Thursday 15 November 2012

தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !



நல்லெண்ணம்சூடி வண்ணமாய் நட்பு
நன்மைமட்டுமணியும் உண்மை நட்பு
நன்மைதீமையிலும் கூடவரும் நட்பு
நடப்பதெதுவாயினும் கைவிடாது நட்பு!

அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு
ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு
இதயத்தை நம்பியே நாணயமான நட்பு
ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு!

உதயகீதவேதமது உயர்வான கீதமது
ஊட்டி வளர்க்கும் அன்புப் பாசமது
எதையுமெதிர் பார்க்காத நல்நேசமது
ஏணியாய் வாழுமது எட்டியே உதைத்தாலும்!

ஐவிரல் கையிணைப்பானது உருமாறும்
ஒற்றுமையாய் நின்றுவென்று காட்டும்
ஓங்கிவளர்ந்த ஆலமரம் அதுசாட்சி
ஔிவழி எதுவரினுமது அலங்காரம்!

தானேயழிந்தாலும் தாங்கிடும் அன்புமுண்டு
தவமேயிருந்தாலும் கிடைக்காமல் போவதுண்டு
சுயநலஎண்ணம்கொண்டு புகழ்பாடும் அன்புண்டு
பணம்தேடிப் பறந்தோடும் வேஷவிஷ நட்பவையே!

நட்புவேறு காதல்வேறு பிரித்தறிதல் நன்றென்பேன்
நட்பின்பெயரில் கொச்சையாகும் உறவும் தீமைகளே
ஆண் பெண்ணென்று பேதமையின்றி நட்பெனில்
அதுவே மேன்மை யதுவே உண்மை யதுவேநட்பு!

அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது
சுயமில்லை சுயமில்லை நட்புக்கு சுயமில்லை
சுகமது சுகமது உண்மை நட்பு இன்பமான சுகமே!

34 comments:

  1. நல்ல நட்பை சொல்லும் நல்ல கவிதை..அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. உதயகீதவேதமது உயர்வான கீதமது
    ஊட்டி வளர்க்கும் அன்புப் பாசமது
    எதையுமெதிர் பார்க்காத நல்நேசமது
    ஏணியாய் வாழுமது எட்டியே உதைத்தாலும்!
    நட்புக் கவிதையில் மேலும் மெருகாய் தெரிகின்றன இவ்வரிகள். அருமை தோழி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. தானழிய நேரிடினும் நட்பினை வாழச் செய்யும்
    நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இன்னமும்
    உலகில் மனித நேயம் வாழ்கிறது எனில் அது மிகையில்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  4. நட்புக்கும் காதலுக்கும் கடுகளவும்
    பொருந்துவது இல்லை என்பதுதான்
    எல்லோரும் எற்றுக்கொண்ட விஷயம்...

    பிரித்து பார்க்க தெரியவேண்டும்
    அன்னப்பறவை போல ஆரம்பத்திலேயே
    தெளிந்து பேசிவிடவேண்டும் உண்மை
    நிலையினை இருவரும் ஒருசேர உணர்ந்து...

    நட்பின் உன்னதத்தை உயர்வாக சொல்லிய
    விதமும் பாராட்டுக்கு உரியது சசி கலா
    தங்களின் ஆழ்ந்த சிந்தனையில் உள்ள
    அத்தனையும் வந்து விழுந்தது அற்புதமாய்...



    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
    அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது
    சுயமில்லை சுயமில்லை நட்ப்புக்கு சுயமில்லை
    சுகமது சுகமது உண்மை நட்பு இன்பமான சுகமே!

    அழகான கவிதைக்கு
    நட்பான பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. நட்பு வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. உலகத்தில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது நட்பு...

    அழகிய வரிகள்...

    ReplyDelete
  9. நன்மைமட்டுமணியும் உண்மை நட்பு
    நன்மைதீமையிலும் கூடவரும் நட்பு
    நடப்பதெதுவாயினும் கைவிடாது நட்பு!

    அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
    அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது

    நட்புக் கவிதை வரிகள். அருமை தோழி
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. உலகில் எல்லா உறவுகளையும்விட சிறந்தது நட்பு அதை அழகான வரிகளில் மிகவும் அற்புதமாக தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஆண் பெண்ணென்று பேதமையின்றி நட்பெனில்
    அதுவே மேன்மை யதுவே உண்மை யதுவேநட்பு!

    நான் இரசித்த வரிகள் சசிகலா.
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. என்னை பொறுத்தவரை நட்பு என்ற அச்ச்இல் தான் உலகமே இயங்குது சசி!

    ReplyDelete
  13. என்மேல் என்ன கோபம் தெரியவில்லை. என் கருத்தை ஏனோ வெளியிடவில்லை??????????

    ReplyDelete
  14. நட்பை சிறப்பிக்கும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ennavenru solla,,paaraattuvatharkenrae vaarthaigalai theda vendum polirukkirathae,,,,

    Anusaran

    ReplyDelete
  16. நட்பை அழகிய கவிதை கொண்டு சிறப்பாக படைத்தது பகிர்ந்தமைக்கு நன்றி தோழி... நல்ல நட்பு ஒரு வரம்...

    ReplyDelete
  17. நட்புக்கு அழகிய இலக்கணம்
    வகுத்திட்ட
    அழகிய கவிதை தங்கை....

    ReplyDelete
  18. தானேயழிந்தாலும் தாங்கிடும் அன்புமுண்டு
    தவமேயிருந்தாலும் கிடைக்காமல் போவதுண்டு//

    நட்பின் பெருமை நவின்ற விதம் அருமை! நன்றி! வாருங்கள் என் வலைப்பூவிற்கு "வாழவை!" கவிதை படிக்க!

    ReplyDelete
  19. சுயநலமில்லாத நட்பு என்றும் உயர்ந்தது நல்ல கவிதை

    ReplyDelete
  20. ''..அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
    அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது
    சுயமில்லை சுயமில்லை நட்புக்கு சுயமில்லை
    சுகமது சுகமது உண்மை நட்பு இன்பமான சுகமே!..''
    இன்று சுயநல நட்புத்தானே அரிகமாக உண்டு!
    வேதானை தான் நல்லு கருத்துடை கவிதை..
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. மீண்டும் மீண்டும் மனதை அசைக்கும் நட்பின் பாடலொன்று.அருமை சசி !

    ReplyDelete
  22. அருமையான இந்த நட்பு கவிதை இன்றைய வலைசரத்தில்.
    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-form

    ReplyDelete
  23. வணக்கம்

    இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. சுகமான கவிதை இது
    சுந்தரக் கவிதை. இது.


    "உதய கீத வேதமிது "என்றால்
    இதயம் வேண்டும் போதமும்
    "எதையுமே எதிர்பாரா "
    அன்பு இன்ப வெள்ளமும்

    நட்பெனும் வானில்
    நடமாடும் நட்சத்திரங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete