Wednesday 7 November 2012

மவுனத்தின் மொழிபெயர்ப்பு !



சிறகு விரிச்சி பறக்குதே -மனசும்
சித்தாடைக் கட்டி விரியுதே
கொத்தோட பறிச்சவன் யாரடி
கொண்டாட தேதியுந்தான் கூறடி.

சித்திரையில் முளைத்தவனோ
சினம் கொண்டே பிறந்தவனோ
கத்திரியிலும் குளிரெடுக்க
கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ?

மலர் வனமே சென்றாலும்
மணமேனோ வீசலையே-
கட்டாந்தரையில் நானும்
களையெடுக்கப் போனேனே..

கடுகுவெடிக்குமுன்னே
காதை பொத்தி நின்றேனே
களவு போனது நிஜம் தானோ
கண்ணுறக்கம் மறந்ததேனோ?

சொல்லுனக்காய்த்  தேடித்தேடி                                                            
சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ
மவுனத்தை மொழிபெயர்க்க
மல்யுத்தம் பயில்கின்றேன.

மன்றாடித்திண்டாடி நானும்
மயங்கித்தான் கிடக்கிறேன்!
உணர்வுக்குள் உனை  நிறுத்தி
உன்னில் எனை தேடுகின்றேன்.

19 comments:

  1. அருமை... வரிகளும் மயக்கத்தான் வைக்கிறது...

    வாழ்த்துக்கள்...
    tm2

    ReplyDelete
  2. ''..உணர்வுக்குள் உனை நிறுத்தி
    உன்னில் எனை தேடுகின்றேன்..''
    ஒரு இனிய இழப்பின் வெளிப்பாடு.
    இதயம் புலம்புவது உணருது.
    நல்ல கவிதை அமைப்பு சசி.
    இனிமை.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. கவிதை வரிகள் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உணர்வுக்குள் உனை நிறுத்தி
    உன்னில் எனை தேடுகின்றேன்.

    முடியும்

    ReplyDelete
  5. மன்றாடித்திண்டாடி நானும்
    மயங்கித்தான் கிடக்கிறேன்!
    >>
    யாருப்பா அங்க?! கொஞ்சம் தண்ணி கொண்டாந்து புளுச்சுன்னு மூஞ்சில தெளிங்க. அப்பாவாது மயக்கம் தெளிதான்னு பார்ப்போம். தீபாவளி கிட்டக்க நெருங்குது.., மயக்கம் வந்துடுச்சாமில்ல?!

    ReplyDelete
    Replies
    1. உண்மையான மயக்கமெலாம் இல்லக்கா சும்மா எதையாவது கிறுக்கவேண்டியது தான்.

      Delete
  6. ஹா... ஹா... சூப்பராச் சொன்னேம்மா தங்கசசி. கொஞ்ச நாளாவே தென்றலுக்கு ஒரே கிறக்கக் கவிதைகளாத்தான் வருது. என்னாச்சுன்னுதான் நானும் யோசிச்சிட்டே இருந்தேன். இந்தக் கவிதைல சொல்லாடல் வெகு அருமை சசி.

    ReplyDelete
    Replies
    1. தங்கையோட சேர்ந்தாச்சா சும்மா டெய்லி என்ன தான் கிறுக்க ?

      Delete
  7. பேசாத சொல்லுக்கும் ஆயிரம் அர்த்தங்கள்
    அதுபோல அல்லவே அழகாக இருக்கிறதிங்கே...

    புரியாத மௌன பாஷையில் என்ன பேசினாலும்
    யாருக்கும் என்ன பயனிருக்க போகிறது...

    அத்தைத்தான் அழகாக சொன்னீங்க சசி கலா
    மலர் வானமே சென்றாலும் வாசமேதும் இல்லையென்று...

    மௌனத்தை புரிய மல்யுத்தம் தேவைதானா
    மனதோடு அகிம்சையுத்தம் செய்தால் போதாதா...

    இருந்தாலும் மனதோடு போராட உடலும்
    வலிமை பெற மல்யுத்த பயிற்சியும் தேவைதானோ...

    அழகாக மவுனத்தின் மொழியை எல்லோரும்
    புரியும்படி சொன்னவிதம் அருமையோ அருமை...

    ReplyDelete
    Replies
    1. கவிதைய விட பெரிதான பின்னூட்டம் நன்றிங்க.

      Delete
  8. உன்னில் என்னைத் தேடுகிறேன்,நல்ல சொற்சிலம்பு/வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வார்த்தைகள் விளையாடும் அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சொல்லுனக்காய்த் தேடித்தேடி
    சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ//இரசித்தேன்

    ReplyDelete
  11. மவுனத்தை மொழிபெயர்க்க மல்யுத்தமா ?
    அழகு வார்த்தைகள்
    ரசித்தேன்

    ReplyDelete