Sunday 25 November 2012

நினைவில் நிற்க !


அம்மாவின்
மரண படுக்கையின் முன்பு
என்ன தெரியுதா மா ?
நான் தான் சின்ன பொண்ணு..

பழுப்படைந்த கண்களுக்கு
முன்னால் கண் களங்கி
மூக்கு சிந்தி...

அருகில் அம்மாவின்
முந்திக்குப் பின்னால்
மலங்க மலங்க விழித்தபடி
நிற்கும் உறவின் மிச்சம்

வாடாம்மா
நான் தான் அத்தை...
முகம்சுளித்து நகரும்
அவனுக்கு....
ஒரு பென்சில் பாக்சும்
இனிப்பு மிட்டாயுமே அடுத்த
சந்திப்பில் என்னை
நினைவுப் படுத்தக் கூடுமோ ?

எத்தனை வயதானாலும்
எல்லா உறவுகளுக்கு முன்னும்
அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
அவசியமாகிப்போகிறது..என்பது
வலிக்கவே செய்கிறது.

19 comments:

  1. அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
    அவசியமாகிப்போகிறது//அருமையான நினைவு எனக்கும் இதுவே தோற்றியது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. ///எத்தனை வயதானாலும்
    எல்லா உறவுகளுக்கு முன்னும்
    அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
    அவசியமாகிப்போகிறது..என்பது
    வலிக்கவே செய்கிறது.///


    நல்ல வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. ம் நினைவில்....வலிக்கவே செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது காலம் அப்படி.

      Delete
  4. காலப்போக்கில் இன்று
    உறவுகள் எல்லாம்
    இந்த நிலையில் தான் உள்ளன
    என்பது மறுக்கமுடியாத
    நிதர்சனமான உண்மை சகோதரி...

    ReplyDelete
  5. உண்மை வரிகள் சகோதரி... உறவுகள் இல்லையெனில் வாழ்வில் வலிகள் தான் அதிகம்...tm3

    ReplyDelete
    Replies
    1. வலிகளே உறவுகளாய் ஆமாங்க.

      Delete
  6. உங்களின் வரிகள் வலிக்கவே செய்கிறது

    ReplyDelete
  7. அம்மாவின்
    மரண படுக்கையின் முன்பு
    என்ன தெரியுதா மா ?
    நான் தான் சின்ன பொண்ணு..


    இந்த வரிகளே! என் மனதில் சுளீர் எனச் சுட்டது. என் அம்மாவின் ஞாபமும் வந்தது.

    நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete


  8. எல்லா உறவுகளுக்கு முன்னும்
    அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
    அவசியமாகிப்போகிறது

    நிகழ்கால வாழ்வை சொல்லும் வலி மிகுந்த வரிகள்

    ReplyDelete
  9. // எத்தனை வயதானாலும்
    எல்லா உறவுகளுக்கு முன்னும்
    அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
    அவசியமாகிப்போகிறது..என்பது
    வலிக்கவே செய்கிறது. //

    இதுதான் இன்றைய சூழல் என்பதனை வலிக்கும் உணர்வுகளில் தெரியப் படுத்திய வரிகள்.

    ReplyDelete
  10. நினைவு என்ற ஒன்று நம்மிடம்
    உள்ளவரையே நாம் எல்லோரும்
    மதிக்க கூடிய ஒரு ஜீவனாக இருப்போம்...

    அந்த ஒன்ற இல்லையென்றால்
    எப்பேர்பட்ட உறவுகளும் கூட சற்று
    நம்மிடம் இருந்து விலகியே நிற்கும்..

    இதுதான் இப்போதும் எப்போதும் உள்ள
    அப்பட்டமான நிகழ்வு இதிலும்
    தன்மை மாறாமல் நமக்கு செய்த
    அனைத்தையும் நினைவில் கொள்பவர்கள்
    மட்டுமே அவர்களை மறக்காமல்
    அன்றுபோல் இன்றும் பாவிப்பார்கள்...

    அழகா சொல்லி இருக்கிறீர்கள்
    அறிமுகம் என்ற பெயரில் நினைவை
    இழந்த பாசம் வைத்த தெய்வத்தை பற்றி...

    பாராட்டுக்கள் சசி கலா அத்தனையும்
    நெஞ்சை உறையவைக்கும் வார்த்தைகள்...
    எதிரிக்கும் கூட இதுபோன்று வரக்கூடாது
    அறிமுக நிகழ்வு ஆண்டவனை வேண்டுவோம்...

    ReplyDelete
  11. நன்றாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete