Wednesday 21 November 2012

துளித் துளியாய் -3



நந்தவனம் கண்ட
பட்டாம்பூச்சியாய்...
நடை பழகும்
கன்றுக்குட்டியாய்...
தென்றல் தீண்டிய
தேகமாய்..
தவிப்பை மறைக்கத்தெரியாது

தத்தளிக்கிறேன்
உன் ஒவ்வொரு
பார்வைக்கு முன்னும்.

இடைவிடாது
பெய்யும் மழையாய்
வார்த்தை தர
எத்தனித்து தோற்கிறேன்.

பட்டாம் பூச்சி
உன் உறவா..
பட்டுக் கன்னம்
தொட்டுப்போவதேன்.

நட்சத்திரமும்
கண்சிமிட்டி அழைக்குதே
என்னோடு கண்ணாமூச்சியாடி
ஒளியுதே..
--
ஓடும் கார்முகிலில்
உன் உருவம்....
உரசிப்பார்க்கிறாள்
நிலாப்பெண்ணும்.

நெடுந்தூரம் நீ சென்றாலும்
நினைவேனோ உன்னோடே
நித்தம் நித்தம் கதைபேசி
என் நிம்மதி குடித்தபடி.

ஒவ்வொரு நிகழ்வையும்
சேமித்து காத்திருக்கிறேன்
உன்னோடு பேச...
ஒய்யாரமாய் மௌனமே
குடியேறுகிறது .


34 comments:

  1. கவிதையைப் பாராட்ட முயற்சிக்கிறேன். ஆனால் சொற்கள் கிடைக்காமல் தோற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சரிங்க.

      Delete
  2. பட்டாம் பூச்சி, நட்சத்திரம் என வர்ணிப்புடன் நினைவுகளை காத்திருக்க வைக்கும் வரிகள் அருமை...
    tm1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. மூன்றாவது துளியும் எண்ணிக்கையில்
    மூன்றாக இருந்தாலும் முதலையும்
    விஞ்சி அல்லவா நிற்கிறது அழகாய்...

    காதல் என்ற ஒன்று வந்தால் மட்டுமே
    இப்படி ஒரு இம்சை என்று சொல்லமுடியாத
    சொல்லியும் முடியாத ஒன்றை வேண்டியே தினமும்
    எல்லோருமே எங்குமே தேடித்தேடியே...

    இதில் வெற்றி தோல்வி என்பதில்லை
    அந்த அனுபவமே நமக்கு வெற்றிதானே
    இப்படி சொல்கிறார்கள் அனுபவசாலிகள்...

    அப்பேற்பட்ட இம்சையில்லாத சொர்கத்தை
    அழகாக சொல்லி இருக்கிறீர்களே தாங்கள்
    உங்களுக்கும் என் இனிய பாராட்டுக்கள்...

    எல்லோருக்கும் எளிதில் தோன்றுவதில்லை
    இப்படியொரு இயற்கையை ஒத்த சிந்தனை
    வளரட்டும் மனிதனோடு இயற்கையும் ஒன்றாக...

    ReplyDelete
    Replies
    1. கவிதையை விட அழகான பின்னூட்டம் நன்றிங்க.

      Delete
  4. ஓடும் கார்முகிலில்
    உன் உருவம்....
    உரசிப்பார்க்கிறாள்
    நிலாப்பெண்ணும்.
    ////////////////////

    அழகு வரிகள் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிப்பா.

      Delete
  5. நந்தவனம் கண்ட பட்டாம்பூச்சி போல் உங்களின் நினைவுகளை மௌனமாக்கும் கவிதைஅருமை வாழ்த்துக்க்ள

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. ஏக்கம் இன்னும் தீரலையோ? எங்கு பார்த்தும் தெரியலையோ? சின்ன வயசு ஞாபகம்?

    ReplyDelete
    Replies
    1. சும்மா கவிதைக்காக எழுதியது.

      Delete
  7. ஒவ்வொரு நிகழ்வையும்
    சேமித்து காத்திருக்கிறேன்

    ஒவ்வொரு வரியையும் பாராட்டுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. //ஒவ்வொரு நிகழ்வையும்
    சேமித்து காத்திருக்கிறேன்
    உன்னோடு பேச...
    ஒய்யாரமாய் மௌனமே
    குடியேறுகிறது //.

    கவர்ந்த வரிகள்: காதலை அழாகய்ச் சொல்லும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  9. வணக்கம் அக்கா ..
    துளிகள் அனைத்தும் மழைத்துளிகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தம்பீ நலமா ?

      Delete
  10. துளித்துளியாய் நினைவில் பிறந்து நிற்கும் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருக வருக சகோதரி தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  11. யாதோங் கி பாராத்!

    ReplyDelete
    Replies
    1. புரியவில்லையே ?

      Delete
    2. யாதோங் கி பாராத் = நினைவுகளின் ஊர்வலம்!

      Delete
  12. காதல் ஒரு நீருற்று அதனால்தான் சும்மா எழுதினாலும் சொக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அழகாக சொன்னீர்கள் நன்றிங்க.

      Delete
  13. சலவை செய்த வார்த்தைகள் உவமைகளின் கோர்வையோடு, உணர்வுகளை வாரித்தெரித்து ஒய்யார நடை போடுகிறது... மிக அருமை.. தொடருங்கள் !

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

      Delete
  14. கவிதை முழுவதும் மடை திறந்த வெள்ளமாய் மளமள வென்றே வார்த்தைகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. ஆஹா!! எல்லாம் ரசிக்க வைத்த வரிகள். சூப்பர் கலக்குங்க..

    ReplyDelete
  16. கவிதைஅருமை ரசிக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  17. பட்டாம் பூச்சி
    உன் உறவா..
    பட்டுக் கன்னம்
    தொட்டுப்போவதேன்.

    அசத்திட்டீங்க சகோதரி. ஒரு வித மெய்சிலிர்ப்பை உணர்ந்தேன் இந்த வரிகளில்...அற்புதம்

    ReplyDelete
  18. துளித்துளியாய் வார்த்தைகளைக் கோர்த்து கவிதை மழையில் நனைய வைத்து விட்டீர்கள் சசிகலா!
    உணர்வுகள் மேலோங்கி நிற்கும் கவிதை!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete