Monday 26 November 2012

என்னருகே வந்து பேசமாட்டாயோ ?


எறும்புக்கு நிகரானவர்
எந்த நிலையிலும் மனம் சோராதவர்
மண்புழுவோடே அவர் சிநேகம்
மேய்ச்சல் மாடே அவர் உறவு..

கன்றுக்குட்டியிடம் கதை பேசி
களத்துமேட்டில் படுத்துறங்கி
வாழும் காலமெலாம் வயலினிலே
வாழ்ந்திடவே கனவு கண்டார்..

எங்கள் மேன்மை கருதி
எல்லாம் துறந்து இந்த
நகரம் நோக்கி படையெடுத்து
நசிந்தது அவர் கனவானாலும்

புன்னகையோட புதுஉலகம்
எமைக் காணச் செய்தார்..
சிறை வாழ்வும் சிறந்திடவே
பழம் கதை பேசி மகிழ்ந்திருந்தார்.

பட்டாம் பூச்சியாய் மக்கள்
திரிந்தாலும் பக்கத்தில் அமர்த்தி
பார்த்துப் பேசி மகிழ ஆசைகொண்டார்
பாவி நானும் உணரலியே
பக்கம் நின்னு பேசலியே..

எதையோஓடோடித் தேடினோம்
தேடலில் மிஞ்சியது ஏதுமில்லை
உன் அருகாமை தேடியே அழுகிறேன்
என் தந்தையே என் வலி உணராயோ
என்னருகே வந்து பேசமாட்டாயோ ?

14 comments:

  1. சிறப்பான கவிதை..

    ReplyDelete
  2. அருமையான தேடல்...
    எப்போதுமே அருகே இருக்கும்
    போது அதன் அருமை தெரியாமல்
    பிரிவில் மட்டுமே உணர்ந்து வருந்தும்
    பழக்கம் நம்மில் எல்லோருக்குமே பழகி
    போனது என்று தான் சொல்லவேண்டும்...

    இருக்குபோதே அன்பை உணர்ந்து வெளி
    காட்டவும் தெரிந்து கொள்ளுங்கள்
    எத்தனை எத்தனையோ உள்ளங்கள் அன்பு
    என்ற விலை மதிப்பில்லா ஒன்றுக்காக
    ஏங்கியே கடைசியில் மரணித்தே போகின்றன...

    யாரிடம் இருந்தாலும் அன்பு அதை ஏற்கும்
    உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன
    தந்தையின் உறவென்றால் சொல்லவும்
    யாருக்கும் சொல்லவும் வேண்டுமா...

    அருமையாக தேடி இருக்கிறீர்கள் சசி கலா
    இல்லாது தவிக்கும் மனநிலையை
    பாராட்டுக்கள் படம்பிடித்து காட்டியதற்கு.

    ReplyDelete
  3. மிகச் சிறப்பான கவிதை சகோதரி
    தமிழ்மணம் 3

    ReplyDelete
  4. அழகான வரிகள்
    அருமை கவிதாயினி

    ReplyDelete
  5. அருமையான கவிதை.
    கன்றுக்குட்டியிடம் கதை பேசி
    கலத்துமேட்டில் படுத்துறங்கி
    வாழும் காலமெலாம் வயலினிலே
    வாழ்ந்திடவே கனவு கண்டார்..

    எங்கள் மேன்மை கருதி
    எல்லாம் துறந்து இந்த
    நகரம் நோக்கி படையெடுத்து
    நசிந்தது அவர் கனவானாலும்//

    இது ஏதோ எனக்கே சொன்னதை போல உணர்கிறேன.!

    ReplyDelete
  6. பிரிந்தவரின் நினைவுகள் அழுத்திசெல்கிற கவிதை.தேடல்கள் என்றுமே இனிமையானவை/

    ReplyDelete
  7. உணர்வுபூர்வமான கவிதை! நன்றி!

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. இப்படித்தான் பலதை விட்டு விட்டு பின்னர் தேடிக் கொண்டிருக்கிறோம்! அருமையான உணர்வின் வெளிப்பாடு! சிறப்பு! களத்து மேடு என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. ''...உன் அருகாமை தேடியே அழுகிறேன்
    என் தந்தையே என் வலி உணராயோ
    என்னருகே வந்து பேசமாட்டாயோ ?...''
    எப்போதும் தொலைத்திட்டே தேடுவோம்!.
    கவலை தான், சோகம் தான் .
    இனிய வரிகள்!.....சசி.
    வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. வார்த்தைகள் சரசரவென்று வந்திருக்கிறது, ஒவ்வொருவரிகளையும் மிகவும் ரசித்தேன். இப்படிதான் வார்த்தைகள் வந்து விழவேண்டும் , இது என்னுடைய கருத்துமட்டும் உங்களுடைய ரசனை எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என்று தெரியாது.

    ReplyDelete