Thursday 8 November 2012

எத்தனைக் கதவுகள்....!



விபரமாயுஞ்சொல்லிடவும் வேண்டும்

விரசமுமின்றியுரைத்தலும் வேண்டும்

உடலுக்கெத்தனைக் கதவுகளுண்டு
உள்ளத்தினெண்ணம் சேர்க்காமல்!

ஆண்பெண்ணென்ற பேதமைகள்
இதிலுமுண்டு வடிவங்களாய்!

கருவிழியாயிரண்டு காக்குமிமையிரண்டு
செவிவழியிரண்டாய் நாசியாயுமிரண்டு!

வாய்வழியுண்ண ஒன்றிருக்க ஜனனத்
தொப்புள்கொடி உறவாயும் காட்சி!

கழிவுகளை வெளியேற்ற இரண்டிருக்க
வேர்வைத்துளி சிந்த ஆயிரமாயிரமாய்!

முடிந்ததாவெனில் இல்லை இன்னுமுண்டு
இன்பத்துக்கென்று தனியாய்படைப்பில்!

ஆணுக்கு முடிந்தது பெண்ணுக்கு இன்னுமுண்டு
தாய்ப்பாலூட்ட தனியாய் யெத்தனையோவுண்டே!

உயிரை உள்வாங்கி வளர்த்த மட்டும் திறக்கும்
கருவறையென்ற கதவு தாய்மையின் சொத்தாக!

எங்ஙனமெப்படி நோக்கினும் பெண்ணுடம்பில்
கதவுகளும் மனதில் கனவுகளுமதிகமாய்!

உரைத்தேனென் எண்ணத்தை யதைப்
பகிர்ந்தேன் உங்களுடன் சரியா?தவறா?
கேள்வியுடன்....?

22 comments:

  1. அருமை சசிகலா!வித்தியாசமான கவிதை
    என்பதிவில் நீங்கள் சொன்னது சரியே!

    ReplyDelete
  2. சசி... விரசமின்றி அழகாய் சொல்லிட்டம்மா. கதவுகளும் கனவுகளும் பெண்களுக்கு அதிகம்தான். ஹாட்ஸ் ஆஃப்!

    ReplyDelete
  3. அருமையான வரிகள் வார்ப்பில் வித்தியாசமான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நீங்கள் நினைத்ததே சரி... அருமையான சிந்தனை...

    tm5

    ReplyDelete
  5. viththiyaasamaana sinthanai...


    vaazhthukkal!

    ReplyDelete
  6. அருமை. இணைத்துள்ள படத்தைப் பார்த்ததுமே 'அட' என்று அடையாளம் தெரிந்து கொண்டேன். நம்ம ராமலக்ஷ்மி மேடம் எடுத்த ஃபோட்டோ. ஒரு நன்றி அவருக்குச் சொல்லி விடலாமே!

    ReplyDelete
  7. அப்படியா நன்றி தங்களுக்கும் ராமலஷ்மி சகோதரிக்கும்.

    ReplyDelete
  8. எத்தனைக் கனவும் கதவும்
    ஏட்டிலடங்கா எழுத்திலுமே
    எண்ணிக் கொண்டிருங்கள்
    உலகுக்கு கதவெத்தனையென
    கவிதைகளாய் எங்களுக்குக்
    கிடைப்பினது பொக்கிஷம்!

    ReplyDelete
  9. ஓக்கே ரைட்டு.., நின்னு நிதானமா ரசிச்சு கமெண்ட் போட இப்போ டைமில்லை. பலகாரம்லாம் செய்யனும்.., தீபாவளி கழியட்டும்.., வந்து கலாய்க்குறேன்.

    ReplyDelete
  10. நல்லா இருக்கு கவிதை வித்தியாசமா விரசம் இல்லாம யோசிச்சு இருக்கீங்க

    ReplyDelete
  11. வித்யாசமான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  12. வித்தியாசமான சிந்தனை! உங்கள் கருத்துக்கள் உண்மையே! வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
  13. வித்தியாசமான கவிதை...

    ReplyDelete
  14. உள்ளதை உள்ளபடி உரைத்தபின் சரியென்ன தவறென்ன

    ReplyDelete
  15. ஐயோ ரொம்ப வித்தியாசமா இருக்குதே....
    இருங்கோ மறுபடி மறுபடியும் படிச்சிட்டு வருகிறேன்

    ReplyDelete
  16. மிகவும் நாசூக்காக சொல்ல வந்ததைச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள் சசிகலா
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    http://ranjaninarayanan.wordpress.com/
    http://pullikkolam.wordpress.com

    ReplyDelete
  17. விரசமில்லாமல் அழகாக எடுத்துரைத்த கவிதை சசி.அசந்துவிட்டேன்.உங்களால் மட்டுமே முடியும் இப்படியெழுத !

    ReplyDelete
  18. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete