி.

   Delete
 8. Replies
  1. இங்க தான் சொல்லுங்க.

   Delete
 9. பழமை மறைந்து புதுமை வர வர பந்த பாசமும் தொலைந்துதான் போகுது.. குடும்பம் இருந்தாலும் தனிமரமாத்தான் நிறைய பேரோட வாழ்க்கை ஆகி போச்சு.. மனதை தொட்ட கவிதை. அருமை சசி.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய நிலையை சரியா சொன்னீங்க சகோ.

   Delete
 10. கட்டு சோறு கட்டிகிட்டு
  கழனி பக்கம் நாம போன
  கதைய சொல்ல அவளுமில்ல
  காற்றும் வீசவில்ல
  என் கொரைய எங்க சொல்ல....
  கேக்க கொக்குமட்டும்
  உச்சிவெயிலில் கட்டு சோறு கட்டிகிட்டு
  கழனி பக்கம் நாம போன
  கதைய சொல்ல அவளுமில்ல
  காற்றும் வீசவில்ல
  என் கொரைய எங்க சொல்ல....
  கேக்க கொக்குமட்டும்
  உச்சிவெயிலில் ஒத்தக்காலில்
  என்னப்போல அதுவுமிங்கே! //

  ஒத்தக்காலில் கொக்குமட்டும்
  உச்சிவெயிலில் மனக்குறையை
  கேட்கும் சிரமத்தை அருமையான
  கவிதையாக்கியிருக்கிறீகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 11. அருமை அருமை. அப்படியே கிராமத்துத்தென்றல் அற்புதமான மண்வாசனையை அள்ளிவீசி ஆனந்தப்படுத்திவிட்டது.
  சிறப்பு. அழகிய கவிதை. பாராட்டுக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து பாராட்டியமைக்கு நன்றி சகோ.

   Delete
 12. நல்லா இருக்கு.... இரசனை....

  ReplyDelete
 13. பேச்சுத் தமிழில் இயல்பாய் ஒரு கவிதை. சின்னச் சின்ன இழை போல் சொற்கள். கவிதை நடை அருமை!

  ReplyDelete
 14. தண்ணி இரைக்க கிணறுமில்ல
  தாகம் தீர்க்க இளனியில்ல///
  இப்போதே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதென உணத்தியுல்லீர்கள்.கிராமத்து பாசம்.அருமை

  ReplyDelete
 15. மண் மணக்க க(வி)தைக்கறதுல கில்லாடி நீங்கதான்...! புலம்பல் நல்லா ராகமாத்தானிருக்கு.. ரசித்தேன்.

  ReplyDelete
 16. அருமையான சிந்தனை!
  வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 17. நிகழ்நடைப் பாடல்...
  அருமையாக இருக்கிறது தங்கை சசி....

  ReplyDelete
 18. கொக்குமட்டும்
  உச்சிவெயிலில் ஒத்தக்காலில்
  என்னப்போல அதுவுமிங்கே!

  உவமை அருமை!

  ReplyDelete
 19. மண்வாசனை மிக்க இப்படிப்பட்ட வரிகளை கேட்டு எவ்வளவு நாளாயிற்று..நல்ல வரிகள்..

  ReplyDelete
 20. ethaarththathai ekakkaalamaa sollideenga...!

  ReplyDelete