Friday 4 May 2012

காதலித்து கவிதை செய்வீர் !

காதல் பார்வைத்
தொலைந்து போனால்
கவிதைக்கு உயிரில்லை !
என் நாடு , என் வீடு
என் மொழி , என் நட்பு
என் உறவு , என் உலகம்
என்னவள் ,என்னவன்
என்ற எண்ணம்
நமக்குள் வாழ்ந்தால்
வளர்த்து நாம் வளர்வோம் !

காதல் செய்வோம் ...
திகாலைப் பனித்துளியை 
தவனாம் கதிரவனை
சைபாடும் தென்றலை
ரமான மலைமடுவை
 உறக்க மெழுப்பும் பறவைகளை
ன் அளிக்கும் வயல் வெளியை
ழும்பிவிழும்  கடல் அலையை
ற்றமிகு எழில் இசையை
ந்தும் தரும் இயற்கையினை
ளித்தோடும் மேகங்களை
டிப் போகும் நாணயத்தை
ஒளஷதமாம் மானிடரை !

 கள்ள மில்லா மழலைகளை
காவியமான சோலைகளை
ரசிக்க மனமிருந்தால் !
பேதமின்றி பார்க்கின்ற
பார்வைகள் வாழுமெனில்
தானாய் கவிதைவரும்!
காவியங்கள் எழுதவரும்!
ஓவியங்கள் தீட்டவரும் !

பிறப்பென்ன , இறப்பென்ன
வாழ்வென்ன, தாழ்வென்ன
உயிரென்ன , உடலென்ன
பார்வையில் காதலிருப்பின்
எல்லாமே அழகுதான் ....
காதலித்து கவிதை செய்வீர் !

34 comments:

  1. வலைத்தளத்தின் கலரை மாற்றியதற்கு மிக மிக நன்றீ

    ReplyDelete
  2. உங்களின் அழகான வலைத்தளத்தையும் உங்கள் கவிதை போல சேர்த்து காதல் செய்வோம்

    ReplyDelete
  3. அதுசரி... நானும் ரசனையோட வாழ்க்கையையும் நீங்க வரிசைப்படுத்தியிருக்கற விஷயங்களையும் காதலிக்கத் தான் செய்யறேன் தென்றல். ஆனா இந்தக் கவிதை... அது வர மாட்டேங்குதேன்னு நினைக்கறப்பத்தான் அழுகை அழுகையா வருது....

    ReplyDelete
  4. காதலித்து தோற்றுப்போனவர்களுக்கான மாற்றிப் பாதை!
    அழகிய கவிதை!

    ReplyDelete
  5. hi kala avl nice and really super

    ReplyDelete
  6. “பார்வையில் காதலிருப்பின்
    எல்லாமே அழகுதான் ....
    காதலித்து கவிதை செய்வீர் !“

    (அதைத் தாங்க நானும் செய்கிறேன்.)

    கவிதை சூப்பர்ங்க சசிகலா.

    ReplyDelete
  7. உங்கள் வலைப்பதிவில் என் பதிவை இணைக்க முடியவில்லை. அதனாலேயே உங்கள் பதிவுகளை உடனடியாகப் படிக்க முடிவதில்லை.

    இந்தப் பிரட்சனை எனக்கு மட்டுமா?
    மற்றவர்களுக்குமா என்று தெரியவில்லைங்க சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அது என்ன வென்று எனக்கும் புரியவில்லை .

      Delete
  8. பார்வையில் காதலிருப்பின்
    எல்லாமே அழகுதான் ....
    காதலித்து கவிதை செய்வீர் !

    மனமும் பார்வையும் விசாலமானால்
    நல்ல கவிதைகள் தானாக வரும் என்பதைச்
    சொல்லிப் போகும் பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் தொடர் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

      Delete
  9. ஆத்திச்சூடி சாயலில் அசத்தலான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. \\காதல் பார்வைத்
    தொலைந்து போனால்
    கவிதைக்கு உயிரில்லை !\\


    \\பார்வையில் காதலிருப்பின்
    எல்லாமே அழகுதான் ....
    காதலித்து கவிதை செய்வீர் !\\


    முதல் வரியில் துவங்கிய கவிதையின் ஆளுமை கடைசி வரிகள் வரை நிலைநிறுத்தப்பட்டு, மனம் வசீகரிக்கிறது. பாராட்டுகள் தென்றல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ ரசித்து கருத்திட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. காதல் வந்தால் கவிதை தானாக பிறக்கும் அக்கா

    ReplyDelete
    Replies
    1. ///காதல் வந்தால் கவிதை தானாக பிறக்கும் அக்கா//

      அப்ப கல்யாணம் பண்ணிண்ணா என்ன வரும்

      Delete
    2. சகோ வருக வருக தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. ம் ம்.....உண்மைதான் காதல் இருந்தால்.... வரும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. ககவிதையின் ஆரம்பமே அமர்க்களம்..
    நிச்சயம் ஏதாவதொன்றை காதலித்தால் மட்டுமே கவிதை செய்யமுடியும்..சிறப்பு..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. ரெம்ப அருமையான கவிதை சகோ
    உங்களின் ஒவ்வொரு கவிதைகளிலும்
    இயற்கை ,சமூகம் உறவுகள் இவைகளை சார்ந்து
    மிக அழகாக கவிதை படைக்கிறீர்கள்

    உயிரெழுத்து
    அகரவரிசை கவிதை
    ம்ம்ம் அருமை அருமை
    நல்ல சிந்தனை
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  15. Avargal Unmaigal...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. கணேஷ்...
    நீங்கள் சொல்கின்ற கதையே உரைநடைக் கவிதைதான் . ஆகவே வராது என்கிற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது .

    ReplyDelete
  17. கவிப்ரியன்...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. raja66...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. hi sasi avl, great one, salute your kavi sasi avl. all the best sasi avl.

    take care sasi

    ReplyDelete
  20. AROUNA SELVAME...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. இயற்கையைக் காதலித்தால் எப்போதும் கவிதை வரும்!
    நல்ல கவிதை!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  22. kavithai !

    paarvai kaathal thodangum-
    enpaarkal!

    neengal sonna paarvai-
    viththiyaasa paduththiyathi-
    arumai!

    ReplyDelete