Thursday 24 May 2012

நினைவுகளோடு ..!

என்னோடு நீ ...
சொல்லெறியாத போதெல்லாம்
மனம் கல்லெறி
பட்டதாய்க் காயப்படுகிறது !

வீசும் தென்றலை -விடவும்
அருகிருந்து விசிறி விடும்
உனதன்பு இதமானது ..!

நீ ஓடி ஒளிந்த
மவுன யுத்தத்தில்
உதிரம் சிந்தாமலே
சமாதியாகின்றன என் நினைவுகள் ...!

சுடும் நிஜங்களுக்கு
நடுவே ...
சுகமாய் உன் நினைவு ...!

வார்த்தையின் அழகு
அலங்காரமில்லாமலே
உனை அழகாய்க்காட்டுகிறது !

33 comments:

  1. விடுமுறை முடிஞ்சு வந்தாச்சா... வந்ததும் ஒரு அழகுக் கவிதை. அலங்காரமில்லாமலே அழகாய்க் காட்டும் வார்த்தையழகு. சூப்பர்ப் தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்....
      வந்துட்டேனே ...நட்பின் வரிகளைக் காண .

      Delete
  2. நினைவுகளாலும் உணர்வுகளாலும்
    உணர்சிமிகுந்து கட்டப்பட்ட காதல்கோட்டை
    மிக அழகு சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா வாங்க தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  3. ஹையா... லீவு முடிஞ்சு வந்தாச்சாக்கா... சுவாரஸ்யமாமன வலைச்சர வாரத்துககப்பறம் நீங்க இல்லாம போரடிச்சுது. இப்ப அருமையான காதல் பேசற கவிதையோட வந்திருக்கீங்க. கவிதையில ஐஸ்க்ரீம் குளிர்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நிரூ மா உங்க பின்னூட்டமே எனக்கு குளிர்ச்சியா இருக்கு பா .

      Delete
  4. காதலின் வலியும் சுகமும் கலந்த உணர்வு.காதலின் இனிமை சசி !

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  5. பார்த்துக் கொண்டும்
    பேசிக்கொண்டும்
    இருக்கும்
    நிஜமற்ற அன்பை விட
    நினைவுகளோடு பேசுவதே
    நெஞ்சிற்கு இனிமை சசிகலா.

    கவிதை அருமைங்க.
    நிறைய விசயங்களைச் சொல்கிறது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ சிலருக்கு நினைவுகளோடே காலம் போகும் .

      Delete
  6. அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. அருமையான கவிதை...

    ReplyDelete
  8. //////நீ ஓடி ஒளிந்த
    மவுன யுத்தத்தில்
    உதிரம் சிந்தாமலே
    சமாதியாகின்றன என் நினைவுகள் ...!///////////

    நான் ரசித்த வரிகள்.., அருமையான கவிதை அக்கா ..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தம்பி ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  9. மிகவும் அருமையான நினைவுகளுடன் கவிதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சூப்பர் அக்காஆஆஆஆஆஆஅ ............

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. சுடும் நிஜங்களுக்கு
    நடுவே ...
    சுகமாய் உன் நினைவு ...!

    ரசனையாய் சுகமான கவிதை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. அலங்காரமில்லாமலே அழகாய் ஒரு கவிதை...வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. நினைவுகளோடு வாழ்வது சுகமானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. வீசும் தென்றலை -விடவும்
    அருகிருந்து விசிறி விடும்
    உனதன்பு இதமானது ..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  15. வீசும் தென்றலை -விடவும்
    அருகிருந்து விசிறி விடும்
    உனதன்பு இதமானது ..!//

    அன்பின் ரசிப்பை
    மிக அழகாக்ச் சொல்லும் அருமையான வரிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  16. VERY NICE.. I LIKE VERY MUCH

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  17. சுடும் நிஜங்களுக்கு
    நடுவே ...
    சுகமாய் உன் நினைவு

    நல்ல கவிதை வரிகள்! சுகமான நினைவுகள் மருந்தாகும்!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete