Tuesday 13 November 2012

எல்லாமே அழிவுப்பாதையை நோக்கி !



கொண்டாடி முடித்துவிட்டோம்-எதை?
ஒருதீயவன் அழிந்தானெனக் கூத்தாடி
ஒளிவெள்ளத்தில் ஒலியையும் இணைத்து
வான்மண்டலத்தைப் புகையால் மூடியே
பட்டென ஓர் இரைமுடித்துச் சட்டெனக்
கொண்டாடினோமே இனிதீமையிலையோ?

புவிதூய்மையானதோ?உறவு அன்பாய்
அறிவாய்ப் பண்பாய் பாசமாய்ப் பூக்குமோ?
தீமையெலாம் ஒழிந்தனவோ?நன்மைகள்
இனி நம்மையாளப் போகிறதோ?இனிமேல்
உள்ளார் இல்லான் பேதமைகள் நீங்கிடுமோ?

மதம்கொண்ட மதவாதம் சீரான பாதைகாட்டுமோ?
ஜாதியடிப்படையிலான பேதங்கள் விடைபெற்றதோ?
வறுமையும் நோயும் உடல்விட்டு மாயமானதோ?
பஞ்சபூதங்கள் நன்நெறிவழி நடக்க உறுதியெடுத்ததோ?
பசுமைவாழ பன்னீர்தெளித்து கோலமிட்டோமோ?
எங்கும் எல்லாம் அப்படியே அழிவுப்பாதைநோக்கி!

ஊர்கூடி உறவுகூடி உள்ளங்களும்கூடி அழகாயாடி
அன்பைப் பகிர்ந்து புத்தாடையுடுத்தி ஏழையுமிந்த
புன்னகையைப் பகிந்ததன்றி வேறேதுமில்லை!
தூய்மைவிதை மனதில் வளரும்வரை பயனில்லை
பண்டிகையும் கடந்தோடும் ஓர்நிகழ்வாய் மட்டும்!!

20 comments:

  1. அருமையாக சொன்னீர்கள் சகோதரி. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete
  2. புவிதூய்மையானதோ?உறவு அன்பாய்
    அறிவாய்ப் பண்பாய் பாசமாய்ப் பூக்குமோ?
    தீமையெலாம் ஒழிந்தனவோ?நன்மைகள்
    இனி நம்மையாளப் போகிறதோ?இனிமேல்
    உள்ளார் இல்லான் பேதமைகள் நீங்கிடுமோ?

    நல்லன யாவும் நடைபெற இறைவனை இத் திருநாளில் வேண்டுவோம்

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன அனைத்து சீர்கேடுகளும் நீங்கி
    நன்மைகள் , ஆக்கங்கள் நடை பெற நாளும்
    பாடுபடுவோம் , துதிப்போம் !
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தென்றல் !

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ நன்றி.

      Delete
  4. நல்லதொரு கேள்வி

    அசுரனவன் அழிந்தான்
    அவன் வாரிசுகள்
    நாமா?
    அல்ல
    அவ்வாறு சுட்டியவர்களா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிலும் உடன் வைத்த கேள்வியும்.

      Delete
  5. நீண்ட நெடு நாளைக்குப் பின் உங்கள் தளத்திற்கு வருகிறேன் அதற்காக முதல் மன்னிப்பு .....

    தீபாவளி நேரத்தில் அழகான கவிதை, பண்டிகைகள் கடந்து விடுகிறதா என்று தெரியவில்ல்லை... அனால் நாமும் கடந்து கொண்டு இருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பெலாம் ஏன் சகோ ?

      Delete
  6. பதில் கூற முடியாத கேள்விகள்....
    விடையைத் தேடத்தான் வேண்டும்...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தேடுவோம். நன்றி சகோ.

      Delete
  7. அருமை...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. தூய்மைவிதை மனதில் வளரும்வரை பயனில்லை
    பண்டிகையும் கடந்தோடும் ஓர்நிகழ்வாய் மட்டும்!!//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    கொண்டாடுவதின் நோக்கம் புரியாத
    கொண்டாட்டத்தில் என்ன பயன் ?
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  9. //தூய்மைவிதை மனதில் வளரும்வரை//
    விதைக்கப்படும் அனைத்து விதைகளும் வளர்ந்து மரமாவதில்லை. விதைக்கப்படும் விதைகளில் சிலவாவது மரமாகி கனிதர வேண்டும் என்பதுதான் இப்பண்டிகைகளின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு இது போன்ற நினைவூட்ட்லகளும் அவசியம். நல்ல கருத்து...

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் வரிகள் நன்றிங்க.

      Delete