Monday 28 May 2012

நேசமாய் சேர்த்தணைத்து...!

அதனதன் வழியில்
பயணம் போன ஐந்தறிவு ஜீவராசிகளை
அழகாய் அள்ளி மடியில்
அமர்த்திக் கொஞ்சிக் கூத்தாடி
உணவூட்டி மகிழ்ந்து
நேசமாய் சேர்த்தணைத்து
போவோர் வருவோர்க்கெல்லாம்
காட்சிப் பொருளாக்கி
பாராட்டி சீராட்டி
பார்த்து மகிழ்ந்து
வீட்டில் ஓர் அங்கமென
வளர்த்து, வாஞ்சையாய்
நோக்கிய கண்கள்
ஒவ்வாமை நோய் பரவும் ,
ஆரோக்கியக் கேடு
எனும் வதந்திகளை நம்பி
அன்பாய் அருகில் வரும்போதெல்லாம்
அடித்து விரட்டி அதற்கோர் வழியைப்பார்
என அரட்டிப் பேசும் மானுடங்கள் !
ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல
ஆங்காங்கே ஆறறிவு மனிதர்க்கும்
இதே நிலை காண் !!

படங்கள் உதவி கூகிள் நன்றி .

32 comments:

  1. இன்றைய நிலையில் ஐந்தறிவு ஜிவன்களே உண்மையான பாசம் காட்டுகின்றது ..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து மிகவும் சரியே தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  2. //அன்பாய் அருகில் வரும்போதெல்லாம்
    அடித்து விரட்டி அதற்கோர் வழியைப்பார்
    என அரட்டிப் பேசும் மானுடங்கள் !
    ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல
    ஆங்காங்கே ஆறறிவு மனிதர்க்கும்
    இதே நிலை காண் !!//

    ''மெய்ச் சொல்''

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  3. பாசமான ஜீவன்கள் என் வீட்டிலும்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. விட்டகதை தொட்டகதை,
    தொடரும்கதை மலரும்கதை,
    அத்தனையும் காலத்தின் முன்,
    புதுக்கதைகளாய் கவிதையாய்.
    மனமில்லா மனிதரிருப்பார்,
    குணமின்றி அவர்வாழ்வார்,
    எல்லோரும் நல்லவரில்லை,
    கெட்டவரும் அனைவருமில்லை,
    கருணை காட்ட வேண்டும்,
    பாதிவழியில் காரணம்தேடி
    கைவிடுதல் மகாபாவமே!
    ஐந்தறிவிக்காய் மட்டுமல்ல,
    ஆறறிவிற்கும் இதுபாடம்.
    எழுதுங்கள்-துயிலெழும்வரை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  5. பிள்ளை போல எண்ணி வளர்த்தவர்கள், பின்னாளில் தொல்லையாய் நினைக்கும் சிறுமையைச் சாடிய உங்கள் கவிதையில் உள்ளது ஈர நெஞ்சம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  6. நேசத்தை
    நிசப்தமாய்
    அழகுற
    படைத்திட்ட
    தங்கைக்கு
    வாழ்த்துக்கள்........

    ReplyDelete
    Replies
    1. அண்ணா வாங்க நலம் நலம் அறிய ஆவல் .

      Delete
  7. கவிதை சிறப்பு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. நிச்சயம் அக்கா ஆறறிவு மனிதரை விட
    ஜந்தறிவு ஜீவன்கள் எவ்வளவு மேல்..

    அருமையான கவி....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. //அன்பாய் அருகில் வரும்போதெல்லாம்
    அடித்து விரட்டி அதற்கோர் வழியைப்பார்
    என அரட்டிப் பேசும் மானுடங்கள் !//

    ரொம்ப அழகான வரிகள் . அருமையான உண்மை...
    மிகவும் உண்மை அக்கா நன்றி உடையது ஐந்தறிவு ஜீவராசிகளே ..........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  10. அருமையான கருத்தைக் கவிதையாக்கித் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  11. மனிதர்களின் இரு முகங்களை அழகாய் கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் சசிகலா! புகைப்படமும் அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  12. உங்கள் கவிதைகள் எப்பவும் அன்பையே பேசுறதைப் பாக்கவே சநதோஷமாம இருக்குக்கா. ஐந்தறிவுப் பிராணிகளுக்குமாக பரிவு காட்டிய கவிதை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  13. வீரிய மிக்க கவிதை. ரசித்துப் படித்தேன் தெனறல். அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  14. “ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல
    ஆங்காங்கே ஆறறிவு மனிதர்க்கும்
    இதே நிலை காண் !!“

    அருமையான கவிதை முடிவு.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  15. அழகு
    கவிதைக்கு
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. மிருகங்களின் அறிவும் அன்பும் மனிதரைத் தாண்டித்தான் இருக்கிறது.அழகான கவிதை சசி !

    ReplyDelete
  17. ஐந்தறிவு, ஆறறிவு ஒப்பீடு நன்று . நல்ல வரிகளிற்கு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. அன்பாய் அருகில் வரும்போதெல்லாம்
    அடித்து விரட்டி அதற்கோர் வழியைப்பார்
    என அரட்டிப் பேசும் மானுடங்கள் !
    ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல
    ஆங்காங்கே ஆறறிவு மனிதர்க்கும்
    இதே நிலை காண் !!//

    கவிதை வரிகள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete